2026 ipl auction
2026 ipl auctionx

Live Blog : 2026 ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. நொடிக்கு நொடி UPDATE!!

2026 ஐபிஎல்லுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 240 இந்தியர்கள் உட்பட மொத்தம் 350 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்று இருக்கின்றனர்.

பிரித்வி ஷா - 75 லட்சம்

பிரித்வி ஷா
பிரித்வி ஷாpt web

இந்திய தொடக்கவீரர் பிரித்வி ஷாவை அடிப்படை விலையான 75 லட்சத்திற்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

2 யு19 வீரர்களை வாங்கிய ஆர்சிபி

கடைசி நேரத்தில் இந்திய யு19 வீரர்களான விஹான் மல்கோத்ரா, கனிஷ்க் சௌஹான் இருவரும் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டனர்.

மேலும் ஒரு இந்திய ஆல்ரவுண்டரான விக்கி ஓஸ்ட்வாலை அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு வாங்கியது ஆர்சிபி.

ஜாக் எட்வர்ட்ஸ் - 3 கோடி

ஜாக் எட்வர்ட்ஸ்
ஜாக் எட்வர்ட்ஸ்

ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸை 3 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.

லுங்கி இங்கிடி - டெல்லி

லுங்கி இங்கிடி
லுங்கி இங்கிடி

தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடியை அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

பென் ட்வர்சூய்ஸ் - பஞ்சாப்

ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் பென் ட்வர்சூய்ஸை 4.40 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஜோர்டன் காக்ஸ் - ஆர்சிபி

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை அடிப்படை விலையான 75 லட்சத்துக்கு வாங்கியது ஆர்சிபி.

ஜோஷ் இங்கிலீஸ் - 8.60 கோடி

ஜோஸ் இங்கிலீஸ்
ஜோஸ் இங்கிலீஸ்

ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஜோஷ் இங்கிலீஸை 8.60 கோடிக்கு எடுத்தது லக்னோ அணி.

ஷிவம் மாவி -ஹைத்ராபாத்

ஷிவம் மாவி
ஷிவம் மாவி

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவியை அடிப்படை விலையான 75 லட்சத்துக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் அணி.

மேட் ஹென்றி, ராகுல் சாஹர் - சிஎஸ்கே

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றியை அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.

Matt Henry
Matt HenryR Senthil Kumar

அதேபோல இந்திய ஸ்பின்னரான ராகுல் சாஹரை 5.20 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

ரச்சின் ரவீந்திரா, ஆகாஷ் தீப் - கேகேஆர்

ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திராweb

நியூசிலாந்தின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திராவை அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

அதேபோல இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பை அடிப்படை விலையான 1 கோடிக்கு வாங்கியது கேகேஆர்.

லியாம் லிவிங்ஸ்டன் - 13 கோடி

Liam Livingstone
Liam Livingstone

முதல் சுற்றில் விலை போகாத ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டனை 13 கோடிக்கு விலைக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் அணி.

சர்பராஸ் கான் - சிஎஸ்கே

சர்பராஸ் கான்
சர்பராஸ் கான்web

இந்திய வீரர் சர்பராஸ் கானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான 75 லட்சத்திற்கு வாங்கியது. சர்பராஸ் கான் சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

தேஜஸ்வி தஹியா - 3 கோடி

இணையத்தில் கவனம்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தேஜஸ்வி தஹியாவை 3 கோடிக்கு விலைக்கு வாங்கியது கேகேஆர் அணி. டெல்லி பிரீமியர் லீக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தேஜஸ்வி, தன்னுடைய ஹார்ட் ஹிட்டிங் திறமைக்கு பெயர் போனவர்.

சோஷியல் மீடியா வீரர் UNSOLD

எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட்டையும் விளையாடாமல் சோஷியல் மீடியோவில் தன்னுடைய பயிற்சி வீடியோக்கள் வைரலானதால் புகழ்பெற்ற வலது கை ஸ்பின்னரான இசாஸ் சவாரியா UNSOLDஆக சென்றுள்ளார்.

2026 ipl auction
Instagram Reels to IPL.. சாதனையை நோக்கி 20 வயது இளைஞர்.. ஏலப்பட்டியலில் இடம்பெற்றது எப்படி?

அல்சாரி ஜோசப் UNSOLD

அல்சாரி ஜோசப்
அல்சாரி ஜோசப்web

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசபை யாரும் வாங்கவில்லை.

கூப்பர் கானலி - 3 கோடி

ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரான கூப்பர் கானலியை 3 கோடிக்கு விலைக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

சலீல் அரோரா - SRH

விக்கெட் கீப்பர் சலீல் அரோராவை 1.50 கோடிக்கு விலைக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.

முருகன் அஸ்வின் UNSOLD

தமிழக வீரரான முருகன் அஸ்வினை யாரும் வாங்கவில்லை.

2 ஆல்ரவுண்டர்கள் - 5.20 கோடி - ஆர்சிபி 

மங்கேஷ் யாதவ்
மங்கேஷ் யாதவ்

இரண்டு இந்திய ஆல்ரவுண்டர்களான மங்கேஷ் யாதவை 5.20 கோடிக்கும், சட்விக் தேஸ்வாலை அடிப்படை விலையான 30 லட்சத்திற்கும் விலைக்கு வாங்கியது ஆர்சிபி. மங்கேஷ் யாதவ் மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடியவர்.

மத்திய பிரதேச டி20 லீக்கில் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீசக்கூடியவர்.

அமன் கான் - சிஎஸ்கே

ஹிட்டிங் ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேனான அமன் கானை 40 லட்சத்திற்கு வாங்கியது சென்னை அணி.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் குல்தீப் சென், சக்காரியா இருவரும் UNSOLDஆக சென்றனர்.

முஸ்தபிசூர் ரஹ்மான் - கேகேஆர்

முஸ்தஃபிசூர் ரஹ்மான்
முஸ்தஃபிசூர் ரஹ்மான்

வங்கதேசத்தின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசூர் ரஹ்மானை விலைக்கு வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிட்டன. 9 கோடிவரை சென்ற சிஎஸ்கே அணி பின்வாங்கிய நிலையில், கேகேஆர் 9.20 கோடிக்கு தட்டிச்சென்றது.

டிம் சீஃபர்ட் - 1.50 கோடி

நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் சீஃபர்ட்டை அடிப்படை விலையான 1.50 கோடிக்கு விலைக்கு வாங்கியது கேகேஆர். சமீபத்தில் டி20 போட்டியில் சதமடித்திருந்தார்.

லுங்கி இங்கிடி UNSOLD

லுங்கி இங்கிடி
லுங்கி இங்கிடி

தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளரான லுங்கி இங்கிடியை யாரும் வாங்கவில்லை.

ஜோஷ் இங்கிலீஸ் UNSOLD

ஜோஸ் இங்கிலீஸ்
ஜோஸ் இங்கிலீஸ்

ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஜோஷ் இங்கிலீஸை யாரும் வாங்கவில்லை.

சிஎஸ்கே - மேத்யூ ஷார்ட்

மேத்யூ ஷார்ட்
மேத்யூ ஷார்ட்

ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை அடிப்படை விலையான 1.50 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஜேசன் ஹோல்டர் - 7 கோடி

சிஎஸ்கே அணிக்கு சூட்டாகும் வீரராக பார்க்கப்பட்ட ஜேசன் ஹோல்டரை 7 கோடிக்கு விலைக்கு வாங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி. சென்னை அணி கடைசிவரை போட்டிப்போட்டாலும் குஜராத் அணி ஹோல்டரை தட்டிச்சென்றது.

வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் UNSOLD

வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களான மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், சீன் அபாட், பென் ட்வர்சூய்ஸ், செடிகுல்லா அடல் போன்ற வீரர்கள் விற்கப்படவில்லை.

ராகுல் திரிபாதி - 75 லட்சம்

ராகுல் திரிபாதி
ராகுல் திரிபாதிweb

கடந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக சோபிக்காத ராகுல் திரிபாதியை அடிப்படை விலையான 75 லட்சத்திற்கு கேகேஆர் அணி வாங்கியது.

பதும் நிசாங்கா - 4 கோடி

பதும் நிசாங்கா
பதும் நிசாங்காcricinfo

இலங்கை அணியின் அதிரடி வீரரான பதும் நிசாங்காவை 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

19, 20 வயது வீரர்களை 28.40 கோடிக்கு வாங்கிய CSK.. யார் அந்த 2 பேர்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் ஏலத்தில் 19 வயது விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா மற்றும் 20 வயது ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீரை மொத்தமாக 28.40 கோடிக்கு வாங்கியது. இவர்கள் இருவரும் எதிர்கால சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு, சிஎஸ்கே அணி புதிய அணியை கட்டமைக்கிறது.

செய்தியை முழுமையாகப் படிக்க கீழே க்ளிக் செய்யவும்

2026 ipl auction
19, 20 வயது வீரர்களை 28.40 கோடிக்கு வாங்கிய CSK.. யார் அந்த 2 பேர்?

ரூ. 50 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த கரண் சர்மாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. குமார் கார்த்திகேயாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

விக்னேஷ் புத்தூர் அவரது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

பிரசாந்த் சோலாங்கி கொல்கத்தா அணியால் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வாஹிதுல்லா ஜாத்ரான், ஷிவம் சுக்லா போன்ற வீரர்கள் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்தனர். இவர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்திய பந்துவீச்சாளரான யாஷ்ராஜ் புஞ்சாவை ராஜஸ்தான் அணி அவரது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

சுஷாந்த் மிஸ்ரா

30 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்த சுஷாந்த் மிஸ்ராவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தாவும் ராஜஸ்தானும் போட்டியிட்ட நிலையில், 90 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் வாங்கியது.

வன்ஷ் பேடி, துஷார் ரஹேஜா, ராஜ் லிம்பானி, சிமர்ஜித் சிங், ஆகாஷ் மாத்வால் போன்ற வீரர்கள் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்தனர். இவர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

30 லட்சம் அடிப்படை விலைக்கு வந்த அஷோக் சர்மாவை 90 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி. அதேபோல் 30 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த கார்த்திக் தியாகியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வராத நிலையில், அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கேகேஆர் அணி.

விக்கெட் கீப்பர் தேஜஸ்வி சிங்

அன்கேப்டு விக்கெட் கீப்பரான தேஜஸ்வி சிங்கை அடிப்படை விலையான 30 லட்சத்திலிருந்து 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி.

விக்கெட் கீப்பர் முகுல் சௌத்ரி

முகுல் சௌத்ரி
முகுல் சௌத்ரி

அன்கேப்டு விக்கெட் கீப்பரான முகுல் சௌத்ரியை அடிப்படை விலையான 30 லட்சத்திலிருந்து 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

சிஎஸ்கே வாங்கிய முதல் வீரர்.. யார் இந்த அகீல் ஹொசைன்..? WI ஆல்ரவுண்டர்!

2026 ipl auction
சிஎஸ்கே வாங்கிய முதல் வீரர்.. யார் இந்த அகீல் ஹொசைன்..? WI ஆல்ரவுண்டர்!

விக்கெட் கீப்பர் கார்த்திக் ஷர்மா சென்னை சூப்பர் கிங்ஸ்

ரூ. 30 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த கார்த்திக் ஷர்மாவை ஏலத்தில் எடுக்க மும்பையும் லக்னோவும் ஆரம்பத்தில் போட்டியைத் தொடங்கினாலும், கேகேஆர் இடையில் புகுந்தது. பின் 2.80 கோடி வரை லக்னோவும் கொல்கத்தாவும் போட்டியிட்டன. பின் சென்னை அணி களத்திற்கு வந்தது. சென்னை அணியும் கொல்கத்தா அணியும் இறுதி வரை போராடின. முடிவில், சென்னை அணி 13 கோடிக்கு ஏலத்தில் எடுக்க இருந்தது, பின் ஹைதராபாத் அணி உள்ளே நுழைந்தது. முடிவில் 14.20 கோடிக்கு சென்னை அணி கார்த்திக் ஷர்மாவை வாங்கியது.

ஷிவாங் குமார் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தனுஷ் கோட்டியான், கமலேஷ் நாகர் கோட்டி, சன்விர் சிங், ருஷித் அஹீர் போன்றோர் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இவர்கள் நால்வரும் ரூ. 30 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்தனர்.

பிரசாந்த் வீர்

பிரசாந்த் வீர் ரூ.30 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்தார். மும்பையும் லக்னோவும் போட்டிபோட இடையில் சென்னை புகுந்தது. மும்பையும் லக்னோவும் போட்டியில் இருந்து வெளியேற சென்னையும் ராஜஸ்தானும் கடுமையாக போட்டியிட்டது. பின் ராஜஸ்தான் 6 கோடியளவில் விலகிக்கொள்ள ஹைதராபாத் அணி உள்ளே வந்தது,. இரு அணிகளும் 10 கோடிக்கும் மேலாக போட்டியிட்டது.

ஆவேஷ் கான் அன்கேப்ட் வீரராக அதிகம் ஏலத்திற்கு போனவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இன்று அந்த சாதனையை பிரசாந்த் வீர் படைத்திருக்கிறார்.

முடிவில், 14.20 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்திற்கு எடுக்கப்பட்டார்.

மஹிபால் லோம்ரோர், ஏடன் டாம் விற்கப்படவில்லை

ரூ.50 லட்சம் அடிப்படை விலைக்கு வந்த லோம்ரோர் மற்றும் ரூ. 30 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த ஏடன் டாம் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

ராஜவர்தன் ஹங்கரேக்கர்

ரூ.40 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த ஹங்கரேக்கர் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

விஜய் சங்கர் விற்கப்படவில்லை. ரூ.30 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்தார்.

அகிப் நபி

ரூ. 20 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த நபியை ஏலத்தில் எடுக்க டெல்லியும் ராஜஸ்தானும் போட்டியிட்டது. 1 கோடியை நெருங்கியதும் ராஜஸ்தான் விலகிக்கொள்ள, பெங்களூரு அணி உள்ளே புகுந்தது. பெங்களூருக்கும் டெல்லிக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது. 2 கோடியை நெருங்கியதும் பெங்களூரு அணி விலகிக்கொள்ள ஹைதராபாத் அணி உள்ளே வந்தது. விறுவிறுவென விலை ஏற 6 கோடியை நெருங்கியதும் ஹைதராபாத் அணி ஏலத்தில் இருந்து விலகும் நிலையில் இருந்தது. பின் மீண்டும் ஹைதராபாத் அணி ஏலத்திற்குள் புகுந்தது. முடிவில் 8.40 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார் அகிப் நபி..

Uncapped all-rounders - Set 7

இதில், அகிப் நபி, ராஜவர்தன் ஹங்கர்கேகர், தனுஷ் கோட்டியன், ஷிவாங் குமார், மஹிபால் லொம்ரோர், கம்லேஷ் நாகர்கோட்டி, விஜய் ஷங்கர், சன்வீர் சிங், எதன் டோம், பிரஷாந்த் வீர் போன்ற வீரர்கள் இருந்தனர். இதில் பெரும்பாலான வீரர்கள் 30 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்திருக்கின்றனர். ஹங்கரேக்கர் மட்டும் 40 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்தார்.

2026 ஐபிஎல் ஏலம்| கழட்டிவிட்ட சிஎஸ்கே.. 18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!

2026 ஐபிஎல் ஏலத்தில் பதிரானா 18 கோடிக்கு ஏலம்போனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வெளியிடப்பட்ட அவருக்கு, லக்னோ, டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

முழுவதுமாகப் படிக்க.... கீழே

2026 ipl auction
2026 ஐபிஎல் ஏலம்| கழட்டிவிட்ட சிஎஸ்கே.. 18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!

இதுவரை விற்கப்பட்ட வீரர்கள்

கேமரூன் கிரீன் – ரூ.25.20 கோடி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மதீஷா பதிரானா – ரூ.18 கோடி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ரவி பிஷ்னோய் – ரூ.7.20 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ்

வெங்கடேஷ் ஐயர் – ரூ.7 கோடி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

டேவிட் மில்லர் – ரூ.2 கோடி – டெல்லி கேப்பிடல்ஸ்

வனிந்து ஹசரங்கா – ரூ.2 கோடி – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

பென் டக்கெட் – ரூ.2 கோடி – டெல்லி கேப்பிடல்ஸ்

ஃபின் ஆலன் – ரூ.2 கோடி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஜேகப் டஃபி – ரூ.2 கோடி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஆன்ரிச் நோர்ட்ஜே – ரூ.2 கோடி – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

அகீல் ஹோசெயின் – ரூ.2 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ்

க்விண்டன் டி காக் – ரூ.1 கோடி – மும்பை இந்தியன்ஸ்

அன்கேப்ட் பேட்ஸ்மேன்கள்

அதர்வா டைட், அன்மோல்ப்ரீத் சிங், அபினவ் தேஜ்ரானா, அபினவ் மனோஹர், யஷ் துல், ஆர்யா தேசாய் போன்ற 6 வீரர்கள் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்தனர். ஆனால், இவர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் முஜீப்புர் ரஹ்மான் போன்றோர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

அகீல் ஹோசெயின் – ரூ.2 கோடி CSK

மேற்கு இந்திய தீவுகள் ஸ்பின்னர் அகீல் ஹோசெயின், ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்தார். வேறு எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன் வராததால் அடிப்படை விலையிலேயே, CSK அகீல் ஹோசெயினை அணியில் சேர்த்தது.

ரவி பிஷ்னோய்

ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்த ரவி பிஷ்னோய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் கடுமையாக போட்டியிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் இணைந்தது. இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்ட நிலையில் சி எஸ் கே ஏலத்தில் இருந்து வெளியேறுவதும் உள்ளே வருவதுமாக இருந்தது.

பின் 6 கோடி வரை சென்னை அணி ஏலத்தில் போட்டியிட்ட நிலையில், பின் விலகியது. இதனையடுத்து ஹைதராபாத் அணி ரூ. 6.20 கோடிக்கு ஏலத்திற்குள் வந்த நிலையில், ரூ. 7.20 கோடிக்கு ராஜஸ்தான் அணி பிஷ்னோயை தூக்கியது.

ஐபிஎல் ஏலம்| RCB, MI தட்டித்துக்கிய முக்கிய வீரர்கள்.. 25.20 கோடிக்கு சென்ற கேமரூன் க்ரீன்!

2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அபுதாபியில் நடைபெற்றுவருகிறது. எப்போதும் போல சில முக்கியமான வீரர்கள் கவனம் ஈர்த்த நிலையில், எதிர்ப்பார்க்கப்பட்ட பல வீரர்கள் விற்கப்படவில்லை.

முழுவதுமாகப் படிக்க.... கீழே

2026 ipl auction
ஐபிஎல் ஏலம்| RCB, MI தட்டித்துக்கிய முக்கிய வீரர்கள்.. 25.20 கோடிக்கு சென்ற கேமரூன் க்ரீன்!

ஆன்ரிச் நோர்ட்ஜே – ரூ.2 கோடி LSG

ஆன்ரிச்
ஆன்ரிச்

ஆன்ரிச் நோர்ட்ஜே ரூ. 2 கோடி அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த நிலையில், அவரை லக்னோ அணி அடிப்படை விலைக்கே ஏலத்திற்கு எடுத்தது.

ஃபஸல்ஹக் ஃபரூக்கி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் – விற்கப்படவில்லை

ஆஃப்கானிஸ்தான் வீரர் ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ரூ.1 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்த நிலையில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன், ரூ.1.50 கோடி அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த நிலையில் அவரையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

1 கோடி ரூபாய் அடிப்படை விலைக்கு ஏலத்திற்குள் நுழைந்த ராகுல் சாஹரும் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

பதிரானா - 18 கோடி

பதிரானா
பதிரானாweb

ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்த மதீஷா பதிரானாவை ஏலத்தில் எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் இருந்தே போட்டியிட்டது. பின் லக்னோ போட்டிக்கு வர பதிரானாவின் விலை ரூ.10 கோடியை கடந்தது. டெல்லி இடையிடையே சிறிது யோசித்துக் கொண்டிருந்த நிலையில் இறுதியாக ரூ.15.80 கோடியில் போட்டியிக் இருந்து விலகியது. பின் KKR அணி பதிரானாவைக் குறிவைத்து ஏலத்தில் இணைந்தது. ரூ.16 கோடியில் ஏலத்தில் நுழைந்த KKR தீவிரமாக போட்டியிட்ட நிலையில், ரூ.18 கோடியில் LSG போட்டியிலிருந்து விலகியது. பின் ரூ.18 கோடிக்கு மதீஷா பதிரானாவை கொல்கத்தா வாங்கியது.

ஜேகப் டஃபி – ரூ.2 கோடி RCB

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேகப் டஃபி, ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்தார். வேறு எந்த அணியும் அவரை வாங்க முன் வராத நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி ரூ.2 கோடிக்கு ஜேகப் டஃபியை வாங்கியது,

3 வீரர்கள் UNSOLD

தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.

அதேபோல் சிவம் மாவி அடிப்படை விலையான 1 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரையும் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடிப்படை விலை ரூ. 1 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். அவரை எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

மேட் ஹென்றி

மேட் ஹென்றி அடிப்படை விலை 2 கோடிக்கு ஏலத்திற்கு வந்த நிலையில் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை

ஃபின் ஆலன் – ரூ.2 கோடி KKR

KKR தனது இரண்டாவது வீரராக ஃபின் ஆலனை வாங்கியிருக்கிறது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த அவர் அதே விலைக்கு KKR அணியில் இணைந்திருக்கிறார்.

பென் டக்கெட் – ரூ.2 கோடி DC

டெல்லி கேப்பிடல்ஸ் (DC) பென் டக்கெட்டை ரூ.2 கோடி என்ற அடிப்படை விலைக்கே ஏலத்திற்கு எடுத்தது. வேறு எந்த அணியும் பென் டக்கெட்டிற்கு போட்டியிடாததால் அடிப்படை விலையிலேயே பென் டக்கெட் DC-க்கு ஏலத்திற்குச் சென்றார்.

3 வீரர்கள் UNSOLD

ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜானி பேர்ஸ்டோ, போன்றோர் UNSOLD ஆகினர்.

குர்பாஸ் ரூ. 1.50 கோடி என்ற அடிப்படை விலைக்கும், ஜானி பேர்ஸ்டோ ரூ. 1 கோடி என்ற அடிப்படை விலைக்கும், ஜேமி ஸ்மித் ரூ. 2 கோடி என்ற அடிப்படை விலைக்கும் ஏலத்திற்கு வந்தனர். ஆனால், இவர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

க்விண்டன் டி காக் – ரூ.1 கோடி MI

டி காக்
டி காக்எக்ஸ் தளம்

ரூ.1 கோடி அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் (MI) டி காக்கை தூக்கியது. வேறு எந்த அணியும் டி காக்கை அணிக்குள் எடுக்க முன் வராததால், MI தனது முதல் வீரராக க்விண்டன் டி காக்கை அணியில் சேர்த்தது.

கே.எஸ். பாரத் – UNSOLD

கே.எஸ். பாரத்தின் அடிப்படை விலை ரூ.75 லட்சம். எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை.

தீபக் ஹூடா – UNSOLD

ரூ.75 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்த இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

வெங்கடேஷ் ஐயர் – ரூ.7 கோடிக்கு RCB-க்கு விற்பனை

வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்web

முன்னாள் KKR ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்தார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) ஏலத்தைத் தொடங்க குஜராத் டைட்டன்ஸ் ரூ.2.20 கோடியில் ஏலத்திற்குள் வந்தது. பின் GT ரூ.2.80 கோடியில் விலகிக்கொள்ள RCB ரூ.3 கோடிக்கு ஏலத்திற்குள் வந்தது. லக்னோ வெங்கடேஷ் ஐயருக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தது. பின் ரூ.3.60 கோடியில் இருந்து KKR ஏலத்திற்குள் வந்தது. கடந்த சீசனிலும் RCB மற்றும் KKR அணிகள் வெங்கடேஷ் ஐயருக்காக போட்டியிட்டன. ஆர்சிபி 23.5 கோடி வரை வெங்கடேசஷ் ஐயருக்குப் போட்டியிட்டது.

இன்றைய ஏலத்தில் கேகேஆர் ஆர்சிபி போட்டி போட்டுக்கொண்டு முன்னேறிக் கொண்டு இருக்க ரூ.7 கோடிக்கு RCB, வெங்கடேஷ் ஐயரை அணியில் சேர்த்தது.

வனிந்து ஹசரங்கா - லக்னோ

ஹசரங்கா
ஹசரங்கா

அனுபவமுள்ள இலங்கை ஆல்ரவுண்டரான வனிந்து ஹசராங்காவை அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

5 வீரர்கள் UNSOLD

கேமரூன் க்ரீனுக்கு பிறகு எதிர்ப்பார்க்கப்பட்ட வீரரான இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன், சர்பராஸ் கான், வியான் முல்டர், கஸ் அட்கின்ஸன், ரச்சின் ரவீந்திரா முதலிய வீரர்கள் அன்சோல்டாக சென்றனர்.

25.20 கோடிக்கு ஏலம்போன கேமரூன் க்ரீன்

2026 ஐபிஎல் ஏலத்தில் அதிகவிலைக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன், நினைத்ததை போலவே 25.20 கோடி ரூபாய்க்கு சென்றுள்ளார்.

கேமரூன் க்ரீன்
கேமரூன் க்ரீன்

கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே வலுவான போட்டி நிலவிய நிலையில், 25 கோடிவரை சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தை கைவிட்டது. 2 கோடி அடிப்படை விலையிலிருந்து 25.20 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணிக்கு சென்றுள்ளார் கேமரூன் க்ரீன்.

டெவான் கான்வே, பிரித்வி ஷா

அடுத்து பட்டியலிடப்பட்ட டெவான் கான்வே மற்றும் பிரித்வி ஷா இருவரையுமே யாரும் வாங்க முன்வரவில்லை, அன்சோல்டாக சென்றனர்

டேவிட் மில்லர் - டெல்லி கேபிடல்ஸ்

david Miller
david Miller Adam Hunger

ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் மில்லரை அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்

ஜேக் பிரேசர் மெக்கர்க்

Summary

ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரரான ஜேக் பிரேசர் மெக்கர்க் அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலம் வந்தார்.. ஆனால் அவரை யாரும் வாங்க முன்வராததால் விற்கப்படவில்லை.

2026 ஐபிஎல் ஏலம் தொடங்கியது..

2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.. மொத்தமுள்ள 77 காலி இடங்களுக்கு மொத்தம் 350 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com