ஹேரி ப்ரூக்
ஹேரி ப்ரூக்pt web

என்னா அடி! இது டெஸ்டா.. டி20 ஆ? இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்க்கும் ஜேமி ஸ்மித், ஹேரி ப்ரூக்!

தனது முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இங்கிலாந்து அணி ஹேரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆட்டத்தால் வலுவான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
Published on

சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரிலும் தோற்று WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் பறிகொடுத்தது. இரண்டு அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடி வருகிறது.

சுப்மன் கில்
சுப்மன் கில்x

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அப்பர் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்ட சூழலில், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும், பந்து வீச்சாளர்களை மாற்றுவதிலும் மிக மோசமாக செயல்பட்டது இந்திய அணி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதை சரி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பாடு குறித்துப் பேசும்போது, பும்ராவைத் தவிர மற்ற இந்தியப் பந்துவீச்சாளர்கள் எல்லாம் ஒரேமாதிரியாகப் பந்துவீசியதே தோல்விக்குக் காரணம் என்றார்கள்.

இந்நிலையில்தான் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. வழக்கம்போல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடித்து 269 ரன்களைக் குவித்த நிலையில், ஜடேஜா 89 ரன்களையும், ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் குவித்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 587 ரன்களை எடுத்தது.

ஹேரி ப்ரூக்
”அலட்சியத்தால் நிகழ்ந்த உயிரிழப்புக்கு காப்பீடு தொகை வழங்கத் தேவையில்லை” - உச்ச நீதிமன்றம்

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி. தொடக்கத்தில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. பின் ஹேரி ப்ரூக்கும் ஜோ ரூட்டும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இரண்டாம் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டமும் இந்தியாவிற்கு சாதகமாகவே தொடங்கியது. நிலைத்து ஆடிய ரூட் மற்றும் புதிதாக வந்த ஸ்டோக்ஸ் என இரண்டு பேட்ஸ்மேன்களையும் சிராஜ் அடுத்தடுத்து வெளியேற்றினார். ஒரு கட்டத்தில் கில் அடித்த 269 ரன்களையாவது இங்கிலாந்து அணி திரட்டுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், அத்தனை கேள்விகளையும் பொய்யாக்கினர் ஜேமி ஸ்மித்தும் ஹேரி ப்ரூக்கும்... முதலில் மெதுவாக ஆரம்பித்த இருவரும் பின் அதிரடியாக ரன்களைச் சேர்த்தனர். ப்ரஷித் கிருஷ்ணாவின் ஒரே ஒரு ஓவரில் மட்டும் 23 ரன்களைக் குவித்தார் ஜேமி ஸ்மித்.

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியபின் வீசப்பட்ட 12 ஓவர்களில் கிட்டத்தட்ட 83 ரன்களைக் குவித்தது இந்த ஜோடி.. அனைத்தும் புத்திசாலித்தனமான பேட்டிங் மூலமும் பவர் ஹிட்டிங் மூலமும் வந்தவை. பவர் ஹிட்டிங் மூலம் ரன்களைச் சேர்த்தாலும் மிகவும் கண்ட்ரோலுடன் ஒவ்வொரு ஷாட்டையும் ஆடினார் ஸ்மித்.

ஹேரி ப்ரூக்
ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து ஓராண்டு... இன்னும் விலகாத மர்மங்கள்! சிம்ம சொப்பணமா சம்போ செந்தில்?

22 ஆவது ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 88 ரன்களை எடுத்து திணறிய இங்கிலாந்து அணியை 60 ஓவர் முடிவில் 301 ரன்களுக்கு அழைத்துச் சென்றது இந்த ஜோடி. இதற்கிடையே ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்திருந்தார்.

மூன்றாவது நாளின் முதல் செசனில் இங்கிலாந்து அணி 172 ரன்களைக் குவித்திருக்கிறது. என்னதான் ஸ்மித் நன்றாக ஆடினார் என்று கூறினாலும், இந்திய அணியின் பந்துவீச்சு அதற்கு அனுமதி கொடுத்தது என்றுதான் சொல்லமுடியும். ஏகப்பட்ட பவுண்டரிகள் சென்றன. நாம் ஏற்கனவே சொன்னதுபோல் இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஒரேமாதிரியாகப் பந்து வீசினார்கள். 200 ரன்களை இங்கிலாந்து அணி தாண்டுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது நங்கூரமிட்டு அமர்ந்திருக்கிறது இங்கிலாந்து அணி.

60 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 301 ரன்களைக் குவித்து ஆடி வருகிறது. ஹேரி ப்ரூக் 112 ரன்களுடனும் ஜேமி ஸ்மித் 133 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

போட்டியில் திருப்பங்கள் இருக்கலாம்.. ஆனால், இந்திய அணி மீண்டும் ஆட்டத்திற்குள் திரும்பவில்லை என்றால் கில்லின் இரட்டை சதமும் வீணாகும் அபாயம் இருக்கிறது.

ஹேரி ப்ரூக்
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்? தவெக செயற்குழு கூட்டமும்... திமுக, பாஜக பதிலும்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com