india - new zealand
india - new zealandweb

FINAL| இந்த நியூசிலாந்து வீரரால் ஆபத்து.. 14வது நிமிடத்தில் அனைத்தும் மாறும்.. கணித்த ஜோதிடர்!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியில் என்ன நடக்கும், எந்த நேரத்தில் ஆட்டம் மாறும், யார் வெற்றிபெறுவார்கள் என கணிப்பை பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பை இறுதியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஜோதிடர் சுமித் பஜாஜ், நியூசிலாந்தின் 2 வீரர்கள் இந்திய அணிக்கு ஆபத்தானவர்கள் என கணித்துள்ளார். 14வது நிமிடத்தில் முக்கிய விக்கெட் வீழ்ச்சி ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்திய அணிக்கு வில்லனாக அமையும் ஒரே அணியாக நியூசிலாந்து இருந்துவருகிறது.

இந்தியா - நியூசிலாந்து
இந்தியா - நியூசிலாந்துweb

இதுவரை நியூசிலாந்து 2 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள நிலையில், ஐசிசி நாக்அவுட் டிராபி 2000, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டிலுமே இந்திய அணியை தான் இறுதிப்போட்டியில் வீழ்த்தி நியூசிலாந்து கோப்பை வென்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி தோல்வி மற்றும் சொந்தமண்ணில் 0-3 என டெஸ்ட்டில் ஒயிட்வாஷ் என பல மறக்கமுடியாத தோல்விகளை நியூசிலாந்து கொடுத்திருக்கும் நிலையில், இந்தியா அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

india - new zealand
கோப்பை வென்றுவிடுங்கள்.. இல்லையென்றால் நீங்க தான் 'CHOKERS'! - டேல் ஸ்டெயின் எச்சரிக்கை

இந்த வீரரால் ஆபத்து.. ஜோதிடர் கணிப்பு!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி மீது அதிக எதிர்ப்பார்ப்புகள் இருந்துவரும் நிலையில், போட்டியில் இந்திய அணிக்கு ஆபத்தான நியூசிலாந்து வீரர் யார் என பிரபல ஜோதிடரான சுமித் பஜாஜ் கணித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “இன்று அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரச்சின் ரவீந்திராவிற்கு எதிராக இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் மூன்றிலும் எதிரணியின் ஆட்டத்தை மாற்றும் முக்கிய வீரர்களில் ஒருவராக அவர் இருப்பார். இன்னொருவர் கிளென் பிலிப்ஸ்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் போட்டி தொடங்கிய 14வது நிமிடத்தில் முக்கிய விக்கெட் சரியும் என்றும், 9.14 மணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படும் என கணித்துள்ளார். மேலும் வெற்றி கணிப்பை பொறுத்தவரையில் நியூசிலாந்தை விட இந்தியாவிற்கு எட்ஜ் இருப்பதாகவும் கணித்துள்ளார்.

india - new zealand
’இந்தியாவிற்கு தோல்வி பயம்..’ ஃபைனலுக்கு முன் செய்த மூடநம்பிக்கைகள்..? எழுந்த விமர்சனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com