தந்தையை இழந்தபோதும் அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள்
தந்தையை இழந்தபோதும் அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள்web

ரிங்கு சிங் to விராட் கோலி| போட்டியின் நடுவே தந்தையை இழந்தபோதும்.. நாடே முதன்மை தேர்வு!

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் தன் மகன் ரிங்கு சிங் விளையாடுவதை பார்த்து பூரிப்படைந்த தந்தை கான்சந்திரா மரணித்தார். இது முக்கியமான போட்டிகளின் போது தந்தையை இழந்து துயரங்களைச் சந்தித்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளது..
Published on
Summary

ரிங்கு சிங் தனது தந்தையை இழந்த துயரத்திலும், இந்திய அணிக்காக விளையாடும் அர்ப்பணிப்பை காட்டினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன் தந்தையுடன் சில நேரம் கழித்த அவர், மீண்டும் அணியில் இணைந்து ஃபீல்டிங் செய்தார். இது அவரது நாட்டிற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

உலக ரசிகர்கள் கொண்டாடும் முதன்மை விளையாட்டாக கிரிக்கெட்டும், கிரிக்கெட் வீரர்களும் இருந்துவருகின்றனர். அதிலும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு என்று ரசிகர்களும், பின்தொடர்பவர்களும் ஏராளமாக இருந்துவருகின்றனர். ஒரு பக்கம் ஆதரவு, கொண்டாட்டம், ஆரவாரம் என இருந்தாலும், மறுபக்கம் பல்வேறு தனிப்பட்ட துயரங்களுடன் கிரிக்கெட் வீரர்கள் போராடிவருகின்றனர்.

அந்தவகையில் தான் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்துவரும் அதிரடி வீரர் ரிங்கு சிங், தன்னுடைய தந்தையை இழந்து துயரில் மூழ்கியுள்ளார். இச்சம்பவம் நடப்பதற்கு முன்பாக தன்னுடைய தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோதும், ரிங்கு சிங் இந்திய அணிக்காக விளையாடவே முடிவுசெய்தார்.

Rinku Singh Parents
Rinku Singh Parents

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தன்னுடைய தந்தையிடம் இருக்க சிறிது காலம் எடுத்துக்கொண்ட ரிங்கு சிங், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆடும் லெவனில் இல்லையென்றாலும் மீண்டும் அணியில் இணைந்து ஃபீல்டிங் செய்தார். இது நாட்டிற்காக அவருடைய அர்ப்பணிப்பை காட்டுகிறது.

இச்சம்பவம் இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இதேபோல துயரச்சம்பவங்களில் நாட்டிற்காக கிரிக்கெட்டை தேர்வுசெய்த சம்பவத்தை நினைவுகூறுகிறது.. அப்படியான சில வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்..

தந்தையை இழந்தபோதும் அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள்
ரிங்கு மனம் உடைந்துவிட்டார்.. இனிப்பு, வெடி உடன் தயாராக இருந்தோம்! -எமோசனலாக பேசிய ரிங்கு சிங் தந்தை

ரிங்கு சிங்

ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திரா, 4ஆம் நிலை கல்லீரல் புற்றுநோயுடன் போராடி காலமானார். கிரேட்டர் நொய்டாவில் பல நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ரிங்குவின் கிரிக்கெட் பயணத்தில் தொடர்ந்து ஆதரவாக இருந்தார்.

ரிங்கு சிங்
ரிங்கு சிங்

ஆனால் 2026 டி20 உலகக் கோப்பையின் நடுவில் தந்தையின் இழப்பு என்ற பெரிய துயரம் ரிங்கு சிங்கிற்கு ஏற்பட்டது, இச்சம்பவம் ரிங்குவின் தனிப்பட்ட கிரிக்கெட் சாதனை ஓட்டத்திற்கு இடையே தனிப்பட்ட சோகமாக மாறியது.

தந்தையை இழந்தபோதும் அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள்
மகன் கிரிக்கெட்டர்... ஆனாலும் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ரின்கு சிங்கின் தந்தை!

விராட் கோலி

2006ஆம் ஆண்டு கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியின் போது, ​​இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய 18 வயதில் தனது தந்தையை இழந்தார்.

Young Virat Kohli
Young Virat Kohli

அப்படியான மிகப்பெரிய துயரத்தின் போதும், மறுநாள் டெல்லி அணிக்காக மீண்டும் மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோலி 90 ரன்கள் அடித்தார். இது அவரது மன உறுதியை வெளிப்படுத்தியது.

தந்தையை இழந்தபோதும் அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள்
2026 ஐபிஎல் | தேர்தலால் தள்ளிப்போகிறதா..? தேதி அறிவிப்பு..? RCB-க்கு குட் நியூஸ்!

சச்சின் டெண்டுல்கர்

1999 ஐசிசி உலகக் கோப்பையின் போது, தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு திரும்பினார்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

தந்தையை இழந்த மீளாதுயரம் இருந்தபோதிலும் அணியில் இணைந்த கிரிக்கெட்டின் கடவுள் சச்சின், கென்யாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் அடித்து, அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணித்தார்.

தந்தையை இழந்தபோதும் அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள்
"ஏன் அழுகிறாய்? அது வெறும் குரங்கு.." PUNCH குரங்கிற்காக கண்ணீர்விட்ட கால்பந்து வீரர்!

முகமது சிராஜ்

2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்காக முகமது சிராஜ் விளையாடிய போது அவருடைய தந்தை உயிரிழந்த செய்தி தெரியவந்தது. ​​கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தனது தந்தை காலமான போதிலும், சிராஜ் இந்திய அணி உடனேயே இருக்கத் தேர்வு செய்தார்.

முகமது சிராஜ்
முகமது சிராஜ்

வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரில் இந்தியாவிற்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக உருமாறிய முகமது சிராஜ், இந்திய அணிக்காக பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்றபிறகே தந்தைக்கு மரியாதை செலுத்தினார்.

தந்தையை இழந்தபோதும் அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள்
’போய் ஆட்டோ ஓட்டுணு சொல்லுவாங்க..’ ட்ரோல் செய்யப்பட்ட சிராஜ்.. தோனி சொன்ன அட்வைஸ்!

ரிஷப் பண்ட்

2017ஆம் ஆண்டில், தனது தந்தையை இழந்த பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ரிஷப் பந்த், விறுவிறுப்பான 57 ரன்கள் எடுத்தார்.

தந்தையை இழந்தபோதும் அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள்
The Unsung Hero - சிராஜ்| எத்தனை தோல்விகள், எத்தனை ட்ரோல்கள்.. விழவிழ எழுந்து நின்ற வீரனின் கதை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com