ashwin
ashwinpt web

“விடைகொடு மனமே…” அஸ்வின் அப்படி என்னய்யா செஞ்சிட்டார்? இதப்படிங்க பாஸ்...

இன்று (18-12-2024) ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் முடிவடைந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார் உலகப் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னரும் இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான ரவிச்சந்திரன் அஸ்வின்.
Published on

இன்று (18-12-2024) ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் முடிவடைந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார் உலகப் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னரும் இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான ரவிச்சந்திரன் அஸ்வின்.

பவுலராக...

சென்னையில் பிறந்து வளர்ந்தவரான அஸ்வின் 9 வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடி வருபவர். தொடக்கத்தில் மித வேகப் பந்துவீச்சாளரான அவர் தனது பயிற்சியாளர் சந்திரசேகர ராவின் ஆலோசனையை ஏற்று ஆஃப் ஸ்பின்னர் ஆனார்.

2010 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வென்றதில் அஸ்வினின் பந்துவீச்சுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தத் தொடரில் 13 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த சாதனையே அவர் இந்திய கிரிக்கெட் அணியிலும், சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட கோல்டன் விசாவாக அமைந்தது!

ashwin
"அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது" - அமித்ஷா வைத்த விமர்சனம்.. எகிறும் எதிர்ப்பு!

புதிய நுட்பங்களை உருவாக்கிய அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியில் குலாம் அகமது, எரப்பள்ளி பிரசன்னா. ஸ்ரீனிவாச வெங்கட்ராகவன், ஹர்பஜன் சிங் என ஆஃப் ஸ்பின்னர்களுக்கென்று நீண்ட பாரம்பர்யம் உண்டு. இந்த வரிசையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கிக்கொண்டவர் அஸ்வின்.

களத்தின் இடதுபுறத்தில் குத்தி வலதுபுறம் எகிறிச் செல்வது போல் பந்தை வீசுவதே ஆஃப் ஸ்பின் பாணி. அஸ்வின் அறிமுகமான காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் வலக்கை மட்டையாளர்கள் லாகவமாக ஆடி ரன் குவிக்கத் தகுந்ததாக ஆகிவிட்டிருந்தது ஆஃப் ஸ்பின். இதனால் இந்த பந்துவீச்சு முறையே வழக்கொழிந்துவிடும் என்றுகூட கருதப்பட்டது.

ஆனால், ‘கேரம் பால்’ போன்ற புதிய நுட்பங்களைக் உருவாக்கினார் அஸ்வின். பந்துவீச்சாளர் தன் நடுவிரலிலிருந்து பந்தை விடுவிப்பதே கேரம் பால். இதன் மூலமாக களத்தில் குத்திய பந்து, மட்டையாளர் எதிர்பாராத திசையில் செல்லும், தடுமாறச் செய்யும். இது போன்ற புதிய நுட்பங்களைப் புகுத்தியதன் மூலம் மிக விரைவாக விக்கெட்களைக் குவித்தார் அஸ்வின்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக அளவில் அதிவேகமாக 250, 300, 350 விக்கெட்களைக் குவித்தவர் அஸ்வின். இந்தியர்களில் 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 விக்கெட்களை அதிவேகமாகக் குவித்தவரும் அவரே. 37 முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ashwin
தொடருக்கு இடையே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தது ஏன்? ஓர் பார்வை!

பேட்டிங்கிலும் அசத்தல்!

பந்துவீச்சில் மட்டுமின்றி, மட்டைவீச்சிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் அஸ்வின். ஆரம்ப காலத்தில் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கியது தொடக்க மட்டையாளராகத்தான். கபில் தேவ், மனோஜ் பிரபாகர் வரிசையில் இந்தியாவின் தலைசிறந்த பவுலிங் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார் அஸ்வின். பல முறை ஆல்ரவுண்டர்களுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள், 14 அரை சதங்களை அடித்துள்ளார். நான்கு போட்டிகளில், சதமும் அடித்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். வேறெந்த இந்தியரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை.

ashwin
அதிமுக நிர்மல் குமார் மீதான வழக்கு: கைது செய்ய இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

11 முறை ஆட்டநாயகன்

2021-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இந்தியா ஐந்து விக்கெட்களை பறிகொடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்தியர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்துவிட்ட நேரத்தில் ஹனுமா விஹாரியுடன் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆஸ்திரேலியர்களின் வேகத்தை எதிர்கொண்டு அபாரமான தடுப்பாட்டத்தை ஆடினார் அஸ்வின். இருவரும் 256 பந்துகளை எதிர்கொண்டனர். இந்தியா தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டி டிராவில் முடிந்ததோடு, ஒட்டுமொத்தமாக அந்தத் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அடித்தளமாகவும் அமைந்தது. சதங்கள், அரை சதங்களைத் தாண்டி டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியின் கீழ்நிலை மட்டையாளராக அஸ்வின் எந்த அளவுக்கு முக்கியமானவராகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லும் நிகழ்வு இது.

டெஸ்ட் போட்டிகளில் 11 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார் அஸ்வின். இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுடன் அவர் பகிர்ந்துகொள்ளும் உலக சாதனை இது.

ashwin
"அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது" - அமித்ஷா வைத்த விமர்சனம்.. எகிறும் எதிர்ப்பு!

சர்வதேச ஒருநாள், டி20 போட்டிகளிலும் அஸ்வின் தன் பந்துவீச்சால் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பரிசளித்திருக்கிறார். 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்களையும் 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

ashwin
‘இதோ வந்துட்டேன்ல...’ 3 ஆண்டுகள் தொடர் தேடலில் 200 கி.மீ பயணித்து தன் காதலியை சென்றடடைந்த புலி!

619 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்தியர் என்னும் பெருமையை நீண்டகாலமாகத் தக்க வைத்திருக்கிறார் அனில் கும்ப்ளே. 620ஆவது விக்கெட்டை எடுத்துவிட்டு ஓய்வுபெற்றுவிடுவேன் என்று கூறிவந்த அஸ்வின், 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்களை எடுத்திருக்கும்போதே ஓய்வை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

வெற்றிகள், சாதனைகளால் நிறைந்த அஸ்வினின் 14 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவடைந்துள்ளது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com