16 வருட வலி! “ஈ சாலா கப் நம்தே” ட்ரோல்.. அனைத்து ரணத்தையும் தாண்டி முதல் கோப்பையை முத்தமிட்ட RCB!

2024 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
RCB Won 2024 WPL Tittle
RCB Won 2024 WPL TittleX

IPL மற்றும் WPL என இரண்டையும் எடுத்துக்கொண்டாலும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதேயில்லை. அந்த அடிப்படையில் இதுவரை கோப்பையே வெல்லாத ஒரு அணி, கோப்பையை வென்று தோல்வி முகத்தை இன்று முடிவுக்கு கொண்டுவரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் போட்டியை காண குவிந்தனர். பரபரப்பான இறுதிபோட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி 16 வருட கோப்பை கனவை பூர்த்தி செய்துள்ளது ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி.

2024 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.

RCB Won 2024 WPL Tittle
38 ஓவர்கள் வரை RCB போட்டியிலேயே இல்லை.. அந்த 12 பந்துகள் தான்..! தோல்வி குறித்து MI கோச் ஏமாற்றம்!

113 ரன்களுக்கு ஆல்அவுட்டான டெல்லி அணி!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷபாலி வெர்மா மற்றும் கேப்டன் மெக் லானிங் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் மெக் லானிங் வேடிக்கை பார்க்க, மறுமுனையில் ஆர்சிபி பவுலர்களை எல்லாம் பொறட்டி எடுத்த ஷபாலி வெர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு வேடிக்கை காட்டினார். உடன் மெக் லானிங்கும் 3 பவுண்டரிகள் விரட்ட, விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாட தொடக்க வீரர்கள் ஜோடி 7 ஓவருக்கு 64 ரன்கள் குவித்து மிரட்டினர்.

முக்கியமான நேரத்தில் பந்துவீச வந்த சோபி மொலின்யூ, ஷபாலியை 44 ரன்களில் அவுட்டாக்கி வெளியேற்றிது மட்டுமல்லாமல், ஜெமிமா ரோட்றிக்ஸ் மற்றும் அலிஸ் இருவரையும் 0 ரன்னில் வெளியேற்றி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை கலக்கிப்போட்டார். அப்போது வீழ்ந்த டெல்லி அணி அதன் பிறகு எழவேயில்லை. அதற்கு பிறகு பந்துவீச வந்த ஸ்ரேயாங்கா பாட்டீல் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்த, 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது டெல்லி கேபிடல்ஸ் அணி.

RCB Won 2024 WPL Tittle
'கோப்பைவென்று ஆண்கள் அணிக்கு ஊக்கம் கொடுங்கள்'.. RCB பெண்கள் அணிக்கு டிவில்லியர்ஸ் வாழ்த்து!

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆர்சிபி அணி!

114 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டினாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷோபி டெவைன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் மந்தனா நிலைத்து நின்று விளையாட, மோசமான பந்துகளை மட்டும் டார்கெட் செய்த டெவைன் பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்தார். குறைவான ரன்கள் என்றாலும் அதனை எட்டுவதற்கான க்ளியர் பிளானுடன் வந்த ஆர்சிபி அணி, தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை விரட்டி ரன்போர்டு அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.

சிறப்பாக செயல்பட்ட டெவைன் மற்றும் மந்தனா இருவரும் 32 மற்றும் 31 ரன்கள் எடுத்து வெளியேற, ஆர்சிபி அணியின் டாப் பிளேயர் எல்லிஸ் பெர்ரி நிதானமாக சேஸிங்கை தொடர்ந்தார். சரியான நேரத்தில் விக்கெட்டை விழாமல் பார்த்துக்கொண்ட எல்லிஸ் பெர்ரி மீண்டும் பொறுப்பை தனதாக்கி 37 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். 4 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவை என்ற இடத்தில் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிச்சா கோஸ் ஆர்சிபி அணியை கோப்பைக்கு அழைத்துசென்றார். முடிவில் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி தங்களுடைய முதல் கோப்பையை முத்தமிட்டது.

RCB Won 2024 WPL Tittle
கோப்பைக்கான 16 வருட போராட்டம்.. கோலி முதலிய 7 RCB கேப்டன்களால் சூட முடியாத மகுடம்! சூடுவாரா மந்தனா?

கோப்பை வென்ற பிறகு கண்ணீர் சிந்திய வீரர்கள்!

முதல்முறையாக கோப்பை வென்ற பிறகு ஆர்சிபி வீரர்கள் எமோசனாலாக காணப்பட்டனர், ஆஷா ஷோபனா கண்ணீர் சிந்தினார். 16 வருடங்களாக கோப்பை வெல்லாத ஒரு பிரான்சைஸ் அணி, முதல்முறையாக கோப்பை வென்று அசத்தியுள்ளது. ஆர்சிபி ஆர்சிபி என என முழக்கமிட்ட ரசிகர்கள், 16 வருடமாக சோக்கர்ஸ் ஃபேன்ஸ் என்ற முத்திரையை மாற்றி புன்னகை துளிர்த்தனர். ஆர்சிபி அணி மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்.. முடிவில் ”ஈ சாலா கப் நம்தே” உண்மையாகியுள்ளது!

RCB Won 2024 WPL Tittle
RCB First CUP Loading.. அதிரடியில் மிரட்டிய ஷபாலி; ஒரே ஓவரில் கைமாறிய ஆட்டம்! 113-ல் டெல்லி All Out!

வீடியோ காலில் வாழ்த்திய விராட் கோலி!

வெற்றி பெற்ற ஆர்.சி.பி மகளிர் அணிக்கு ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். விராட் கோலியின் வாழ்த்தால் கேப்டன் மந்தனா உள்ளிட்ட வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெங்களூரு அணி வீராங்கனைகள் மைதானத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தை அற்புதமாக நிகழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com