PUNCH குரங்கிற்காக கண்ணீர்விட்ட கால்பந்து வீரர்
PUNCH குரங்கிற்காக கண்ணீர்விட்ட கால்பந்து வீரர்web

"ஏன் அழுகிறாய்? அது வெறும் குரங்கு.." PUNCH குரங்கிற்காக கண்ணீர்விட்ட கால்பந்து வீரர்!

உலகையே கலங்க வைத்த குட்டி குரங்கு 'PUNCH'-ன் வீடியோவை பார்த்து முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கால்பந்து வீரர் ஸ்ட்ரைக்கர் ஜேவியர் 'சிச்சாரிட்டோ' ஹெர்னாண்டஸ் கண்ணீர்விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on
Summary

மனிதர்களின் தனிமையை நினைவூட்டும் Punch குரங்கின் வீடியோ, மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஹெர்னாண்டஸை ஆழமாக பாதித்தது. தாயால் கைவிடப்பட்ட குட்டி குரங்கு, பெரிய குரங்குகளிடம் பாசத்திற்காக தேடல், ஆனால் தள்ளிவிடப்பட்டு, பொம்மையை கட்டிப்பிடித்து உறங்குவது போன்ற காட்சி, Punch-ன் வேதனையை மனித உணர்ச்சிகளுடன் ஒப்பிட்டு, ஹெர்னாண்டஸ் கண்ணீர் விட்டார்.

கடந்த சில நாட்களாக Punch என பெயரிடப்பட்ட macaque வகை குரங்கு தான் இணையத்தில் எல்லோரையும் ஆட்கொண்டு வருகிறது.. கடந்த ஜனவரி மாதம் தனது கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக சென்ற பென்குயின் எல்லோருடைய மனதையும் உலுக்கியதை போல, தற்போது இந்த Punch குரங்கும் அனைவருடைய மனதையும் உலுக்கியுள்ளது.

பஞ்ச் குரங்கு
பஞ்ச் குரங்கு

இணையத்தில் வைரலான வீடியோவில், தனது தாயால் கைவிடப்பட்ட Punch குரங்கு தன்னைவிட பெரிய குரங்குகளிடம் பாசத்திற்காகவும், அரவணைப்பிற்காகவும் அடைக்களம் தேடுகிறது. ஆனால் அந்த குட்டி குரங்கு Punch-ஐ ஏற்றுக்கொள்ளாமல் பெரிய குரங்குகள் தள்ளிவிடுகின்றன. பின்னர் தனிமையில் தவிக்கும் Punch, ஒரு குரங்கு பொம்மையை கட்டிப்பிடித்து உறங்குவது போலவும், தனிமையை போக்கிக் கொள்வது போலவுமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதைப்பார்த்த மனிதர்கள் தாங்கள் ஒரு கட்டத்தில் கடந்துவந்த தனிமையை நினைவுகூர்ந்து Punch-ன் வேதனையை தங்களுடன் ஒப்பிட்டு பார்த்து வேதனையடைந்து வருகின்றனர்.

PUNCH குரங்கிற்காக கண்ணீர்விட்ட கால்பந்து வீரர்
மரணத்தை நோக்கி சென்ற பென்குயின்.. Trend விடீயோவின் பின்னணி என்ன? மனிதர்கள் இதனை கொண்டாடுவது ஏன்?

இந்தசூழலில் தான் Punch குரங்கின் வீடியோவை பார்த்த மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கால்பந்து வீரர் ஜேவியர் ஹெர்னாண்டஸ் கண்ணீர் விட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் "ஏன் அழுகிறாய்? அது வெறும் குரங்கு.." என்ற தலைப்பில் வீடியோவை பகிர்ந்திருக்கும் ஹெர்னாண்டஸ், Punch குரங்கின் வீடியோ தன்னை ஏன் மிகவும் ஆழமாக பாதித்தது என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். முன்னாள் பிரீமியர் லீக் முன்கள வீரர் Punch-ன் தனிமையான நடத்தைகளைப் பற்றி சிந்தித்து அதை மனித உணர்ச்சிகளுடன் ஒப்பிட்டார். குட்டி குரங்கை பெரிய குரங்குகள் தள்ளிவிடுவதை பார்த்து Punch ஆறுதல் தேடும்போது. ஹெர்னாண்டஸ் வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டார்.

Punch-ன் கதை ஏன் ஒரு உணர்ச்சிபூர்வமான செய்தியைக் கொண்டுள்ளது என்பதை விளக்கியிருக்கும் ஹெர்னாண்டஸ், வீடியோ உடன் 3 விதமான விசயங்களை punch மனிதர்களுக்கு உணர்த்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.

PUNCH குரங்கிற்காக கண்ணீர்விட்ட கால்பந்து வீரர்
உலகை கலங்க வைத்த குட்டி குரங்கு 'PUNCH'.. தாய் நிராகரித்தது ஏன்? Zoo காப்பாளர் சொன்ன முக்கிய தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com