பாகிஸ்தான் திரைப்பட நடிகையை மணந்தார் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்!

திரைப்பட நடிகை சனா ஜாவேத்தை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மணந்துள்ளார்.
சோயிப் மாலிக் திருமணம்
சோயிப் மாலிக் திருமணம்pt web

டென்னிஸ் உலகில் சிறுவயது முதலே தடம்படித்து எண்ணற்ற சாதனைகளை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தவர் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா. இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பெரும் விவாதப்பொருளாக மாறியபோதும், சானியா இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார். சோயிப் மாலிக்கும் பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், சானியா மற்றும சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. எனினும், இதுகுறித்து இருதரப்பினரும் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. ஆனால், சோயிப் மாலிக்குடன் இருக்கும் புகைப்படங்களை மட்டும், தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார்.

முன்னதாக, சோயிப் மாலிக்கும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வைத்திருந்த நீண்டகால பதிவான ‘ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்’ என்பதைக் கடந்த ஆண்டு நீக்கியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சோயிப் மாலிக் பிரபல பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் சோயிப் மாலிக் சனா ஜாவேத்தின் பிறந்த நாளின் போது அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். சனா ஜாவேத்தை டேக் செய்திருந்த அவர், "Happy Birthday Buddy" என குறிப்பிட்டு இருந்தார். அப்போதே சோயிப் மாலிக் மற்றும் சனா ஜாவேத் இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், இன்று சனா ஜாவேத்தை சோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்பதிகள் பகிர்ந்துள்ளனர். திருமணம் முடிந்துள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது ஐடி பெயரையும் சனா ஜாவேத் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனா ஜாவேத் ஒரு மாடலாக தனது வாழ்வை தொடங்கியவர். 2012 ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானார். ‘பியாரே அப்சல்’ அவருக்கு பிரபலமான பெயரை மக்களிடையே ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com