விராட் கோலி உயிருக்கு அச்சுறுத்தலா? பெங்களூரு அணி பயிற்சியை ரத்து செய்ததன் காரணம் என்ன?

இன்று அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. முன்னதாக இரு அணிகளும் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டன.
விராட் கோலி
விராட் கோலிட்விட்டர்

ரத்து செய்யப்பட்ட பயிற்சி

Qualifier 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று மோதிய நிலையில், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பயிற்சி மேற்கொள்ள குஜராத் கல்லூரி மைதானம் கொடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து பெங்களூரு அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமான காரணம் எதையும் தெரிவிக்காவிட்டாலும் கூட, விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாகத்தான் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.

அதேசமயத்தில் கடுமையான வெப்பச்சலனம் காரணமாகத்தான் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. பயிற்சியை விட வீரர்களின் ஆரோக்கியம் முக்கியம் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, பெங்காலி நாளிதழான ஆனந்தபஜார் பத்திரிக்காவின் செய்தியின்படி, “பெங்களூரு அணியின் பயிற்சி மற்றும் இரு அணிகளுக்கான செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் விராட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்தான் முக்கியக் காரணம்” என தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் குஜராத் காவல்துறை எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி
“மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புகள்

இந்த விவகாரம் (அச்சுறுத்தல்) தொடர்பாக காவல்துறை இரு அணிகளுக்கும் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்துதான் பெங்களூரு அணி தனது பயிற்சித்திட்டத்தை ரத்து செய்துள்ளது. பெங்களூரு அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு வெளியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பெங்களூரு அணியினருக்கு மட்டும் தனி நுழைவு அமைக்கப்பட்டுள்ளது. அதை ஹோட்டலில் உள்ள மற்ற விருந்தினர்கள் யாரும் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் கூட ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

Virat Kohli
Virat Kohlipt desk

ராஜஸ்தான் அணி தங்களது வழக்கமான பயிற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனாலும், மூன்று போலீஸ் கான்வாய்கள் மூலம் ராஜஸ்தான் அணியினர் பயிற்சி மேற்கொள்ள பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தாமதமாக வந்த நிலையில், அஷ்வின், சாஹல் மற்றும் பராங் போன்றோர் அறையிலேயே தங்க முடிவு செய்துள்ளனர். பயிற்சியில் ஈடுபட்ட ராஜஸ்தான் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விராட் கோலி
தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?

பயிற்சி ரத்து செய்யப்பட்டது ஏன்?

இதற்கிடையே நேற்று இரவு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் காவல்துறை அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து குஜராத் தீவிரவாத தடுப்புப் படை கைது செய்தது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் மறைவிடத்தையும் சோதனை செய்த பின்னர் ஆயுதங்கள், சந்தேகத்திற்கிடமான வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Virat Kohli
Virat KohliTwitter

இதுதொடர் காவல்துறை அதிகாரி விஜய் சிங்க ஜ்வாலா கூறுகையில், “விராட்கோலி அகமதாபாத்திற்கு வந்தபிறகே கைது செய்யப்பட்டவர்கள் பற்றி அவர் அறிந்தார். அவர் இந்த தேசத்தின் பொக்கிஷம். அவரது பாதுகாப்பே எங்களது அதிகபட்ச முன்னுரிமை” என தெரிவித்துள்ளார். மேலும், “இந்த விவகாரத்தில் ஆர்சிபி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பயிற்சி அமர்வு இருக்காது என தெரிவித்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களது பயிற்சியில் எந்த பிரச்சனையும் இல்லை” என தெரிவித்தார்.

விராட் கோலி
India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!

இதற்கு மத்தியில்தான் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அனில் படேல் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை. நகரின் நிலவும் வெப்பத்தின் காரணமாகவே ஆர்சிபி தனது பயிற்சி அமர்வை புறக்கணித்தது” என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதும், அதுதொடர்பான செய்திகள் வருவதும் குறிப்பிடத்தக்கது. இது பல்வேறு யூகங்களும் சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. இதற்கிடையேதான் ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் விளையாடி வருகிறது.

விராட் கோலி
“RR vs RCB போட்டி ஒருபக்க ஆட்டமாக இருக்கும் ; ராஜஸ்தானுக்கு பெரிய சிக்கல்!” - கவாஸ்கர் எச்சரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com