நேருக்கு நேர்... தோனிக்கு கடைசிப் போட்டியா? பதற்றத்தில் பெங்களூரு, சென்னை ரசிகர்கள்

சென்னை மற்றும் பெங்களூரு அணிக்கு இடையேயான முக்கியமான போட்டி என்பதால் பரபரப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
IPL 2024 : பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை
IPL 2024 : பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சைpt web

சென்னை, பெங்களூரு கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பு என்பது விண்வெளிவரைகூட கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வாழ்வா சாவா போட்டி என்பதுபோல்தான் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

இதிலே “குறுக்கே இந்த கௌசிக் வந்தா?” என்பதுபோல் மழையும் வருவேனா? மாட்டேனா? என காத்திருக்கிறது. அவரும் பாவம்தான். மழை வேண்டும் என கேட்கும் மக்களின் வேண்டுதலை நிறைவேற்றுவாரா? மழை வரக்கூடாது என வேண்டும் மக்களின் வேண்டுதலை நிறைவேற்றுவாரா? இதைத்தாண்டி தோனி கோலி விளையாடும் கடைசிப் போட்டி... சென்னை தோற்றால் தோனிக்கு கடைசிப் போட்டி என எமோசனல் டச் வேறு.. அப்பப்பா... போதும்ப்பா?

தோனி, கோலி
தோனி, கோலிtwitter

ப்ளேஆஃப் மூன்று இடங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள ஒரு இடத்திற்குத்தான் இந்த யுத்தம்.. முதலில் தட்டுத்தடுமாறி விளையாடிக்கொண்டிருந்த பெங்களூரு அணி கடைசி ஐந்து போட்டிகளில் மாஸ் வெற்றி பெற்று கெத்தாக களத்தில் நிற்கிறது. அதுவும் பெங்களூரு; சொந்த மைதானம். ஏகப்பட்ட சாதனைகள்.

IPL 2024 : பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை
CSK Vs RCB| ”தோனியும் நானும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்” - விராட் கோலி உருக்கம்!

அதேபோல் பெங்களூரு மைதானத்தில் சென்னை வீரர்கள் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அத்தனை பின்னோக்கி செல்ல வேண்டாம். சமீபத்தில் சென்னை மும்பை அணிகள் மோதிய போட்டி கூட பெங்களூருவில்தான் நடந்தது.

முதலில் பேட் செய்த சென்னை 206 ரன்களைக் குவித்தது. இறுதி 4 பந்துகள் மட்டுமே இருக்கும்போது களத்திற்கு வருகிறார் தோனி. பந்து வீசுவது மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா. தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் பறந்தது. 4 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார் தோனி. அந்தப் போட்டியில் சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன சென்னை மற்றும் பெங்களூரு அணிகள். இதில் சென்னை 21 முறையும் பெங்களூரு 10 முறையும் வென்றுள்ளன. இதிலும் கடைசி 6 போட்டிகளில் 5ல் சென்னையும், குறிப்பாக கடைசி மூன்று போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது.

IPL 2024 : பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை
INDvsNZ | உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண ரஜினிகாந்த் மும்பை பயணம்!

பெங்களூரு அணியில் வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டோப்லி உலகக்கோப்பை முன் தயாரிப்பிற்காக தங்களது சொந்த நாட்டிற்கு சென்றுவிட்டனர். மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் விளையாடுகிறார். பெங்களூரு அணியின் யஷ் தயாள் பவர் ப்ளேவில் சிறப்பாக பந்துவீசுகிறார். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் மற்றும் ரச்சினுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.

சென்னை அணியில் மொயின் அலியும் தனது நாட்டிற்கு உலகக்கோப்பை முன் தயாரிப்பிற்காக சென்றுவிட்டார். பெங்களூரு அணிக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக பந்துவீசியுள்ளார். ஆறுமுறை மேக்ஸ்வெல்லை வெளியேற்றியுள்ளார். அதேபோல் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக்கை தலா மூன்று முறை அவுட்டாக்கியுள்ளார். ஷிவம் துபே பெங்களூருக்கு எதிராக என்றால், பழைய கோபமோ என்னவோ தெரியவில்லை. பந்துகளை பவுண்டரிகக்குத்தான் விரட்டுகிறார்.

எப்படி இருந்தாலும் முக்கியமான போட்டி... பதற்றம் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை....

IPL 2024 : பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை
”தோனிக்கான விசில் சத்தம் என் காதுகளையே வலிக்க செய்தது” - நேரில் பார்த்த ஆஸி. வீராங்கனை உருக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com