“502 ரன்கள் + 29 விக்கெட்டுகள்”! பாராட்டப்பட வேண்டிய வீரர்! மும்பையின் ரஞ்சி ஹீரோ தனுஷ் கோட்டியன்!

2024 ரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா அணியை வீழ்த்திய மும்பை அணி 7 வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்று அசத்தியது.
தனுஷ் கோட்டியன்
தனுஷ் கோட்டியன்X

2024 ரஞ்சிக்கோப்பை தொடரானது கடந்த ஜனவரி 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவந்தது. 38 அணிகள் மோதிய மோதலில் தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம் முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. பரபரப்பான அரையிறுதி மோதலில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி மும்பை அணியும், மத்திய பிரதேச அணியை வீழ்த்தி விதர்பா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

கோப்பை வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மார்ச் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி 42வது முறையாக ரஞ்சிக்கோப்பை வென்று அசத்தியது.

7வருடங்களுக்கு பிறகு மும்பை அணியை கோப்பைக்கு வழிநடத்திய தனுஷ் கோட்டியனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் 136 ரன்கள் மற்றும் 2 முக்கியமான விக்கெட்டுகள் வீழ்த்திய 19வயது இளம் வீரர் முஷீர் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

தனுஷ் கோட்டியன்
கடைசி 1 விக்கெட்டுக்கு 232 ரன்கள் பார்ட்னர்ஷிப்! 11வது வீரராக இறங்கி சதமடித்த CSK பவுலர்! #Miracle

பாராட்டப்பட வேண்டிய உண்மையான ஹீரோ தனுஷ் கோட்டியன்!

25 வயதான மும்பை ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் தனுஷ் கோட்டியன், இந்த ரஞ்சிக்கோப்பையில் ஒரு அன்சங் ஹீரோவாகவே இருந்துள்ளார். 10வது வீரராக களமிறங்கி பேட்டிங் விளையாடிய அவர் 502 ரன்கள் குவித்துள்ளார் என்றால், அவருடைய பேட்டிங் திறமை அபாரமானதாக இருந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

வலது கை ஆஃப் ஸ்பின்னரான கோட்டியன் முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமில்லாமல், அணிக்கு தேவையானபோது தன்னுடைய பேட்டிங் திறமையால் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ரஞ்சிக்கோப்பை தொடரில் ஹைலைட்டாக பரோடாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 10வது வீரராக களமிறங்கிய கோட்டியன், 129 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசி 120 ரன்களை குவித்து மிரட்டினார். கடைசி 1 விக்கெட்டுக்கு 232 ரன்கள் அடித்த இந்த தனுஷ் கோட்டியன் மற்றும் துஷார் தேஸ்பாண்டே ஜோடி மும்பை அணியை 569 ரன்களுக்கு எடுத்துச்சென்று அபார வெற்றியை தேடித்தந்தது.

அரையிறுதி போட்டியில் முக்கியமான நேரத்தில் வாசிங்டன் சுந்தர் மற்றும் தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அதேபோல இறுதிப்போட்டியிலும் விதர்பா கேப்டன் அக்சய் வாத்கரை 102 ரன்னில் வெளியேற்றி அணியை வெற்றிக்கு அழைத்துசென்றார்.

தனுஷ் கோட்டியன்
”ஷூ வாங்க கூட காசில்லாத போது அதிகம் உதவினார்”.. கடைசி போட்டியில் விளையாடும் குல்கர்னி பற்றி ஷர்துல்!

தனுஷ் கோட்டியானிடம் இருக்கும் ஸ்பெசல்!

வலது கை ஆஃப் ஸ்பின்னரான தனுஷ் கோட்டியான், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிரான சிறந்த பேட்டிங் டெக்னிக்கை வைத்துள்ளார். காலிறுதிப்போட்டி மற்றும் அரையிறுதிபோட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தரமான கவர் டிரைவ்களை ஆடிய அவர், ஒரு பேட்ஸ்மேன் ஸ்டிரோக்குகளை அசால்ட்டாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.

அதேபோல இறுதிப்போட்டியில் துருவ் ஷோரேவுக்கு எதிராக ஒரு அபாரமான டர்னிங் டெலிவரியை வீசிய அவர், பேட்ஸ்மேனை திணறவைத்தார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலுக்கும் தனுஷ் கோட்டியன் தன்னை திரும்பிப்பார்க்க வைக்கும் திறமையை தன்வசம் வைத்துள்ளார்.

தனுஷ் கோட்டியன்
48 பைனல்களில் 42வது வெற்றி.. விதர்பா அணியை வீழ்த்தி ரஞ்சிக்கோப்பையை வென்றது மும்பை அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com