சிராஜிடன் தோனி சொன்ன அட்வைஸ்
சிராஜிடன் தோனி சொன்ன அட்வைஸ்web

’போய் ஆட்டோ ஓட்டுணு சொல்லுவாங்க..’ ட்ரோல் செய்யப்பட்ட சிராஜ்.. தோனி சொன்ன அட்வைஸ்!

நன்றாக விளையாடும் போதும், சரியாக விளையாடாதபோதும் மக்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்து தோனி சொன்ன அட்வைஸை பகிர்ந்துள்ளார் முகமது சிராஜ்.
Published on
Summary

நன்றாக விளையாடும் போதும், சரியாக விளையாடாதபோதும் மக்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்து தோனி சொன்ன அட்வைஸை பகிர்ந்துள்ளார் முகமது சிராஜ்.

இந்திய அணியில் பும்ரா இல்லை என்றால் இந்திய பந்துவீச்சின் தூணாக செயல்பட்டுவருகிறார் முகமது சிராஜ். அதிலும் பும்ரா இல்லாத நேரத்தில் பந்துவீச்சை வழிநடத்தும்போது இரண்டு மடங்கு உழைப்பை போடும் சிராஜ் ரசிகர்களின் பாராட்டை பெற்றுவருகிறார்.

சிராஜ்
சிராஜ்cricinfo

இந்திய அணியின் மூத்த நட்சத்திர பவுலராக உயர்ந்திருக்கும் சிராஜ், தன்னுடைய ஆரம்பகாலத்தில் ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட வீரராகவே இருந்தார். ஆனால் தன்னுடைய கடின உழைப்பால் சிறந்த இடத்தை அடைத்திருக்கும் சிராஜ், தன்னுடைய ட்ரோல்கள் குறித்து பேசியுள்ளார்.

சிராஜிடன் தோனி சொன்ன அட்வைஸ்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம்.. சஞ்சு சாம்சனை வஞ்சிக்கும் அஜித் அகர்கர்?

தோனி கொடுத்த அட்வைஸ்..

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் முகமது சிராஜ், தன்மீதான ட்ரோல்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது அணியில் இணைந்தபோது தோனி கொடுத்த அட்வைஸை நினைவு கூர்ந்தார்.

ட்ரோல்கள் குறித்து பேசியிருக்கும் சிராஜ், “நான் இந்திய அணியில் சேர்ந்தபோது, ​​எம்.எஸ். தோனி என்னிடம் 'மற்றவர்கள் சொல்வதைக் கவனிக்காதே. நீ நன்றாகச் செயல்படும்போது, ​​உலகமே உன்னுடன் இருக்கும், ஆனால் நீ சரியாக செயல்படவில்லை என்றால், அவர்கள் உன்னைத் திட்டுவார்கள்' என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

ட்ரோலிங் மிக மோசமானது, நீ நன்றாகச் செயல்படும்போது, ​​ரசிகர்களும் உலகமும் உன்னுடன் இருந்து 'சிராஜைப் போன்ற பந்து வீச்சாளரே இல்லை' என்று சொல்வார்கள். அடுத்த ஆட்டத்தில் நீ சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், 'உன் அப்பாவுடன் போய் ஆட்டோ ஓட்டு' என்று சொல்வார்கள் - இதன் அர்த்தம் என்ன? ஒரு போட்டியில் நீ ஹீரோவாக இருந்தால் இன்னொரு போட்டியில் பூஜ்ஜியமாக இருப்பாய்.

சிராஜ்
சிராஜ்

அதனால் நான் வெளிப்புறக் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். என் அணி வீரர்களும், குடும்பத்தினரும் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் எனக்கு கவலையில்லை" என்று பேசியுள்ளார்.

சிராஜிடன் தோனி சொன்ன அட்வைஸ்
சிதைந்ததா ரோகித்தின் வாழ்நாள் லட்சியம்..? கனவுக்கோட்டையை உடைத்த BCCI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com