'6 விக் + 40 ரன்கள்'-கலக்கிப்போட்ட எல்லிஸ் பெர்ரி! முதல்முறையாக Playoff சுற்றுக்கு தகுதிபெற்றது RCB!

அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான முக்கியமான போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
RCBW
RCBWCricinfo

மகளிருக்கான 2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ”ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜியண்ட்ஸ்” முதலிய 5 அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 20 லீக் போட்டிகளில் 18 போட்டிகள் முடிவுற்ற நிலையில் ”டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்” இரண்டு அணிகள் அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில் மூன்றாவது இடத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவியது. நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக உபி வாரியர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எலிமினேட்டர் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டது.

Kaur - Smriti
Kaur - Smriti

இந்நிலையில் கடைசி லீக் போட்டியில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் மும்பை அணியை எதிர்கொண்டது ஆர்சிபி அணி. விறுவிறுப்பான போட்டியில் டாஸ் வென்ற ஸ்மிரிதி மந்தனா பந்துவீச்சை தேர்வுசெய்ய, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

RCBW
கார் கண்ணாடியை உடைத்த RCB வீராங்கனை! 198 ரன்கள் குவித்து அபாரம் - தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி!

6 விக்கெட் அள்ளி மிரட்டிய பெர்ரி! 113 ரன்னுக்கு சுருண்ட மும்பை!

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேரளா வீராங்கனை சஜனாவிற்கு தொடக்கவீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஜனா 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 30 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் இருந்த மேத்யூஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விரட்ட 5 ஓவரில் 43 ரன்கள் எடுத்து சிறப்பாக தொடங்கியது மும்பை அணி.

sajana
sajana

எல்லிஸ் பெர்ரி வரும் வரை எல்லாமே மும்பை அணிக்கு சரியாகவே சென்றுகொண்டிருந்தது. மேத்யூஸை டெவின் வெளியேற்றி தொடங்கிவைக்க, பின்னர் பந்துவீசிய எல்லிஸ் பெர்ரி கொத்துகொத்தாக விக்கெட் வேட்டை நடத்தினார். 9வது ஓவரில் சஜனாவை போல்டாக்கி வெளியேற்றிய பெர்ரி, உடன் களத்திற்கு வந்த ஸ்கைவரையும் அதேஓவரில் வெளியேற்றி அனுப்பிவைத்தார்.

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்து மும்பை அணி தடுமாறிய போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் சரியான நேரத்தில் களத்திற்கு வந்தார். ஆனால் ஹர்மன்ப்ரீத்தை முதல் பந்திலேயே போல்டாக்கி கோல்டன் டக்கில் வெளியேற்றிய பெர்ரி, ஆட்டத்தை ஆர்சிபி அணியின் கைகளில் எடுத்துவந்தார். அடுத்தடுத்து அமன்ஜோத் கார், பூஜா வஸ்தராகரின் ஸ்டம்புகளை எல்லாம் தகர்த்த பெர்ரி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கிப்போட்டார். 113 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி இரண்டாவது குறைந்தபட்ச ரன்களை பதிவுசெய்தது.

RCBW
சாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து தொடங்கிய ஹர்திக்.. முதல்நாள் அனுபவம் குறித்து எமோசனல் பதிவு!

கேட்ச்களை எல்லாம் கோட்டைவிட்ட மும்பை! எளிதாக வென்ற ஆர்சிபி!

114 ரன்கள் என்ற டிரிக்கியான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு எதிராக மும்பை பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். முதல் 6 ஓவரிலேயே கேப்டன் மந்தனா, சோபி மற்றும் டெவின் மூன்று ஸ்டார் பேட்டர்களை வெளியேற்றிய மும்பை அணி போட்டியை கடினமாக்கும் முயற்சியில் சிறப்பாகவே சென்றது. ஆனால் அடுத்து களத்திற்கு வந்த அதிரடி வீரர் ரிச்சா கோஸின் கேட்சை ஸ்கைவர் கோட்டைவிட்டு மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

Richa
Richa

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரிச்சா கோஸ், ஒரே ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அழுத்தத்தை நீக்கினார். உடன் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கிய எல்லிஸ் பெர்ரி 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிவிட, 15 ஓவர் முடிவில் இலக்கை எட்டிய ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

RCBW
சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? தோனியே கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்! யார் மாற்று கேப்டன்?

3வது அணியாக தகுதிபெற்ற ஆர்சிபி அணி!

கடந்த 2023 மகளிர் ஐபிஎல் தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறாமல் 4வது இடம் பிடித்து வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்தமுறை முதல்முறையாக எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.

Ellyse Perry
Ellyse Perry

டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மூன்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், எந்த அணி யாருடன் மோதும் என்ற முடிவு மட்டும் கடைசி லீக் போட்டியின் முடிவை பொறுத்து முற்றுபெறும். முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், நல்ல ரன்ரேட்டில் இருக்கும் டெல்லி அணி மோசமான தோல்வியை பெறாத சூழலில் நாளை வென்றாலும் தோற்றாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அப்படி டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் நிலையில், எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளும்.

ஆர்சிபி ஆண்கள் அணி கோப்பை வெல்லாத நிலையில், பெண்கள் அணியாவது கோப்பை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பில் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

RCBW
”CSK அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும்” Dhoni-யின் புதிய ரோலை தொடர்ந்து முன்.CSK வீரர் விருப்பம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com