”ஷூ வாங்க கூட காசில்லாத போது அதிகம் உதவினார்”.. கடைசி போட்டியில் விளையாடும் குல்கர்னி பற்றி ஷர்துல்!

இந்திய முன்னாள் வீரரும் மும்பையை சேர்ந்த கிரிக்கெட்டருமான தவால் குல்கர்னி தன்னுடைய கடைசி முதல்தர போட்டியில் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவதால், சக வீரர்கள் அனைவரும் அவரை பாராட்டி பேசினர்.
ஷர்துல் - குல்கர்னி
ஷர்துல் - குல்கர்னிX

எந்தவொரு கிரிக்கெட்டருக்கும் கோப்பையுடன் விடைபெறுவது தங்கள் வாழ்வில் மிகச்சிறந்த தருணமாக இருக்கும் இல்லையா? அதேநேரத்தில் தங்கள் சிறுவயதில் முளைத்த முதல் கனவான ரஞ்சிக்கோப்பையை கையில் ஏந்தி விடைபெறுவதெல்லாம் லட்சத்தில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரருக்கு தான் கிடைக்கும். அப்படி ஒரு சிறந்த தருணத்தோடு விடைபெறவிருக்கிறார் முன்னாள் இந்திய வீரரான தவால் குல்கர்னி.

விதர்பா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான 2024 ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில், மும்பை அணியில் விளையாடிவரும் குல்கர்னி தன்னுடைய அனுபவத்தால் அணிக்கு சிறந்த பங்காற்றியுள்ளார். இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்கர்னி, அதர்வா தைதேவை 23 ரன்கள், அமன் மொகதேவை 8 ரன்கள் மற்றும் கருண் நாயர் 0 ரன்னில் வெளியேற்றி விதர்பா அணியை 105 ரன்களில் சுருட்டினார்.

தவால் குல்கர்னி
தவால் குல்கர்னி

இந்நிலையில் 260 ரன்கள் முன்னிலையில் கோப்பையை வெல்ல சிறந்த இடத்தில் இருக்கும் மும்பை அணி வீரர்கள், தங்களுடைய மூத்த வீரரான தவால் குல்கர்னிக்கு தங்களுடைய வாழ்த்துகளையும் மரியாதைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

ஷர்துல் - குல்கர்னி
”CSK அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும்” Dhoni-யின் புதிய ரோலை தொடர்ந்து முன்.CSK வீரர் விருப்பம்!

என்னுடைய ஆரம்ப காலத்தில் நிறைய உதவிகளை வழங்கினார்!

தவால் குல்கர்னி குறித்து பேசிய ஷர்துல் தாக்கூர் “இந்த தருணம் எனக்கும் அவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமானது” என்று எமோசனலாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய சிறுவயதிலிருந்தே அவரை பார்த்து தான் வளர்ந்தேன். எனது பந்துவீச்சை மெருகூட்டுவதில் அவர் நிறைய உதவிகளை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் செருப்பு வாங்க கூட பணம் இல்லாத ஆரம்ப காலகட்டத்தில் சில ஜோடி ஷூக்களை கொடுத்து உதவினார் மற்றும் நிறைய செய்துள்ளார்” என்று தாக்கூர் பேசியுள்ளார்.

குல்கர்னி
குல்கர்னி

கேப்டன் ரஹானே பேசுகையில், “அவர் 17 வருடங்களாக கிரிக்கெட்டில் இருக்கிறார். நாங்கள் 14 வயதிலிருந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாட தொடங்கினோம். அவர் தன் திறமைகளை இதுநாள் வரை சுமந்த விதம் மற்றும் அவர் பெற்ற அனுபவம் எல்லாம் அலப்பறியது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை சாதித்திருப்பதை பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பேசியுள்ளார்.

குல்கர்னி
குல்கர்னி

ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி ஷர்துல் தாக்கூரின் 75 ரன்கள் ஆட்டத்தால் 224 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய விதர்பா அணி குல்கர்னியின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் 105 ரன்களுக்கே ஆட்டமிழந்து. 119 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் மும்பை அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே மற்றும் முஷீர் கான் இருவரும் அரைசதமடித்து விளையாடிவருகின்றனர்.

குல்கர்னி
குல்கர்னி

260 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் மும்பை அணி தங்களுடைய 42வது ரஞ்சிக்கோப்பையை வெல்ல டிரைவர் சீட்டில் உட்கார்ந்துள்ளது.

இந்தியாவிற்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி 19 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் தவால் குல்கர்னி, முதல்தர போட்டிகளில் 281 விக்கெட்டுகள், லிஸ்ட் ஏ போட்டிகளில் 223 விக்கெட்டுகள் மற்றும் 154 டி20 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ஷர்துல் - குல்கர்னி
முத்தையா முரளிதரனின் உலக சாதனையை தகர்த்த அஸ்வின்! 100வது டெஸ்ட் போட்டியில் 3 இமாலய சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com