38 ஓவர்கள் வரை RCB போட்டியிலேயே இல்லை.. அந்த 12 பந்துகள் தான்..! தோல்வி குறித்து MI கோச் ஏமாற்றம்!

2024 மகளிர் ஐபிஎல் தொடரின் நாக்அவுட் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை வீழ்த்திய RCB அணி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியுள்ள நிலையில், வலுவான இடத்திலிருந்து போட்டியை இழந்தது வருத்தமளிப்பதாக மும்பை அணி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
MI Loss
MI LossCricinfo

2024 மகளிர் ஐபிஎல் தொடரானது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்களுடன் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. நாளை சூப்பர் சண்டேவில் நடைபெறவிருக்கும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

அதற்கு முன் நேற்று நடைபெற்ற பரபரப்பான எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட RCB அணி, இறுதி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு த்ரில்லிங் வெற்றியை பதிவுசெய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போட்டியின் இறுதிஓவர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியே போட்டியில் வெல்லும் நிலைமையில் இருந்தது. ஆனால் கூடுதலான அழுத்தம் மிடில் ஆர்டர் வீரர்களை ஏமாற்றிவிட்டதாக மும்பை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

சொல்லப்போனால் 136 ரன்களை வெற்றி இலக்காக விரட்டிய மும்பை அணி, 17 ஓவர் முடிவில் 116 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. கடைசி 18 பந்துகளுக்கு 20 ரன்கள் தேவை என்றநிலையில், மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களத்தில் இருந்தார். ஆனால் அதற்கு பிறகு எப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை நோக்கி நகர்ந்தது என்று மும்பை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

MI Loss
கோப்பைக்கான 16 வருட போராட்டம்.. கோலி முதலிய 7 RCB கேப்டன்களால் சூட முடியாத மகுடம்! சூடுவாரா மந்தனா?

கடைசி 12 பந்துகளில் தான் மும்பை போட்டியை இழந்தது!

கிறிக்பஸ் உடன் பேசியிருக்கும் மும்பை பயிற்சியாளர் சார்லோட் எட்வர்ட்ஸ், "கடைசி 12 பந்துகளில்" தங்களுடைய மும்பை அணி எலிமினேட்டரை இழந்ததாகவும், அந்த நேரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் தான், மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில் இடம் பிடிக்கமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து பேசியிருக்கும் அவர், “இந்த ஆடுகளத்தில் நீங்கள் கடைசிவரை நிலைத்து நிற்க வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். சொல்லப்போனால் ஆர்சிபி அணியும் அதையே தான் இறுதிவரை செய்தது. அவர்கள் கடைசி பந்துவரை போட்டியிலிருந்து விலகிச்செல்லவில்லை. போட்டியின் 38 ஓவர்கள் வரை ஆட்டம் மும்பை அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடைசி 12 பந்துகளில் தான் நாங்கள் போட்டியை கட்டுப்படுத்த முடியாமல் விட்டுவிட்டோம். அங்கு தான் நாங்கள் போட்டியை இழந்தோம், வலுவான நிலையில் இருந்து போட்டியை இழந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Kaur
Kaur

ஹர்மன்ப்ரீத்தின் விக்கெட் தான் டர்னிங் பாயிண்ட் என்று கூறியிருக்கும் அவர், “ஹர்மன்ப்ரீத்தின் விக்கெட் தான் போட்டியின் டர்னிங் பாயிண்டாக மாறிவிட்டது. அவர் அடித்த பந்து சிக்சருக்கு சென்றுவிட்டது, போட்டியில் நாம் டிரைவர் சீட்டில் அமர்ந்துவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால் கடைசிநேரத்தில் அது கேட்சாக மாறியது. அந்த ஷாட்டிற்காக ஹர்மனை நான் குறைகூறபோவதில்லை, ஏனென்றால் அந்த பந்து சிக்சருக்கு சென்றிருந்தால் போட்டி 12 பந்துகளுக்கு 12 ரன்கள் என்று மாறியிருக்கும்.

MI Loss
MI Loss

அவருடைய விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் நிலைத்து நின்று விளையாடாமல் விட்டுவிட்டனர். சஜனா முதலிய வீரர்கள் அந்தளவு அனுபவம் இல்லாத வீரர்கள். ஆனால் எங்கள் வீரர்கள் இதிலிருந்து அனுபவத்தை பெற்று மீண்டு வருவார்கள்” என்று எட்வர்ட்ஸ் பேசியுள்ளார்.

MI Loss
“502 ரன்கள் + 29 விக்கெட்டுகள்”! பாராட்டப்பட வேண்டிய வீரர்! மும்பையின் ரஞ்சி ஹீரோ தனுஷ் கோட்டியன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com