'கோப்பைவென்று ஆண்கள் அணிக்கு ஊக்கம் கொடுங்கள்'.. RCB பெண்கள் அணிக்கு டிவில்லியர்ஸ் வாழ்த்து!

2024 மகளிர் ஐபில் தொடரின் இறுதிப்போட்டியானது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருக்கிறது.
dc vs rcb
dc vs rcbX

IPL மற்றும் WPL என இரண்டையும் எடுத்துக்கொண்டாலும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதேயில்லை. அந்த அடிப்படையில் இதுவரை கோப்பையே வெல்லாத ஒரு அணி, கோப்பையை வென்று தோல்வி முகத்தை இன்று மாலை முடிவுக்கு கொண்டுவரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடந்து முடிந்த 2 லீக் போட்டியிலும் 25 ரன்கள் மற்றும் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்திய டெல்லி அணி, பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. அதேநேரத்தில் டெல்லி அணிக்கான இரண்டு போட்டியிலும் வெற்றியின் பக்கமிருந்த ஆர்சிபி அணி நூலிழையில் கோட்டைவிட்டுள்ளது.

RCB
RCB

இன்று மாலை 7.30 மணிக்கு பைனல் போட்டி நடக்கவிருக்கும் இதே அருண் ஜெட்லி மைதானத்தில் தான், டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 1 ரன்னில் தோல்விபெற்றது. இந்நிலையில் இரண்டு தரமான அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் போட்டியை ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமில்லாமல் முன்னாள் ஆர்சிபி வீரரான ஏபி டி வில்லியர்ஸும் ஆர்சிபியின் வெற்றிக்காக காத்துக்கொண்டுள்ளார்.

dc vs rcb
”சவால்தான்; RCB-ஐ வீழ்த்த இதை நாங்க நிச்சயம் செய்யணும்”- WPL ஃபைனல் குறித்து DC கேப்டன் மெக் லானிங்!

கோப்பை வென்று ஆண்கள் அணிக்கு ஊக்கம் கொடுங்கள்..

ஐபிஎல் தொடரில் 16 வருடங்களாக கோப்பை வெல்லாமல் இருந்து வரும் ஆர்சிபி அணியை, ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் விட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன் மற்றும் ஃபேஃப் டூபிளெசிஸ் முதலிய 7 கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர். இதில் அதிக போட்டிகளில் விராட் கோலி, அனில் கும்ப்ளே, டேனியல் விட்டோரி மற்றும் ராகுல் டிராவிட் முதலிய 3 கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர். இப்படி பல கேப்டன்கள் மாறிய போதும் கோப்பை என்ற ஒன்று மட்டும் ஆர்சிபி அணிக்கு எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

இதுவரை மூன்று ஐபிஎல் பைனல்கள், 1 சாம்பியன்ஸ் லீக் பைனல் என 4 பைனல்களில் விளையாடியிருக்கும் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை. இந்நிலையில் முதல்முறையாக மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றிருக்கும் ஸ்மிர்தி மந்தனா, 7 கேப்டன்களால் வெல்லமுடியாததை வென்று காட்டுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் RCB மகளிர் அணிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், “இன்று பெண்கள் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி, இது நிச்சயமாக பலம் வாய்ந்த அணிகளான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையே ஒரு சிறந்த மோதலாக இருக்கப்போகிறது. லீக் போட்டிகள் முழுவதும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2 அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆனால் ஆர்சிபிக்கு என்னுடைய தனிப்பட்ட ஆதரவு கூச்சல் இருக்கப்போகிறது. ஆர்சிபியின் அனைத்து சிறந்த தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்து, ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்ல ஆண்கள் அணிக்கு ஊக்கம் கொடுங்கள். நான் போட்டியின் ஒவ்வொரு பந்தையும் பார்க்கப்போகிறேன்”என்று ஏபி டி வில்லியர்ஸ் X-ல் கூறியுள்ளார்.

dc vs rcb
கோப்பைக்கான 16 வருட போராட்டம்.. கோலி முதலிய 7 RCB கேப்டன்களால் சூட முடியாத மகுடம்! சூடுவாரா மந்தனா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com