பாகிஸ்தான் | கார் விபத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் காயம்!

பாகிஸ்தான் மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் கார் விபத்தில் சிக்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
pakistan players
pakistan playerstwitter

உலகம் முழுவதும் ஆடவர் கிரிக்கெட் அணியைப் போன்று மகளிர் அணியும் பல போட்டிகளில் வாகைசூடி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் கார் விபத்தில் சிக்கி உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

பாகிஸ்தான் மகளிர் அணி, மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதைத் தொடர்ந்து 5 டி20 போட்டிகளிலும் பங்கேற்று அடுத்தடுத்து விளையாட இருக்கிறது. இதற்கான பயிற்சி முகாம் ஏப்ரல் 18 அன்று தொடங்க இருக்கிறது. இந்த தொடருக்கான பட்டியலில் பாகிஸ்தான் வீராங்கனைகளான பிஸ்மா மரூப் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குலாம் பாத்திமா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

pakistan players
’தல’ முதல் அடி வர தலைவரு அலப்பற.. களத்தில் கர்ஜித்த தோனி! தரமான கம்பேக் கொடுத்த Pant! DC வெற்றி!

இந்த நிலையில் இவர்கள் இருவரும் பயணித்த கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் அவர்கள் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று (ஏப்ரல் 5) ஏற்பட்டதாக தெரியப்படுத்தியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விபத்து பற்றிய முழு விவரங்களை தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க: "இது நடந்திருந்தா ரோகித்தின் MI கேப்டன்ஷிப்பை தூக்கி இருக்க மாட்டாங்க" - சித்து சொன்ன முக்கிய காரணம்

pakistan players
பாகிஸ்தான் திரைப்பட நடிகையை மணந்தார் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com