“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவை பெறாமல் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாழாகி விட்டதாக பல முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மனோஜ் திவாரியும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
gambhir - dinesh - yuvraj - sehwag
gambhir - dinesh - yuvraj - sehwagPT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிரோபி உலகக்கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கும் ஒரேயொரு உலக கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது தலைமையில் தான் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தலைசிறந்த அணியாக தலைநிமிர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு வீரராக போட்டியை முடித்துவைக்கும் சிறந்த பினிசராக இன்றளவும் போற்றப்படும் ஒரு வீரராக தோனி இருந்துவருகிறார்.

இவ்வளவு பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருந்தபோதும் கூட, முடிவில் இந்திய அணிக்காகவும், தன் சொந்த முடிவுகளுக்காவும் தோனி எடுத்த சில முடிவுகள் பல முக்கிய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைத் திணறடித்துள்ளது. சமீப காலமாக சில முன்னாள் இந்திய வீரர்கள் வெளியே வந்து கேப்டன் தோனியின் சரியான ஆதரவை தாங்கள் அனுபவிக்கவில்லை என்றும், அதனால் எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டதாக வெளிப்படையாகக் கூறினர். அந்தவரிசையில் தற்போது முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரியும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை குற்றஞ்சாட்டியுள்ளார்.

MS Dhoni
MS Dhoni

எம்எஸ் தோனியால் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்ட வீரர்களை மூன்று வகையாக வரிசைப்படுத்தலாம், ஒன்று தோனியின் இருப்பால் வாய்ப்பு கிடைக்காமல் போனவர்கள், தோனியின் கிரிக்கெட் முடிவால் வாய்ப்பு கிடைக்காமல் போனவர்கள், தோனியின் சொந்த முடிவுகளால் வாய்ப்பு கிடைக்காமல் போனவர்கள் என்று பிரிக்கலாம். அதன்படி தோனியால் பாதிக்கப்பட்ட வீரர்களாக கூறப்படும் வீரர்கள் யார் என்று பார்க்கலாம்!

gambhir - dinesh - yuvraj - sehwag
"இந்தியா புதிய வீரேந்திர சேவாக்கை கண்டுபிடித்துள்ளது"-ஜெய்ஸ்வாலை புகழ்ந்த முன். இங்கிலாந்து கேப்டன்!

1. தினேஷ் கார்த்திக்:

தினேஷ் கார்த்திக்கை பொறுத்தவரையில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் இருப்பால் பாதிக்கப்பட்ட நேரடி வீரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நவம்பர் 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் அறிமுகமானார். ஆனால் தோனியின் டெஸ்ட் அறிமுகமானது 2005-ம் ஆண்டு மட்டுமே இருந்தது.

dk
dk

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தோனியை விட ஒரு மாதத்திற்கு முன்னரே அறிமுகமானார். முதலில் தினேஷ் கார்த்திக் தான் இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் என்ற சூழல் உருவானது. முதல் 5 போட்டிகளில் கூட தோனி பெரிதாக ரன்களையே அடிக்கவில்லை, இருப்பினும் தினேஷ் கார்த்திக்கிற்கு கொடுக்கப்பட்டதை விட தோனிக்கு தொடர்ந்து அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சரி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தான் தோனி நிலைநின்றுவிட்டார் என்று பார்த்தால், டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு நிரந்தர மாற்றாக தோனி நியமிக்கப்பட்டார்.

dk
dk

இதுகுறித்து நிறைய பேசப்பட்டாலும், “தோனி போன்ற ஒருவீரரால் தான் எனக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பு கிடைக்காமல் போனது என்றால் அதில் எனக்கு சந்தோஷம் தான்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.

gambhir - dinesh - yuvraj - sehwag
"ஜெய்ஸ்வாலை பாராட்ட மாட்டேன்!" - உலகசாதனை படைத்த போதும் மறுத்த கேப்டன் ரோகித்! என்ன காரணம்?

2. வீரேந்தர் சேவாக்:

2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் விரேந்திர சேவாக் இடம்பெற்றிருந்தார். இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை விளையாடிய முத்தரப்பு தொடரில், சேவாக் விளையாடிய முதல் நான்கு ஆட்டங்களில் 6, 33, 11 மற்றும் 14 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியாவின் விளையாடும் XI-ல் இருந்து நீக்கப்பட்டார். அப்போது சேவாக் நீக்கப்பட்டது பெரிய பேசுபொருளாக மாறியது.

sehwag
sehwag

சேவாக் நீக்கம் குறித்து பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, “எங்களிடம் மேலும் (கவுதம் கம்பீர், உத்தப்பா, ரோகித் சர்மா) மூன்று தொடக்க வீரர்கள் இருப்பதால் தான் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது” என்று கூறினார். சேவாக் இருந்த இடத்தில் முத்தரப்பு தொடர் முழுக்க ராபின் உத்தப்பா தொடக்க வீரராக இருந்தார். அதற்கு பின்னரும் சேவாக்கிற்கு வாய்ப்பு வழங்காமல் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக பயன்படுத்தி சோதனை முயற்சியில் இறங்கினார் தோனி. ஆனால் அந்த வாய்ப்பில் எல்லாம் ரோகித் சொற்ப ரன்களில் வெளியேறியதால், தோனி மீது கடுமையான விமர்சனம் விழுந்தது.

sehwag
sehwag

அந்த நிகழ்விற்கு பிறகு ”ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற நினைத்ததாகவும், சச்சின் டெண்டுல்கர் தான் தடுத்துவிட்டதாகவும்” பின்னர் சேவாக் தெரிவித்தார். அதற்கு பிறகு 2011 உலக்கோப்பை வரை ஒருநாள் அணியில் விளையாடிய சேவாக், கோப்பையை வென்று விடைபெற்றார்.

gambhir - dinesh - yuvraj - sehwag
“நீ வரல அதனால நானும் வரல” முட்டிக்கொண்ட ஜெய்ஸ்வால் - சர்ஃபராஸ்! முடிவில் Sarfaraz செய்த GREAT செயல்!

3. யுவராஜ் சிங்:

தோனி மற்றும் யுவராஜ் சிங் காம்போ என்பது எப்போதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான ஒன்றாக இன்றளவும் இருந்துவருகிறது. 2007 டி20 உலகக்கோப்பையில் தோள் கொடுக்கும் தோழனாக சேர்ந்து போராடி உலகக்கோப்பையை வென்ற இவர்களிடையே, 2008ம் ஆண்டு ஒருநாள் கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்ட போது விரிசல் விழுந்ததாக சொல்லப்படுகிறது.

ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க விரும்பினேன் என்று யுவராஜ் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்திய அதேநேரத்தில், ஒரு கேப்டனாக தோனிக்கும், துணை கேப்டனாக எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் எப்போதும் தோனியின் கீழ் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருந்ததாக யுவராஜ் தெளிவுபடுத்தினார்.

Yuvraj Singh
Yuvraj Singh

2011 ஒருநாள் உலகக்கோப்பை வரை உச்சத்தில் இருந்த யுவராஜ் சிங், புற்றுநோயால் கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரிவை கண்டார். புற்றுநோயிலிருந்து வெளிவந்து இந்திய கிரிக்கெட் அணியில் கம்பேக் கொடுக்க காத்திருந்த யுவராஜ் சிங்கை, யோ-யோ டெஸ்ட்டில் தகுதிபெறவில்லை என தோனி தலைமையிலான இந்திய அணி நிராகரித்தது. அப்போது தான் யுவராஜ் சிங்கின் தந்தை ”யுவராஜ் எடுத்த 17 பாய்ண்ட் என்பதே உடற்தகுதிக்கு போதுமானது தான், திட்டமிட்டு அவரை ஒதுக்கிவிட்டார்கள்” என பகிரங்கமாக தோனி மீதும், இந்திய அணி மீதும் குற்றச்சாட்டை வைத்தார். அதற்கு பிறகு ஐபிஎல், ரஞ்சிக்கோப்பை என ஃபார்மிற்கு திரும்பிய யுவராஜ் மீண்டும் இந்திய அணியிம் இடம்பெற்றார்.

MS Dhoni - Yuvraj Singh
MS Dhoni - Yuvraj SinghTwitter

2014 டி20 உலகக்கோப்பை பைனலில் இந்தியா இலங்கையிடம் படுதோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் யுவராஜ் சிங் 21 பந்தில் 11 ரன்கள் எடுத்ததால் தான் இந்தியா தோல்வியை சந்தித்தது என குற்றஞ்சாட்டப்பட்டு, 2015 ஒருநாள் உலகக்கோப்பை அணியிலிருந்து யுவராஜ் சிங்கின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் அப்போதும் தோனியை குறைகூறிய யுவராஜ் சிங் தந்தை, அந்த போட்டியில் ரோகித் சர்மா, தோனி யாருமே சரியாக விளையாடவில்லை “என் மகன் மீதான என் கனவை தோனி சிதைத்துவிட்டார்” என்று விரக்தியை வெளிப்படுத்தினார். அதற்கு பிறகான ஒரு உரையாடலில் “நானும் தோனியும் கிரிக்கெட்டை தாண்டி நெருங்கிய நண்பர்கள் இல்லை” என யுவராஜ் கூறியிருந்தார். முடிவில் இந்தியாவிற்காக 2 உலகக்கோப்பை வென்றுகொடுத்தவரான யுவராஜ் சிங்கிற்கு ஒரு ஃபேர்வெல் போட்டி கூட இல்லாமல் போனது.

gambhir - dinesh - yuvraj - sehwag
’சோத்துலையும் வாங்கியாச்சு.. சேத்துலையும் வாங்கியாச்சு’! - Bazball-ஐ விமர்சித்த முன். ENG வீரர்கள்!

4. மனோஜ் திவாரி:

சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த மனோஜ் திவாரி, இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 அணியில் விளையாடிய போதும் தனக்கு டெஸ்ட் கேப் கிடைக்காதது குறித்து தோனியை குற்றஞ்சாட்டினார்.

தோனி குறித்து கூறிய அவர், “ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான பயிற்சியாட்டாங்களில் சிறப்பாக செயல்பட்ட போதும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதமடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றபோதும் கூட நான் புறக்கணிக்கப்பட்டேன்... ஒருமுறை இரண்டுமுறை அல்ல 14 முறை நான் புறக்கணிக்கப்பட்டேன். ஒரு வீரருக்கு தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும்போது யாரோ ஒருவர் அதை அழித்துவிடுகிறார் என்றால், அதற்குபிறகு அந்த வீரர் அங்கேயே முடிந்துவிடுகிறார்.

tiwari - dhoni
tiwari - dhoni

அப்போது கேப்டனாக இருந்தவர் எம் எஸ் தோனி தான். அவரிடம் ஒரு கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்தால், சதம் அடித்த பிறகும் நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று கேட்க விரும்புகிறேன். குறிப்பாக அந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் என்னைத்தவிர விராட் கோலி, ரோகித், சுரேஷ் ரெய்னா என யாரும் ரன் எடுக்கவில்லை. இப்போது என்னிடம் இழப்பதற்கும் ஒன்றுமில்லை” என்று விரக்தியில் பேசியுள்ளார்.

gambhir - dinesh - yuvraj - sehwag
சதமடித்த போதும் ஏன் வாய்ப்பை பறித்தீர்கள் என தோனியிடம் கேட்க விரும்புகிறேன்! - ஓய்வுபெற்ற IND வீரர்

5. கவுதம் கம்பீர்:

இதுவரை கவுதம் கம்பீர் தோனிக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதில் எப்போதும் டிரெண்டிங்கில் இருந்துவரக்கூடிய ஒருவர். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்களில் வெளியேறியது கூட, தோனியால் தான் என்பது போலான கருத்துக்களை எல்லாம் முன்வைத்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கக்கூடியவர்.

gambhir
gambhir

இவருக்கும் தோனிக்குமான இடைவெளி கூட தொடக்க வீரர்களை சுழற்சிமுறையில் பயன்படுத்தும் தோனியின் திட்டத்தாலே உருவானது. 2008 முத்தரப்பு சிபி தொடரில் சேவாக்குடன் இருந்த பிரச்னை, 2012 சிபி தொடரில் கவுதம் காம்பீருடன் தொடர்ந்தது. முதலில் கம்பீரை தொடக்க வீரராக பயன்படுத்திய தோனி, பின்னர் மீண்டும் சேவாக்கிடமே திரும்பினார். விமர்சனங்களால் அப்படிசெய்தாரா என்பது தெரியவில்லை, தோனியின் அந்த முடிவுக்கு பிறகு இடது கை ஆட்டக்காரர் தனது கேப்டன் மீது முழு நம்பிக்கையை இழந்தார்.

MS Dhoni - Gautam Gambhir
MS Dhoni - Gautam GambhirTwitter

பின்னர் அவருடைய ஆஃப் ஸ்டம்ப் லைன் வீக்னெஸிற்கு பிறகு விரைவாகவே தொடக்க வீரர்கள் இடத்திற்கு ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானை கொண்டுவந்தார் கேப்டன் தோனி. 2016-ல் தன்னுடைய கடைசி சர்வதேச ஆட்டத்தை ஆடிய கவுதம் கம்பீர், தோனி மீதான காண்ட்ரவர்சி கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்துவருகிறார்.

gambhir - dinesh - yuvraj - sehwag
‘அமாவாச நீதான் பேசுறியா’.. திடீரென தோனியை பாராட்டி பேசும் கவுதம் கம்பீர் - சமீபத்திய 5 புகழுரைகள்!

6. ஹர்பஜன் சிங்:

தோனி கேப்டன்சியை எடுத்துக்கொண்ட பிறகு அணியில் இருந்த மூத்த வீரர்களை வெளியேற்றும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினார் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டு அப்போது இருந்தது. அது உண்மையா அல்லது பொய்யா என்ற கருத்திற்கு செல்லாமல், தோனி சிறந்த உடற்தகுதி மற்றும் சிறந்த ஃபீல்டர்களாக இருக்கும் ஒரு அணியை கட்டமைப்பதில் முக்கியத்துவம் கொடுத்தார். அதன்பேரால் பல வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டாலும், பெரும்பாலான மூத்த வீரர்களுக்கு ஃபேர்வெல் போட்டி என்று பெரிதளவில் தோனி தலைமையில் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினை அதிகமாக பயன்படுத்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, பின்னர் அதையே இந்திய அணியிலும் பிரதிபலித்தார். ஒரு கட்டத்தில் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, முதல் ஸ்பின்னராக அஸ்வின் பயன்படுத்தப்பட்டார்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

தன்னுடைய நீக்கம் குறித்து பின்னர் பேசியிருந்த ஹர்பஜன், “ஒரு வீரர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருந்தபோதும், அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனால் அல்லது அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் அவரிடம் சொல்லப்படாமல் போனால், மனதில் பல கேள்விகள் எழும் தானே. நான் அணியில் இருந்து வெளியேறிய போதும் எனக்கு அந்த கேள்வி எழுந்தது, நான் அதுகுறித்து பலரிடம் கேட்டேன், ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று விரக்தியில் ஹர்பஜன் சிங் பேசியிருந்தார்.

Harbhajan Singh
Harbhajan Singh

இதன் எதிரொலியாக “அஸ்வின் போல எங்களுக்கும் அதிகப்படியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் நாங்களும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்போம்” என்றும், ”தோனி தான் தனியாளாக உலகக்கோப்பை வென்றார்” போன்ற கருத்துகள் அவரிடமிருந்து வந்தது.

gambhir - dinesh - yuvraj - sehwag
’யார் சாமி நீ’! உலகத்தில் ஒரேயொரு பேட்ஸ்மேனாக பேர்ஸ்டோ படைத்த மோசமான சாதனை!

7. இர்ஃபான் பதான்:

ஜாகீர் கானை போல எக்காலத்திற்கும் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக வரவேண்டிய இர்ஃபான் பதான், தோனியின் நிர்பந்தத்தால் காணாமல் போனார். அணியில் இருந்த ஒவ்வொரு முறையும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த இர்ஃபான் பதானிடமிருந்து, அணி மேலும் சில எக்ஸ்ட்ரா வேலைகளை வாங்கியது. வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும் ஆல்ரவுண்டர் திறமையை எதிர்பார்த்த இந்திய அணி நிர்வாகம், அவரை ஒரு பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்க நிர்பந்தித்தது.

irfan pathan
irfan pathan

இதில் கொடுமை என்னவென்றால் 2008-ம் ஆண்டு இந்தியாவின் பெர்த் டெஸ்ட் வெற்றியின் நாயகனாக ஜொலித்த இர்ஃபான் பதான், ஒரு வலுவான ஆஸி அணிக்கு எதிராக ஒரு அற்புதமான ஆல்ரவுண்ட் ஷோவாக இருந்தார். அதன் பிறகு பதான் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மேலும், 2012ல் இலங்கைக்கு எதிரான பல்லேகெலே ஒருநாள் போட்டியில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளுடன் ஆட்ட நாயகனாக இருந்த போதிலும், பதான் அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. அவர் 28 வயதை எட்டுவதற்கு முன்பே இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

gambhir - dinesh - yuvraj - sehwag
7 டெஸ்ட்டில் ”2 சதம், ஒரு இரட்டை சதம், 3 அரைசதம்”! சேவாக்கின் சாதனையை சமன்செய்த ஜெய்ஸ்வால்!

8. சுரேஷ் ரெய்னா:

நல்ல ஃபாரிமிலிருக்கும் போதே காணாமல் போன வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் வீரராக நீண்ட போட்டிகளில் விளையாடவேண்டிய ஒருவர், தன்னுடைய திருமணத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்காமலேயே காணாமல் போனார். அப்போதும் இந்திய அணியின் கேப்டனாக தோனியே இருந்தார். 2015 ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சதம், 2 அரைசதங்கள் அடித்தபோதும் கூட உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு ரெய்னாவிற்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Dhoni and Raina
Dhoni and Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக போட்டிகளில் விளையாடி “மிஸ்டர் ஐபிஎல்” இடம்பெற்றபோதும் கூட, 2020 ஐபிஎல் தொடரில் தோனிக்கு இணையான ஹோட்டல் அறை கேட்டதால் (அப்படி சொல்லப்பட்டது) ரெய்னா சென்னை அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் விளையாட வைத்தாலும் அதற்குபிறகு ரெய்னா ஃபார்ம் அவுட்டால் காணாமல் போனார்.

gambhir - dinesh - yuvraj - sehwag
அவசரமாக சென்னை திரும்பிய அஸ்வின்! 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து திடீர் விலகல்!

9. பத்ரிநாத்:

2011 ஒருநாள் உலகக்கோப்பையில் பத்ரிநாத்தின் பெயரும் இருந்தது, ஆனால் அவருக்கு பதிலாக விராட் கோலியை தோனியின் தலைமையிலான அணி எடுத்துச்சென்றது.

பத்ரிநாத்
பத்ரிநாத்

அப்போது அணித்தேர்வு தலைவராக இருந்த சீக்கா, பத்ரிநாத்தை எடுத்துச்செல்லுமாறு கேட்டதாகவும் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விராட் கோலியை தேர்வுசெய்ததாகவும் பின்னர் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். அதற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத்தை வேண்டாம் என ஸ்டீபன் பிளமிங் சொன்னாலும், அவரை அணியில் எடுத்து விளையாடினார் மகேந்திர சிங் தோனி. ஆனால் தோனியின் முக்கிய முடிவால் பத்ரிநாத் உலகக்கோப்பை ஆடும் வாய்ப்பை இழந்திருந்தாலும், விராட் கோலி போன்ற ஒரு ஜாம்பவான் வீரர் உருவெடுத்தார்.

gambhir - dinesh - yuvraj - sehwag
கடினமான நேரத்தில் அஸ்வினுக்காக வாடகை விமானத்தை ஏற்பாடு செய்த பிசிசிஐ! ரவி சாஸ்திரி பாராட்டு!

10. அஜித் அகர்கர்:

அஜித் அகர்கர் தோனி எதிர்ப்பார்த்த ஆல்ரவுண்டர் மெட்டீரியலாக இருந்த போதும், சில மோசமான போட்டிகளுக்கு பிறகு அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய பெயர் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் தோனியின் ஆட்சிக் காலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

அஜித் அகர்கர்
அஜித் அகர்கர்

இந்தியாவுக்காக 288 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஜித் அகர்கர், அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது அதிக ODI விக்கெட்டுகளை வீழ்த்தியவராவார். 2000 ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் மிகச்சிறந்த ஒரு நாள் பந்து வீச்சாளராக இருந்தபோதிலும், அவர் தன்னுடைய கடைசி சர்வதேசப் போட்டியை 2007-ல் 30 வயதிற்கு முன்பே விளையாடினார். டிராவிட் கேப்டன்சியில் கடைசி போட்டியை விளையாடிய அவரை, தோனி கேப்டனாக திரும்பி பார்க்கவே இல்லை.

gambhir - dinesh - yuvraj - sehwag
’கிரிக்கெட் Brand ஆகணும்னு 11 வயசுல மும்பைக்கு வந்துட்டான்’ - பானிபூரி விற்ற ஜெய்ஸ்வால் கடந்த பாதை!

சவுரங் கங்குலி, தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா என எந்த கேப்டன் ஆக இருந்தாலும் எதோ ஒரு வகையில் இதுபோன்ற விமர்சனங்களை சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. இதில் இரண்டுவிதமான பார்வை உள்ளது. ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டிய கடமை அணியின் கேப்டனுக்கு மட்டுமே உண்டு. சீனியர் வீரர்களுக்கு பதில் இளம் வீரர்களை உள்ளே கொண்டு வருவதும் அவர்களுடைய பணி தான். சில உளவியல் ரீதியான சிக்கல்களும் முன்னாள் சீனியர் வீரர்களுடன் எழும். இவையெல்லாம் கருத்தில் கொண்டே தோனி மீதான விமர்சனங்களை பார்க்க வேண்டும். ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்களின் இருப்பை உறுதி செய்த பெருமை தோனியையே சாரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com