முகமது ஷமி - அஜித் அகர்கர்
முகமது ஷமி - அஜித் அகர்கர்web

’நான் அவருக்கு நிச்சயம் CALL செய்வேன்..’ - ஷமி குறித்த சர்ச்சைக்கு அகர்கர் பதில்!

முகமது ஷமி என்ன சொன்னார் என்று பார்க்கவில்லை, ஆனால் அவருடைய கூற்றை நான் படித்தால் நிச்சயம் அவருக்கு ஃபோன் செய்வேன் என்று அஜித் அகர்கர் தெரிவித்தார்..
Published on
Summary

முகமது ஷமி என்ன சொன்னார் என்று பார்க்கவில்லை, ஆனால் அவருடைய கூற்றை நான் படித்தால் நிச்சயம் அவருக்கு ஃபோன் செய்வேன் என்று அஜித் அகர்கர் தெரிவித்தார்..

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஒருநாள் அணியில் நட்சத்திர பவுலர் முகமது ஷமி இடம்பெறவில்லை. அவர் ஏன் இடம்பெறவில்லை? என்ற கேள்விக்கு, அவருடைய உடற்தகுதி குறித்த முழு அப்டேட் இன்னும் கிடைக்கவில்லை என்ற பதிலை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறினார்.

ஆனால் அகர்கர் சொன்னது குறித்து செய்தியாளர்களிடன் பேசிய முகமது ஷமி, நான் 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஐபிஎல் தொடர் மற்றும் துலீப் டிராபி என அனைத்திலும் விளையாடினேன். நான் நல்ல டச்சில் தான் இருக்கிறேன். இதற்குமேல் என்ன செய்யவேண்டும். என்னை யாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை” என்று காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஷமி ஆற்றிய எதிர்வினை குறித்து அஜித் அகர்கரிடம் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது, கடந்த மாதங்களில் பலமுறை நான் அவரிடம் பேசியிருக்கிறேன், அவருக்கு நிச்சயம் நான் ஃபோன் செய்வேன் என்று பேசியுள்ளார்.

முகமது ஷமி - அஜித் அகர்கர்
”இதுக்குமேல நான் என்ன பண்ணனும்.. யாரும் என்னிடம் பேசவில்லை” - வேதனையோடு ஷமி சொன்ன வார்த்தைகள்!

நான் அவருக்கு போன் செய்வேன்..

ஷமி தெரிவித்த எதிர்வினை கருத்துகள் குறித்து பேசிய அஜித் அகர்கர், ”அவர் அப்படி என்னிடம் சொல்லியிருந்தால் நான் நிச்சயம் பதிலளிப்பேன், இப்போது அவர் அருகில் இருந்தால்கூட நான் அதைச்செய்வேன். அவர் என்ன பேசினார் என்று எனக்கு தெரியவில்லை, ஒருவேளை நான் அவருடைய கூற்றை பார்த்தால் நிச்சயம் அவருக்கு ஃபோன் செய்வேன். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த பவுலர்.

நான் இதற்கு முன்பும் பலமுறை அவருடன் உரையாடியிருக்கிறேன், என்னுடைய மொபைல் அனைத்து வீரர்களுக்கும் ஆன்செய்தே இருக்கும். இங்கிலாந்துக்கு முன்னதாகவே அவருடைய உடற்தகுதி நன்றாக இல்லை, அதனால் தான் அவரை நாங்கள் எடுக்கவில்லை. ஒருவேளை அவர் சிறந்த உடற்தகுதியுடன் இருந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கான விமானத்தில் இருந்திருப்பார்” என்று தெளிவுபடுத்தினார்.

முகமது ஷமி - அஜித் அகர்கர்
”என்கிட்ட மோதுங்க, 23 வயது வீரரை விமர்சிக்காதீங்க” - சீக்காவை சாடிய கம்பீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com