கோப்பைக்கான 16 வருட போராட்டம்.. கோலி முதலிய 7 RCB கேப்டன்களால் சூட முடியாத மகுடம்! சூடுவாரா மந்தனா?

2024 மகளிர் ஐபிஎல் தொடரின் நாக்அவுட் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை வீழ்த்திய RCB அணி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டி அசத்தியுள்ளது.
RCB Team
RCB TeamCricinfo

2024 மகளிர் ஐபிஎல் தொடரானது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்களுடன் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. நாளை சூப்பர் சண்டேவில் நடைபெறவிருக்கும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

பரபரப்பான எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட RCB அணி, இறுதி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு த்ரில்லிங் வெற்றியை பதிவுசெய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

RCB Team
”ஷூ வாங்க கூட காசில்லாத போது அதிகம் உதவினார்”.. கடைசி போட்டியில் விளையாடும் குல்கர்னி பற்றி ஷர்துல்!

கோப்பைக்கும் RCB அணிக்கும் இடையேயான பிரேக்கப் காதல்!

2008ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி இருக்கும் உலகத்தின் சிறந்த டி20 லீக்கான IPL-ல் 4 அணிகள் மட்டுமே இதுவரை ஆளுமை செலுத்திய அணியாக இருந்துவந்துள்ளன. அதில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே, 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸை தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் 8 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணியாக ஆர்சிபி அணியும் இருக்கின்றது. அதனை தொடர்ந்து 4வது இடத்தில் 7 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இருக்கின்றது.

Rahul Dravid
Rahul Dravid

இதில் சோகம் என்னவென்றால் இந்த 4 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கோப்பைகள், மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஐபிஎல் கோப்பைகள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ஐபிஎல் கோப்பைகள் என தங்களுடைய ஆளுமை மற்றும் பலத்திற்கு ஏற்ப கோப்பைகளை வென்று குவித்துள்ளன.

anil kumble
anil kumble

ஆனால் RCB அணியை பொறுத்தமட்டில் மட்டும் இன்னும் கோப்பையானது எட்டாக்கனியாகவே இருந்துவந்துள்ளது. 2016 ஐபிஎல் கோப்பை இறுதிப்போட்டியில் 208 ரன்களை துரத்திய விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, 10.3 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அந்த இடத்திலிருந்து ஒரு அணி கோப்பையை நழுவவிட்டது என்றால் என்ன சொல்வது. ஆர்சிபி அணிக்கும் ஐபிஎல் கோப்பைக்கான காதல் என்பது காதல்முறிவாகவே இன்று வரை அமைந்துள்ளது.

kohli - vettori
kohli - vettori

2009 (கேப்டன்: அனில் கும்ப்ளே),

2011 (கேப்டன்: டேனியல் விட்டோரி),

2016 (கேப்டன்: விராட் கோலி) என மூன்று ஐபிஎல் தொடர்கள் மற்றும் 2011 (கேப்டன்: டேனியல் விட்டோரி) சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப்போட்டிவரை 4 முறை முன்னேறிய ஆர்சிபி அணி 4 முறையும் கோப்பை வெல்லாமல் தோல்வியையே தழுவியது.

RCB Team
'6 விக் + 40 ரன்கள்'-கலக்கிப்போட்ட எல்லிஸ் பெர்ரி! முதல்முறையாக Playoff சுற்றுக்கு தகுதிபெற்றது RCB!

7 கேப்டனால் முடியாததை முடிப்பாரா ஸ்மிரிதி மந்தனா!

ஐபிஎல் தொடரில் 16 வருடங்களாக கோப்பை வெல்லாமல் இருந்து வரும் ஆர்சிபி அணியை, ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் விட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன் மற்றும் ஃபேஃப் டூபிளெசிஸ் முதலிய 7 கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர். இதில் அதிக போட்டிகளில் விராட் கோலி, அனில் கும்ப்ளே, டேனியல் விட்டோரி மற்றும் ராகுல் டிராவிட் 3 கேப்டன்கள். இப்படி பல கேப்டன்கள் மாறிய போதும் ஆர்சிபி அணியால் கோப்பை வெல்லமுடியவில்லை.

இந்நிலையில் முதல்முறையாக மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றிருக்கும் ஸ்மிர்தி மந்தனா, 7 கேப்டன்களால் வெல்லமுடியாததை வென்று காட்டுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 2024 மகளிர் ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே சிறப்பாக செயல்பட்டு வரும் ஆர்சிபி அணியை புகழ்ந்தும், நேரடியாக மைதானத்திற்கே சென்று ஆதரவளித்து வரும் ரசிகர்கள், ”போறப்போக்க பார்த்தா மகளிர் ஆர்சிபி அணி ஆண்கள் அணி கோப்பை வெல்வதற்கு முன்பே வென்றுவிடுவார்கள் போல” என சிலாகித்து வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் மகளிர் ஆர்சிபி அணி வீரர்கள் சிறந்த ஃபார்மிற்கு வந்துள்ளனர். டாஸ் வென்று சேஸிங்கை தேர்வுசெய்யாமல் ஃபீல்டிங்கை தேர்வுசெய்த ஸ்மிரிதி மந்தனா, பவுலர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மும்பை அணிக்கு எதிரான நாக்அவுட் போட்டி வெளிப்படுத்தியுள்ளது. எப்போதும் ரன்களை வாரிவழங்கும் அணி என்ற ஆர்சிபி அணியின் மோசமான முத்திரையை 136 ரன்களை கட்டுப்படுத்தி ஆர்சிபி மகளிர் அணி உடைத்துள்ளது. உடன் “ஸ்மிரிதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, ஸ்ரேயங்கா பாட்டீல், ரிச்சா கோஸ், ஷோபி டெவைன், சோஃபி மோலினக்ஸ்” முதலிய வீரர்கள் ஃபார்மிற்கு திரும்பியதுடன் 'ஜார்ஜியா வேர்ஹாம்' ஃபினிசிங் ரோலில் சிறப்பாக விளையாடுவது ஆர்சிபி அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

முக்கியமான போட்டிகளில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்காத நிலையில், ஸ்மிரிதி மந்தனா, சோபி டெவைன் முதலிய வீரர்கள் பெரிய ரன்களை அடிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி லீக்கில் நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், இறுதிப்போட்டி சுவாரசியமானதாக இருக்கப்போகிறது. ஸ்மிரிதி மந்தனா முதல் ஆர்சிபி கேப்டனாக கோப்பையை கையில் ஏந்துவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!

RCB Team
“502 ரன்கள் + 29 விக்கெட்டுகள்”! பாராட்டப்பட வேண்டிய வீரர்! மும்பையின் ரஞ்சி ஹீரோ தனுஷ் கோட்டியன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com