\
IND vs NZ காண மும்பை செல்லும் ரஜினி
IND vs NZ காண மும்பை செல்லும் ரஜினிட்விட்டர்

INDvsNZ | உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண ரஜினிகாந்த் மும்பை பயணம்!

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி இன்று மோத உள்ளது.
Published on

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி இன்று மோத உள்ள நிலையில், அதை நேரில் கண்டுகளிக்க மைதானத்தில் ரசிகர்கள் கூட்டத்துடன் குறிப்பிடத்தக்க அளவிலான பிரபலங்களும் இணைய உள்ளனர்.

IND vs NZ காண மும்பை செல்லும் ரஜினி
உலகக்கோப்பை | இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்?
INDvNZ
INDvNZICC

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த்தும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடும் அரையிறுதிப் போட்டியை நேரில் காண உள்ளார். மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியைக் காண அவர் நேற்று சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டுச் சென்றார்.

இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியைக் காண மும்பை செல்வதாக ரஜினிகாந்த் கூறினார்.

அமிதாப்பச்சன் உள்ளிட்ட ஹிந்தித் திரைப்பிரபலங்களும் வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியை நேரில் காண வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ காண மும்பை செல்லும் ரஜினி
“ஃபேஷன் ஷோவைக்கூட நடத்தினோம்”- அணியை வலுப்படுத்த செய்த நிகழ்வுகளை பகிர்ந்த ரோகித்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com