\
dhoni
dhonicricbuzz

இவருக்குமா தோனி மீது வெறுப்பு..? கம்பீர், சேவாக் வரிசையில் இன்னொரு வீரர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது பல முன்னாள் வீரர்கள் பலமுறை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர், தற்போது ஒரு இந்திய வீரர் தோனியை புறக்கணித்திருப்பது இவருக்குமா தோனி மீது வெறுப்பு உள்ளது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on
Summary

மகேந்திர சிங் தோனி கேப்டன்சியில் இந்தியா உலகக்கோப்பை, சாம்பியன்ஷிப் டிராபி, டெஸ்ட் நம்பர் 1 என பல வெற்றிகள் கண்டாலும், வாய்ப்பு இழந்த முன்னாள் வீரர்கள் கம்பீர், யுவராஜ், சேவாக், ஹர்பஜன், இர்ஃபான், மனோஜ் திவாரி போன்றோர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இப்போது புஜாரா தனது சிறந்த 11 அணியில் விக்கெட் கீப்பராக தோனியை விட ரிஷப் பண்ட்டை தேர்வு செய்திருப்பது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

3 ஐசிசி உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கும் மகேந்திர சிங் தோனி, தன்னுடைய கேப்டன்சியின் போது அணிக்காக பல அதிரடி முடிவுகளை எடுத்தார். அந்த முடிவுகள் பல முன்னாள் வீரர்களை நேரடியாகவே பாதித்தன. சில வீரர்களுக்கு முறையான வாய்ப்பு கிடைக்காமல் அடுத்தடுத்த போட்டிகளிலிருந்து டிராப் செய்யப்பட்டனர். ஆனால் முடிவில் அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் மகேந்திர சிங் தோனி தீர்க்கமாக செய்தார்.

யுவராஜ் சிங் - தோனி
யுவராஜ் சிங் - தோனிweb

அதன்விளைவாக 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பை வென்றது, வெளிநாட்டு மண்ணில் சாம்பியன்ஷ் டிராபி வென்றது, டி20 உலகக்கோப்பை வென்றது, டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை நம்பர் 1 அணியாக மாற்றியது என தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஆனால் இதற்கிடையில் தோனியால் வாய்ப்பு கிடைக்காமல் போனவர்கள், தோனியின் முடிவால் அணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என பல முன்னாள் வீரர்கள் தோனி மீது கடுமையான வெறுப்பை வளர்த்துக்கொண்டார்கள்.

அதில் கம்பீர், யுவராஜ் சிங், சேவாக், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், மனோஜ் திவாரி போன்ற வீரர்கள் நேரடியகாவே தோனி குறித்த விமர்சனங்களை முன்வைத்தவர்கள்.

dhoni
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

இதுவரை தோனியை விமர்சித்தவர்கள்..

கம்பீர் தோனியை பற்றி குறைசொல்லவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்பதுபோல பலமுறை சர்ச்சையான கருத்துகளை வெளிப்படுத்தி தோனி ரசிகர்களிடம் எதிர்வினைகளை பெற்றுள்ளார். கம்பீருக்கு பிறகு தோனி குறித்த சர்ச்சை கருத்துகளில் இடம்பெற்றவர்கள் யுவராஜ் சிங்கும், அவருடைய தந்தை யோக்ராஜ் சிங்கும் தான். யோக்ராஜ் சிங் பலமுறை தோனி குறித்து கடுமையான சொற்களை பேசியபோதெல்லாம், யுவராஜ் சிங் இதுவரை எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை. மாறாக தோனியும், நானும் அவ்வளவு நெருக்கமானவர்கள் இல்லை என்று தான் கூறியுள்ளார்.

அதேபோல சேவாக், தோனியால் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறியபிறகு, 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி முன்வரிசையில் பேட்டிங் இறங்கி கோப்பையை வென்றுகொடுத்தது சச்சினால் தான், தோனியின் தனிப்பட்ட முடிவால் இல்லை என பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கம்பீர் - தோனி
கம்பீர் - தோனிTwitter

ஹர்பஜன் சிங்கோ அஸ்வினுக்கு கிடைத்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை, தோனி மட்டுமே கோப்பையை வென்று கொடுக்கவில்லை போன்ற கடுமையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்களை தொடர்ந்து இர்ஃபான் பதான் இன்றளவும் தோனி மீதான சர்ச்சைகளில் தலைப்பு செய்தியாக இடம்பெறுபவர். அதிலும் ஹூட்கா சர்ச்சையை அவர் கிளப்பியபோது, பல முன்னாள் வீரர்கள் ஏன் இப்போது இதையெல்லாம் இவர் சொல்கிறார், உங்களை பற்றி தோனி வாயை திறந்தால் உங்கள் நிலைமை என்ன ஆகும் என்று எச்சரித்திருந்தனர். இந்த வரிசையில் கடைசியாக இணைந்தது மனோஜ் திவாரி, சதமடித்த பிறகும் என்னை ஏன் அணியிலிருந்து நீக்கினார் என தோனியிடம் கேட்க விரும்புவதாக அவர் விமர்சித்திருந்தார்.

dhoni
‘அமாவாச நீதான் பேசுறியா’.. திடீரென தோனியை பாராட்டி பேசும் கவுதம் கம்பீர் - சமீபத்திய 5 புகழுரைகள்!

தோனியை புறக்கணித்த புஜாரா!

இவர்களெல்லாம் தோனியால் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம். ஆனால் சமீபத்தில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுசெய்திருக்கும் சட்டீஸ்வர் புஜாரா, விக்கெட் கீப்பராக தோனியை விட்டுவிட்டு ரிஷப் பண்ட்டை தேர்வுசெய்திருப்பது ‘இவருக்குமா தோனி மீது வெறுப்பு’ என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கின்ஃபோ உடனான வீடியோவில் பேசிய புஜாரா, தன்னுடன் விளையாடிய வீரர்களில் சிறந்த லெவன் அணியை தேர்வுசெய்ய கேட்டுக்கொண்டார். அதில் தொடக்க வீரர்களாக டிராவிட், சேவாக்கை தேர்ந்தெடுத்து, அவரையே நம்பர் 3 வீரராக போட்டுக்கொண்டார். 4வது, 5வது வீரர்களாக சச்சின் மற்றும் கோலியை தேர்வுசெய்த அவர், 6வது வீரராக விவிஎஸ் லக்சுமனனை சேர்த்தார். அடுத்து விக்கெட் கீப்பராக தோனியை தேர்வுசெய்யாமல் ரிஷப் பண்ட்டை தேர்வுசெய்து அதிர்ச்சி கொடுத்தார். பந்துவீச்சாளர்களாக அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி என 11 வீரர்களை தேர்வுசெய்தார்.

தோனியை தேர்வுசெய்ய மறுத்த இந்த அணி குறிப்பிட்ட எந்த வடிவம் என்றெல்லாம் சொல்லப்படவில்லை. இதனால் தான் புஜாராவுக்குமா தோனி மீது வெறுப்பு என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புஜாரா தோனியின் கேப்டன்சியின் போது தான் இந்திய அணிக்குள் வந்தார். அப்போது தோனி தான் ராகுல் டிராவிட்டுக்கு முன்னதாக புஜாராவை மூன்றாவது இடத்திற்கு உயர்த்தினார். அந்தப் போட்டியில் புஜாரா முக்கியமான 72 ரன்களை அடித்து இந்தியா வெற்றிபெற உதவினார். அதற்குபின் தான் புஜாரா இந்தியாவின் நிரந்தர நம்பர் 3 வீரராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhoni
‘நீங்கள் Social Media-ல் மட்டுமே சிறந்த வீரர்..’ பாபர் அசாமை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com