\
இந்தியா - நியூசிலாந்து
இந்தியா - நியூசிலாந்துweb

FINAL| வாய்விட்ட சாண்ட்னர்.. 255 ரன்கள் குவித்து வரலாறு படைத்த இந்தியா!

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
Published on

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன்
அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா 52 ரன்கள், சஞ்சு சாம்சன் 89 ரன்கள், இஷான் கிஷன் 54 ரன்கள் என அடித்து அசத்த இந்தியா 255 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது.

இஷான் கிஷன் - சஞ்சு சாம்சன்
இஷான் கிஷன் - சஞ்சு சாம்சன்

இது டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக பதிவுசெய்யப்பட்டது.

இந்தியா - நியூசிலாந்து
’இந்தியாவிற்கு தோல்வி பயம்..’ ஃபைனலுக்கு முன் செய்த மூடநம்பிக்கைகள்..? எழுந்த விமர்சனம்!

வாய்விட்ட சாண்ட்னர்..

இறுதிப்போட்டிக்கு முன்னதாக பேசியிருந்த நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர், "நிச்சயமாக இறுதிப்போட்டி ஒரு சவாலாக இருக்கும். நாங்கள் கோப்பை வெல்லும் Favourite அணியாக இல்லை என்பது தெரியும், ஆனால் அணியாக ஒன்று சேர்ந்து வலுவான செயல்திறனை வெளிப்படுத்தினால், கோப்பையை வெல்லும் நல்ல நிலையில் இருப்போம் என்று நம்புகிறோம். ஒரு முறை கோப்பையை வெல்வதற்காகச் சிலரின் இதயங்களை உடைப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உள்ளூர் ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு" என்று கூறியிருந்தார்.

இந்தியா - நியூசிலாந்து
FINAL| இந்த நியூசிலாந்து வீரரால் ஆபத்து.. 14வது நிமிடத்தில் அனைத்தும் மாறும்.. கணித்த ஜோதிடர்!

பாட் கம்மின்ஸை போன்று இந்திய ரசிகர்களை சைலண்ட் செய்வோம் என்று சாண்ட்னர் கூறியதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், எல்லோரும் ஒரே வரியை சொன்னால் எப்படி, புதுசா எதாவது சொல்லுங்க என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இந்தசூழலில் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் 255 ரன்கள் என்ற பிரமாண்ட ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து
இந்தியா வெல்ல ‘பிட்ச் டேம்பரிங்’ செய்த BCCI..? நாசர் ஹுசைன் பேசியதாக வீடியோ வைரல்! உண்மை என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com