”தோனிக்கான விசில் சத்தம் என் காதுகளையே வலிக்க செய்தது” - நேரில் பார்த்த ஆஸி. வீராங்கனை உருக்கம்!

சென்னையில் தல தோனிக்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்த்து ஆஸ்திரேலிய வீராங்கனை அமண்டா வெலிங்டன் ஆச்சர்யப்பட்டுப் போய் உள்ளார்.
அமண்டா வெலிங்டன், தோனி
அமண்டா வெலிங்டன், தோனிட்விட்டர்

நடப்பு ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுப் பட்டியலில் முதல் 3 இடங்களுக்கு அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், 4வது இடத்துக்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

தோனி
தோனிட்விட்டர்

நாளை நடைபெற இருக்கும் அவ்வணிகளுக்கான கடைசி லீக் போட்டியில் இதன் முடிவு தெரிந்துவிடும். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய பிறகு, ருத்ராஜ் கெய்க்வாட் அணிக்கு தலைமை தாங்கிவருகிறார். எனினும், தோனி ஒரு விக்கெட் கீப்பிங் பேட்டராய் செயல்பட்டு வருகிறார். அதேவேளையில், கடைசி நேரத்தில் மட்டும் அவர் களமிறங்குவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையும் படிக்க: CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!

அமண்டா வெலிங்டன், தோனி
IPL |அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர்.. சேட்டையோடு மாஸ் காட்டிய தல ‘தோனி’ - தோல்வியை மறந்த ஃபேன்ஸ்!

கடந்த சீசனில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு தோனி, அறுவைசிகிச்சை மேற்கொண்டார். அதன் வலி தற்போதும் இருப்பதாலேயே பேட்டிங்கின்போது 2 ரன்கள் ஓடுவதற்கு சிரமப்பட்டதாக சென்னை அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தோனி அதிலிருந்து மீண்டிருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆயினும், கடைசி 2 பந்துகளாக இருந்தாலும் தோனி விளையாடுவதைப் பார்க்கவே ரசிகர் கூட்டம் மைதானத்தில் கூடியிருக்கிறது. அவர் இறங்கும்போது, ‘தோனி... தோனி’ என ரசிகர்கள் உற்சாகத்தில் அழைப்பதும், விசில் மற்றும் செல்போன் மூலம் டார்ச் அடிப்பதும் பெருகிவருகிறது. தோனிக்கான இந்த வரவேற்பைப் பார்த்து ஆஸ்திரேலிய வீராங்கனை அமண்டா வெலிங்டன் ஆச்சர்யப்பட்டுப் போய் உள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “தோனியின் மேலுள்ள ரசிகர்களின் அன்பு வெறித்தனமானது. சென்னையில் தோனி விளையாடியதைப் பார்த்தது ஓர் அசாத்திய அனுபவம். அந்தப் போட்டிக்குப் பின்னர் கொஞ்ச நேரத்திற்கு மீண்டும் விசில் சத்தத்தைக் கேட்க விருப்பமில்லாத அளவிற்கு ரசிகர்களின் சத்தம் என்னுடைய காதுகளை வலிக்கச் செய்துவிட்டன” என அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: என்னை நீங்கள் பார்க்கவே முடியாது” - ஓய்வு குறித்து விராட் கோலி!

அமண்டா வெலிங்டன், தோனி
“தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்”- நம்பிக்கை கொடுக்கும் CSK பேட்டிங் கோச்; ரசிகர்கள் குஷி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com