ஆசியக்கோப்பை 2025 கேப்டன்கள்
சல்மான் ஆஹா - சூர்யகுமார் - ரசீத் கான் - சரித் அசலங்காweb

ஆசியக்கோப்பை 2025| கோப்பை யாருக்கு? எந்த அணி வலுவாக உள்ளது? முழு அலசல்!

2025 ஆசியக்கோப்பை தொடரில் 5 அணிகளுக்கு இடையே கோப்பை வெல்வதற்கான மோதல் அதிகமாக இருக்கப்போகிறது. இந்திய அணி அனைத்து பாக்ஸ்களையும் டிக் செய்திருக்கும் நிலையில், இந்தியாவிற்கு சவால் அளிக்கும்வகையில் மற்றொரு அணியும் தரமாக தயாராகியுள்ளது.
Published on
Summary
  • 2025 ஆசியக்கோப்பை செப்டம்பர் 9-ல் தொடங்குகிறது

  • 5 அணிகள் ஆசியக்கோப்பையை வெல்வதற்கான ரேஸில் உள்ளன

  • இந்தியாவிற்கு சவால் அளிக்க ஒரு அணி தயாராகி உள்ளது

ஆசிய கிரிக்கெட் அணிகள் பங்குபெற்று விளையாடும் ஆசியக்கோப்பை தொடர் 1984 முதல் நடைபெற்றுவருகிறது. இதுவரை 16 ஆசியக்கோப்பை தொடர்கள் ODI மற்றும் டி20 வடிவத்தில் நடைபெற்றுள்ள நிலையில், 8 முறை இந்திய அணியும், 6 முறை இலங்கை அணியும், 2 முறை பாகிஸ்தான் அணியும் என 3 அணிகள் மட்டுமே இதுவரை கோப்பையை வென்றுள்ளன.

Asia Cup 2023
Asia Cup 2023

கடைசியாக இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 50 ரன்னில் சுருட்டிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றது. 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக விளங்கினார்.

Asia Cup 2022
Asia Cup 2022

இந்நிலையில் நடப்பு சாம்பியனாக 2025 ஆசியக்கோப்பை தொடரில் களம்காணும் இந்தியா கோப்பை வெல்லுமா?, 6 முறை கோப்பை வென்றிருக்கும் இலங்கை கம்பேக் கொடுத்து கோப்பை எண்ணிக்கையை 7-ஆக உயர்த்துமா?, இல்லை 2012 முதல் கோப்பையே வெல்லாத பாகிஸ்தான் வெல்லுமா?, அல்லது 3 முறை இறுதிப்போட்டியில் தோற்ற வங்கதேசம் சர்ப்ரைஸ் கொடுக்குமா? எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற சுவாரசியம் எகிறியுள்ளது.

ஆசியக்கோப்பை 2025 கேப்டன்கள்
ASIA CUP : ஷ்ரேயாஸ் இடம்பெறாதது முழுக்க முழுக்க அரசியலா..?

கோப்பைக்கான ரேஸில் 5 அணிகள்..

2025 ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ள தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் முதலிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

india won on england t20 last match
இந்திய அணிஎக்ஸ் தளம்

இதில் கோப்பை வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பார்க்கப்படுகின்றன.

எந்த அணி என்ன பலத்துடன் இருக்கிறது? எந்த அணிக்கு கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்..

ஆசியக்கோப்பை 2025 கேப்டன்கள்
ASIA CUP : இந்திய அணி அறிவிப்பு... கில்லை தேர்வு செய்தது சரியா? தவறா? பின்னிருக்கும் காரணம்..!

5. பாகிஸ்தான்

2025 ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மூத்த வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இல்லாமல் களம் இறங்குகிறது.

சல்மன் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களாக சையிம் ஆயுப், குஷ்தில் ஷா, ஃபகர் சமான் முதலிய வீரர்கள் இருக்கின்றனர். பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது, வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ராஃப் போன்ற சிறந்த பவுலர்கள் இருக்கின்றனர்.

மூத்தவீரர்கள் அனைவரும் ஃபார்ம் அவுட்டில் இருந்துவரும் சூழலில் அவர்கள் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பினால், பாகிஸ்தான் அணி அச்சுறுத்தும் அணியாக மாறும்.

கடந்த ஒருவருடத்தில் (2024-2025) 44 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் பாகிஸ்தான் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆனால் நம்பிக்கை அளிக்கும் விதமாக கடைசி 7 போட்டிகளில் 5-ல் வெற்றிபெற்றுள்ளது பாகிஸ்தான்.

சமீபத்திய ஃபார்மை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல 54% சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி எப்போது சிறப்பாக விளையாடும் என்பதை கணிக்க முடியாத அணியாகவே பலநேரங்களில் இருந்துள்ளது. அவர்கள் மற்ற அணிகளுக்கு மட்டுமில்லாமல் அவர்களுக்கே பல நேரங்களில் சர்ப்ரைஸ் கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால் பாகிஸ்தானை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது.

மேலும் பாகிஸ்தான் அணி இடம்பெற்றிருக்கும் பிரிவில் இந்தியாவை தவிர்த்து யுஏஇ, ஓமன் அணிகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதால் அவர்கள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஆசியக்கோப்பை 2025 கேப்டன்கள்
Asia cup | Ind V Pak செப். 14 மோதல்.. எதிர்ப்பைச் சந்திக்கும் அரசியல்!

4. இலங்கை

சரித் அசலங்கா தலைமையில் களம்கண்டிருக்கும் இலங்கை அணியில் பதும் நிசாங்கா சிறந்த ஃபார்மில் இருந்துவருகிறார். அவரை தொடர்ந்து குசால் மெண்டீஸ், கமிந்து மெண்டீஸ் போன்ற வீரர்கள் நம்பிக்கை தருகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் வல்லேலகே, துஸ்மந்தா சமீரா, மதீசா பதிரானா, மஹீஷ் தீக்‌ஷனா, நுவான் துசாரா, பினுரா ஃபெர்னாண்டோ போன்ற சிறந்த பெயர்கள் உள்ளன.

இலங்கை அணி கடந்த ஒரு ஆண்டில் 27 டி20 போட்டிகளில் விளையாடி 13-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிரான படுதோல்வியை சந்தித்துள்ளது.

இலங்கை அணி ஆசியக்கோப்பை என்று வந்துவிட்டால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் அவ்வணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கையின் சமீபத்திய ஃபார்மை கருத்தில்கொண்டு அவர்களுக்கு 66% கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.

ஆசியக்கோப்பை 2025 கேப்டன்கள்
2026 டி20 உலகக்கோப்பை| சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை.. ஜிதேஷ் சர்மா இடம் உறுதி! காரணம் கில்?

3. வங்கதேசம்

லிட்டன் தாஸ் தலைமையில் களம்காணும் வங்கதேச அணி சமீபத்திய இரண்டு டி20 தொடர்களில் பாகிஸ்தானை தோற்கடித்ததோடு, இலங்கையை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடித்து பாசிட்டிவ் எனர்ஜியுடன் உள்ளே வருகிறது.

வங்கதேச அணியை பொறுத்தவரையில் சிறந்த ஃபார்மில் இருக்கும் டி20 சதமடித்த பர்வேஷ் ஹொசைன் எமான், தன்ஷித் ஹாசன், ஜேக்கர் அலி போன்ற வீரர்களுடன் லிட்டன் தாஸ்ஸும் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார். பந்துவீச்சில் மூத்த வீரர்கள் டஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், தன்சிம் ஹாசன் ஷகிப் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வங்கதேச அணியின் சமீபத்திய ஃபார்மை கருத்தில் கொண்டு அவர்கள் கோப்பையை வெல்ல 72% வாய்ப்பு இருக்கிறது. குரூப் பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் இருப்பது வங்கதேசத்திற்கு மேலும் சவாலை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வடத்தில் 39 போட்டியில் விளையாடியிருக்கும் வங்கதேசம் 19 போட்டிகளில் வெற்றியை கண்டுள்ளது.

ஆசியக்கோப்பை 2025 கேப்டன்கள்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்.. உலக சாதனை படைத்த ரசீத் கான்!

2. ஆப்கானிஸ்தான்

சமீபகாலத்தில் டி20 வடிவத்தில் தங்களுடைய ஆட்டத்தை மெருகேற்றியிருக்கும் ஒரு அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் மட்டுமே. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பிறகு அதிக (61%) வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் ஒரே ஆசிய அணி ஆப்கானிஸ்தான் மட்டுமே.

கடந்த ஒரு வருடத்தில் 24 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி 13 போட்டிகளில் வென்றுள்ளது. சமீபத்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், யுஏஇ இரண்டு அணிகளையும் வீழ்த்தி ஃபார்மை தொடர்ந்து வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.

ரசீத் கான் தலைமையில் களம்காணவிருக்கும் ஆப்கானிஸ்தானில், குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், செடிகுல்லா அடல், குல்பதீன் நைப், ஓமர்சாய், முகமது நபி, நூர் அகமது, முஜூப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபரூக்கி போன்ற சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் கோப்பை வெல்ல 84% சதவீதம் வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணிக்கு சவால் கொடுக்கக்கூடிய ஒரே அணியாக தற்போது ஆப்கானிஸ்தான் விளங்குகிறது.

ஆசியக்கோப்பை 2025 கேப்டன்கள்
”தமிழ்நாடு அணிக்காக தண்ணீர்-கேன் தூக்கமுடியாது..” - விரக்தியில் பேசிய விஜய் சங்கர்

1. இந்தியா

2024 டி20 உலகக்கோப்பை வென்றதிலிருந்து டி20 வடிவத்தில் தலைசிறந்த அணியாக விளங்கிவருகிறது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி. 2024-2025 வரை 31 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்து 28 போட்டிகளில் வெற்றியை ருசித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி தரப்பில் 8-9 டி20 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

சூர்யகுமார் தலைமையில் களமிறங்கியிருக்கும் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்ற தலைசிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2025 ஆசியக்கோப்பையை வெல்லக்கூடிய விருப்ப அணியாக இருந்துவருகிறது இந்திய அணி. இந்தியாவை எந்த அணி இறுதிப்போட்டியில் வீழ்த்தப்போகிறது என்ற கேள்வியே 2025 ஆசியக்கோப்பையில் ஒரே சுவாரசியமாக இருக்கவிருக்கிறது. மற்றபடி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அனைத்து பாக்ஸ்களையும் டிக் செய்திருக்கும் இந்திய அணியே கோப்பை வெல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.

ஆசியக்கோப்பை 2025 கேப்டன்கள்
2026 T20 உலகக் கோப்பை | இந்திய அணிக்கு மீண்டும் ஆலோசகராகும் தோனி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com