சிஎஸ்கே வாங்கிய முதல் வீரர்.. யார் இந்த அகீல் ஹொசைன்..? WI ஆல்ரவுண்டர்!
2026 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான அகீல் ஹொசனை அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியுள்ளது. ஜடேஜா வெளியேறியதிலிருந்து அகீல் ஹொசைன் அதிகளவில் பேசுபொருளாக இருந்தார். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் திறமையான இவர், சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கட்டமைக்க உதவுவார்.
2026 ஐபிஎல்லுக்கு முன்னதாக தங்களுடைய மேட்ச் வின்னிங் வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் பதிரானா இருவரையும் வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த 4 வருடத்திற்கான எதிர்கால அணியை கட்டமைக்கும் முயற்சியில் இருக்கிறது..
ஏலத்தில் எப்போதும் வயதான அனுபவமிக்க வீரர்களை குறிவைக்கும் சிஎஸ்கே அணியின் வியூகம் 2025 ஐபிஎல்லில் பெற்ற மரண அடிக்கு பிறகு மாறியுள்ளது.. தோனி இல்லாதபோதும் எதிர்கால சிஎஸ்கே அணி ஜொலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் சென்னை அணி நிர்வாகம், ஆயுஸ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸை தொடர்ந்து 3 இளம்வீரர்களை குறிவைத்துள்ளது.
அந்தவகையில் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான அகீல் ஹொசனை விலைக்கு வாங்கியுள்ளது.
யார் இந்த அகீல் ஹொசைன்..?
2026 ஐபிஎல் மினி ஏலத்தில் கேமரூன் க்ரீன் மற்றும் ரவி பிஸ்னோய் இரண்டு வீரர்களுக்கு பிட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் முழுமையாக செல்லமுடியவில்லை. இந்தசூழலில் யாரை சென்னை அணி எடுக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பில், 32 வயது வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான அகீல் ஹொசனை அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஜடேஜா வெளியேறியதிலிருந்தே அகீல் ஹொசைன் என்ற பெயர் தான் அதிகளவில் பேசுபொருளாக இருந்தது. ஜடேஜாவை போல அதே பவுலிங் ஆக்சனுடன் பந்துவீசும் அகீல் ஹொசைன், லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கு வந்து பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய ஃபினிசிங் வீரராக பார்க்கப்படுகிறார்.
பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தும் திறமையை கொண்டிருக்கும் இவர், சிஎஸ்கே குழுமத்தின் மற்றோரு அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுவருகிறார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்மீது அதிக நம்பிக்கையில் இருந்துவருகிறது.
மொத்தமாக டி20 போட்டிகளில் 7 எகானமியுடன் 237 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அரைசதமடித்திருக்கும் அகீல் ஹொசைன், முதல் தர கிரிக்கெட்டில் சதமும் அடித்திருக்கிறார்.

