2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிweb

’உலகக்கோப்பை’ வென்று 3 உலகசாதனை படைத்த இந்தியா.. நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு!

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.
Published on
Summary

அகமதாபாத்தில் நடந்த டி-20 உலகக்கோப்பை இறுதியில் இந்தியா 255 ரன்கள் குவித்து, நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்றது. ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளுடன் ஆட்டநாயகனாகவும், சஞ்சு சாம்சன் தொடர்நாயகனாகவும் தேர்வாகினர். இந்தியா 3 உலகசாதனைகளை வென்று வரலாற்றில் இடம்பிடித்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்றது. 2023ஆம் ஆண்டில் இதே நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக்கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றது. ஆனால் ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்திய அணிக்கு வில்லனாக அமையும் ஒரே அணியாக நியூசிலாந்து இருந்துவருவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி

இதுவரை நியூசிலாந்து டி20 உலகக்கோப்பையில் தோற்றதே இல்லை என்பதும், ஐசிசி இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்திடம் வெற்றதே இல்லை என்பதும் போட்டியை மேலும் சுவாரசியப்படுத்தின.

ஐசிசி நாக்அவுட் டிராபி 2000, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி மற்றும் சொந்தமண்ணில் 0-3 என டெஸ்ட்டில் ஒயிட்வாஷ் என பல மறக்கமுடியாத தோல்விகளை நியூசிலாந்து கொடுத்திருக்கும் நிலையில், இந்தியா அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
’இந்தியாவிற்கு தோல்வி பயம்..’ ஃபைனலுக்கு முன் செய்த மூடநம்பிக்கைகள்..? எழுந்த விமர்சனம்!

255 ரன்கள் குவித்து கோப்பை வென்ற இந்தியா!

பரபரப்பாக தொடங்கப்பட்ட இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸை இழந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா 52 ரன்கள், சஞ்சு சாம்சன் 89 ரன்கள், இஷான் கிஷன் 54 ரன்கள் என அடித்து அசத்த இந்தியா 255 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது. இது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.

அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன்
அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன்

256 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி பவர்பிளேவுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுக்க 19 ஓவரில் 159 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்தது.

2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணி
2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணி

இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகவும், தொடரில் 199 ஸ்ட்ரைக்ரேட் உடன் 321 ரன்கள் குவித்து காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என அனைத்திலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தொடர்நாயகன் விருதை வென்று அசத்தினார்.

2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
இந்தியா வெல்ல ‘பிட்ச் டேம்பரிங்’ செய்த BCCI..? நாசர் ஹுசைன் பேசியதாக வீடியோ வைரல்! உண்மை என்ன?

உலக சாதனை படைத்த இந்தியா!

2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்தியா
2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்தியா

2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, 3 டி20 உலகக்கோப்பைகளை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் உலகக்கோப்பை வெல்லும் முதல் அணி, தொடர்ந்து அடுத்தடுத்த டி20 உலகக்கோப்பைகளை வென்ற முதல் அணி என 3 உலகசாதனைகளை படைத்து அசத்தியுள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
FINAL| வாய்விட்ட சாண்ட்னர்.. 255 ரன்கள் குவித்து வரலாறு படைத்த இந்தியா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com