24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!

24 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின், வடகொரியாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது
புதின், கிம் ஜாங் உன்
புதின், கிம் ஜாங் உன்எக்ஸ் தளம்

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், உச்சி மாநாட்டிற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்குச் சென்றிருந்த போது, ரஷ்ய அதிபர் புதினுடன் பரஸ்பர சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வடகொரியாவுக்கு தனது சொந்த செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ரஷ்யா உதவ தயாராக இருக்கிறது என அதிபர் புதின் உறுதியளித்ததாகவும், இரு நாட்டுத் தலைவர்களும் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்களை வழங்குவது குறித்து கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்க: திடீரென மோடி கையை இழுத்த நிதிஷ்குமார்.. ஷாக் ஆன பாதுகாவலர்கள்.. நடந்தது என்ன? #ViralVideo

புதின், கிம் ஜாங் உன்
ரஷ்யாவில் புதினுடன் சந்திப்பு; வடகொரியாவில் ஏவுகணை சோதனை: கிம் ஜாங் உன்னின் செயலால் உலகநாடுகள் ஷாக்!

இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின், வடகொரியாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. முறையான சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு அதிபர்களும் ரஷ்யா, வடகொரியா இடையிலான விரிவான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாசாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியாவும் ரஷ்யாவும் ஏற்கெனவே ஒருவரையொருவர் அதிகம் சார்ந்துள்ள நிலையில், இரு நாடுகளும் அமெரிக்காவை எதிர்த்து வருகின்றன.

இதனால், வழக்கமான ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்களுக்கு அப்பால் இந்த முறை எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகள் அதிக வலிமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஈடாக வட கொரியா உணவு, எரிபொருள் தேவையை நிவர்த்திசெய்யும் எனவும், விண்வெளி தொழில்நுட்பத்தில் வடகொரியா ரஷ்யாவின் உதவியை கோரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை. என்றாலும், 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் வடகொரியாவுக்கு சென்றிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

இதையும் படிக்க: INDvSA|இந்தியாவுக்குப் பதிலடி.. இருவர் சதம்; கடைசி வரை திக் திக்.. நூலிழையில் தென்னாப்ரிக்கா தோல்வி!

புதின், கிம் ஜாங் உன்
ரஷ்யாவிற்கு ஆயுத உதவிகள் வழங்க எங்களுக்கு உரிமை உள்ளது - அமெரிக்காவுக்கு வடகொரியா பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com