முகமது ஷமி
முகமது ஷமிweb

முகமது ஷமி எங்கே..?? நல்ல பவுலர்களை எல்லாம் ஓரங்கட்டிட்டீங்க! - முன்னாள் வீரர் ஆவேசம்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 358 ரன்கள் அடித்தபோதும் இந்திய அணி தோல்வியை தழுவியது..
Published on
Summary

இந்திய அணியின் பந்துவீச்சு திறமையை முன்னாள் இந்திய வீரர் கேள்வி எழுப்பியுள்ளார். முகமது ஷமி ஏன் விளையாடவில்லை என்பது புரியவில்லை என கூறிய அவர், பும்ரா இல்லாமல் வெற்றியை வசமாக்க புதிய பவுலர்களை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என சொந்த மண்ணில் இழந்தது இந்திய அணி.. 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா அணி.

தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. முதல் போட்டியில் 349 ரன்கள் குவித்த இந்திய அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றது..

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையெயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 358 ரன்கள் குவித்தபோதும், தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது..

virat kohli
virat kohli

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என எல்லோரும் சுமாரான பந்துவீச்சையே வெளிப்படுத்தினர். மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது.. இந்தசூழலில் பும்ராவை தவிர்த்து பந்துவீச்சில் மேட்ச் வின்னர் பவுலர் யார் என்ற மிகப்பெரிய கேள்வியை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் எழுப்பியுள்ளார்..

முகமது ஷமி
”இதுக்குமேல நான் என்ன பண்ணனும்.. யாரும் என்னிடம் பேசவில்லை” - வேதனையோடு ஷமி சொன்ன வார்த்தைகள்!

இந்திய ஒருநாள் அணியில் அனுபவம் பெற்ற பந்துவீச்சாளர்கள் இல்லாததை கேள்வி எழுப்பியிருக்கும் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஹர்பஜன் சிங், பும்ரா இல்லாமல் போட்டியை வெல்லக்கூடியது எப்படி என்ற விடையை நாம் தேடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்..

முகமது ஷமி
’நான் அவருக்கு நிச்சயம் CALL செய்வேன்..’ - ஷமி குறித்த சர்ச்சைக்கு அகர்கர் பதில்!
முகமது ஷமி
முகமது ஷமி முகநூல்

இதுகுறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ஹர்பஜன் சிங், ”முகமது ஷமி எங்கே? ஷமி ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. உங்களிடம் பிரசித் இருந்தாலும், அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உங்களிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் இருந்தனர், ஆனால் நீங்கள் மெதுவாக அவர்களை ஓரங்கட்டிவிட்டீர்கள். அணியில் பும்ரா இருந்திருந்தால், இது ஒரு வித்தியாசமான பந்துவீச்சு தாக்குதலாக இருந்திருக்கும்.. ஆனால் பும்ரா இல்லாமல், இது முற்றிலும் சுமாரான பந்துவீச்சு தாக்குதலாகவே இருகிறது.. ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போட்டிகளை வெல்லும் கலையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஹர்பஜன் கூறினார்.

முகமது ஷமி
தொடர்ந்து ஓரங்கட்டப்படும் முகமது ஷமி.. அகர்கருடன் மோதலா? பயிற்சியாளர் சொல்வது என்ன?
வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி

மேலும், "இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் பும்ரா இல்லையென்றாலும், நம்மிடம் சிராஜ் சிறந்த பவுலராக இருந்தார்.. பும்ரா இல்லாமலேயே நம்மால் 3 போட்டிகளில் வெல்ல முடிந்தது.. அதேபோல ஒருநாள் போட்டிகளிலும் நாம் பும்ரா இல்லாமல் வெல்லும் யுக்தியை தேடிப்பிடிக்க வேண்டும்.. வேகப்பந்துவீச்சு அல்லது சுழற்பந்துவீச்சு எதுவாக இருந்தாலும் சரி, போட்டிகளை வெல்லக்கூடிய பவுலர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி உங்களுக்கு குல்தீப் மட்டுமே தற்போது இருக்கிறார், ஆனால் மீதமுள்ளவர்களை பாருங்கள்? மேலும் ஒரு சுழற்பந்துவீச்சு ஆப்சன் வேண்டுமென்றால் ஒருநாள் போட்டிகளிலும் வருண் சக்கரவர்த்தியைக் கொண்டு வாருங்கள், ஏற்கனவே டி20 போட்டிகளில் அவர் இருக்கிறார், எனவே ஒருநாள் போட்டிகளிலும் அவரை முயற்சிக்கலாம்" என்று ஹர்பஜன் மேலும் கூறினார்.

முகமது ஷமி
FIFER மூலம் அகர்கருக்கு செய்தி அனுப்பிய ஷமி.. 2 போட்டியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com