’தல’ முதல் அடி வர தலைவரு அலப்பற.. களத்தில் கர்ஜித்த தோனி! தரமான கம்பேக் கொடுத்த Pant! DC வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ்
சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ்cricinfo

ஐபிஎல் போட்டிகளில் இறுதி ஓவர்கள், அதை எதிர்கொள்ள களத்தில் தோனி நிற்கிறார் என்றாலே அதற்கென்று தனி ரசிகர் பட்டாளாமே இருக்கின்றனர். ஒரே போட்டியில் ”தல தோனியின் பழைய பெஸ்ட் ஃபினிசிங் ஆட்டம், ரிஷப் பண்ட்டின் ஒற்றைக் கை சிக்சர், பதிரானாவின் Double யார்க்கர், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சர்வதேச சதமடித்த இடத்தில் தோனியின் இதயப்பூர்வமான கடைசி போட்டி” என இன்றைய ஐபிஎல் போட்டியானது ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட தீராதளவு மிகப்பெரிய விருந்தை வைத்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது டெல்லி கேபிடல்ஸ் அணி. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வுசெய்தார்.

சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ்
அம்பயருடன் கத்திய பாண்டிங் - கங்குலி.. பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி! அஸ்வின் அதிரடியால் RR வெற்றி!

பேட்டிங்கில் மிரட்டிய ரிஷப் பண்ட்!

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு நிம்மதியில்லாத இரவை கொடுக்க ஆயத்தமாகினர். ஒவ்வொரு சிஎஸ்கே பவுலர்களையும் வெளுத்துவாங்கிய இந்த ஜோடி, 9 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என மாறிமாறி பறக்கவிட்டு 9 ஓவர்களுக்கு 90 ரன்களை எடுத்துவந்து அசத்தியது.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

முதல் விக்கெட்டை எடுத்துவர முடியாமல் ஒவ்வொரு பவுலரும் தடுமாற, இப்படியே போனா 200 ரன்களை டெல்லி எளிதாக எட்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது தான் களத்தில் அந்த மேஜிக் நிகழ்ந்தது. முஸ்தஃபிசூர் வீசிய 10வது ஓவரில் ரிவர்ஸ் ஷாட் ஆடிய டேவிட் வார்னர் 3rd Man திசையில் பந்தை தூக்கியடித்தார், ஆனால் ஃபீல்டிங்கில் இருந்த பதிரானா காற்றில் பறவையை போல் பறந்து ஒரு அசாத்திய கேட்ச்சை எடுத்தார். தரையில் விழுந்த பிறகு தான் அவருக்கே அது கேட்ச் என்று தெரிந்தது, அதைப்பார்த்த தல தோனி நம்பமுடியாத ஒரு ரியாக்சனை கொடுத்தார். பதிரானாவின் மேஜிக்கால் டேவிட் வார்னர் 52 ரன்னில் வெளியேற, தொடர்ந்து பிரித்வி ஷாவும் 43 ரன்னில் நடையை கட்டினார்.

மிட்செல் மார்ஸ்
மிட்செல் மார்ஸ்

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும், களத்திற்கு வந்த மிட்செல் மார்ஸ் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு ரன்ரேட்டை 10-க்கு கீழே குறையாமல் பார்த்துக்கொண்டார். ஆனால் சரியான நேரத்தில் பந்துவீச வந்த பதிரானா, ஒரே ஓவரில் மிட்செல் மார்ஸ் மற்றும் ஸ்டப்ஸ் இருவரின் ஸ்டம்புகளையும் இரண்டு தரமான யார்க்கர் மூலம் தகர்த்தெறிந்தார். பதிரானாவின் ஒரு அபாரமான ஓவருக்கு பிறகு ரன்னை எடுத்துவரமுடியாமல் டெல்லி அணி தடுமாறியது. கடைசி நம்பிக்கையாக ரிஷப் பண்ட் மட்டுமே களத்தில் இருந்தார், ஒரு மிகப்பெரிய அறுவைசிகிச்சைக்கு பிறகு வந்திருக்கும் அவரால் பழைய அதிரடிக்கு திரும்ப முடியமா என்ற குழப்பம் நீடித்தது.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

ஆனால் குழப்பமே வேண்டாம் என 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு, மைதானத்தை சுற்றிக்காட்டிய ரிஷப் பண்ட், தன்னுடைய டிரேட் மார்க் ஷாட்டான ஒற்றைக்கை சிக்சரை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஒரு-வருடத்திற்கு பிறகு கிரிக்கெட் விளையாடும் ரிஷப் பண்ட், தன்னுடைய தரமான கம்பேக் மூலம் 31 பந்துகளில் அரைசதமடித்து அசத்த, 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ்
'What a Catch'! காற்றில் பறந்த மதிஷா பதிரானா! நம்பமுடியாத ரியாக்சன் கொடுத்த தோனி!

போராடிய அஜிங்கியா ரஹானே!

192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு, தங்களுடைய தரமான பந்துவீச்சு மூலம் அதிர்ச்சி கொடுத்தனர் டெல்லி பவுலர்கள். முதலிரண்டு ஓவரிலேயே ருதுராஜை 1 ரன்னிலும், ரச்சின் ரவிந்திராவை 2 ரன்னிலும் வெளியேற்றிய கலீல் அகமது சிஎஸ்கே ரசிகர்களின் தலைமேல் இடியை இறக்கினார். 7 ரன்களுக்கே 2 விக்கெட்டுகள் என தடுமாறிய சென்னை அணியை மீட்டுவர அஜிங்கியா ரஹானே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் போராடினர்.

கலீல் அகமது
கலீல் அகமது

மிட்செலுக்கு சரியாக பேட்டில் படாத நிலையில், பொறுப்பை தனதாக்கி கொண்ட ரஹானே 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் பறக்கவிட, டேரில் மிட்செல்லும் 2 சிக்சர்களை பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார். ஆனால் போட்டிக்கு உயிர் கொடுத்த இந்த ஜோடியை, அதிக நேரம் நிலைக்க விடாத டெல்லி பவுலர்கள் மிட்செல்லை 34 ரன்னிலும், ரஹானேவை 45 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டனர்.

ரஹானே
ரஹானே

ரஹானேவை வெளியேற்றிய அடுத்தபந்தில் சமீர் ரிஸ்வியை 0 ரன்னில் பெவிலியன் அனுப்பிய முகேஷ் குமார், ஒரேஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்துவந்து போட்டியை தலைகீழாக திருப்பினார். இந்தப்போட்டியில் 17 பந்துகளில் 18 ரன்களை அடித்த சிவம் துபேவுக்கு, பேட்டில் படாத நிலையில் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தபிறகு, தல தோனியின் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைத்தது. பேட்டிங் செய்ய தோனி களத்திற்கு வரும் போது 128 டெசிபல் என சத்தத்தால் அதிரவிட்ட ரசிகர்கள், இது விசாகப்பட்டினமா இல்லை சேப்பாக்கமா என்ற கேள்வியை எழவைத்தனர்.

சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ்
SL vs BAN: ‘இவங்க இன்னும் திருந்தல மாமா..’ மோசமான DRS ரிவியூ எடுத்த வங்கதேசம்! சிரிக்கும் ரசிகர்கள்!

இது தோனி ஸ்பெசல்!

வந்த முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசிய தோனி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். ஆனால் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட எம்எஸ் தோனி கடைசி 4 ஓவர்களுக்கு ரசிகர்களை சீட்டில் உட்காரவே அனுமதிக்கவில்லை. ஒற்றை கையில் சிக்சர், யார்க்கர் லெந்த் டெலிவரியில் சிக்சர் என பழைய விண்டேஜ் தோனியாகவே மிரட்டிய தோனி டெல்லி பவுலர்களுக்கு பயத்தை காட்டினார்.

தோனி
தோனி

16 பந்துகளில் 231 ஸ்டிரைக்ரேட்டில் 37 ரன்களை குவித்த தோனி, தோத்தாலும் பரவால்ல ”இன்னைக்கு இதுபோதும் அடுத்த 4 மேட்ச்க்கு தேறும்” என்ற உணர்வை சிஎஸ்கே ரசிகர்களுக்கு வழங்கினார். தல தோனி தரிசனம் கிடைத்ததில் ஹேப்பி அண்ணாச்சி என்று ரசிகர்கள் இருந்தாலும், சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் கலக்கிய டெல்லி அணியை ரிஷப் பண்ட் அற்புதமாக வழிநடத்தினார். ஆட்டநாயகனாக கலீல் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தோனி
தோனி

2005-ம் ஆண்டு இதே விசாகப்பட்டினம் மைதானத்தில் தான் தோனி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்துவந்தார். எங்கு அவருடைய கிரிக்கெட் பயணம் உண்மையில் ஆரம்பித்ததோ, அதே விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று தன்னுடைய கடைசி போட்டியை தோனி விளையாடினார். இனி இந்த மைதானத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், கிரவுண்ட் ஸ்டாஃப்கள் விருப்பத்திற்காக அனைவருடனும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். டெல்லியின் இளம்வீரர்கள் அனைவருடனும் அனுபவ வார்த்தைகளை பகிர்ந்துகொண்ட தோனி, அடுத்த தலைமுறைக்கு உத்வேகமாக திகழ்ந்தார்.

தோனி முதல் சர்வதேச சதம்
தோனி முதல் சர்வதேச சதம்

டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது, ஒரு வெற்றியை கூட பதிவுசெய்யாத அணியாக வலம்வரும் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ்
”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்! CSK or RCB-க்கு செல்ல வாய்ப்பு? முக்கிய தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com