"உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எனக்கு ஓய்வு தேவை" - ஓபன் ஆக பிரேக் கேட்ட கிளென் மேக்ஸ்வெல்!

உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஓய்வு தேவைப்பட்டதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியிலிருந்து பிரேக் கேட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அந்த அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்.
மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்pt web

உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஓய்வு தேவைப்பட்டதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியிலிருந்து பிரேக் கேட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அந்த அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக்கொண்டிருந்த அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடவில்லை. ஆர்சிபி நிறுவனம் அவருக்கு அந்தப் போட்டியில் ஓய்வு கொடுத்திருந்தது.

உடலை சீராக்க இது சரியான தருணம்

"என்னைப் பொறுத்தவரை இது எளிதான முடிவு தான். கடந்த போட்டிக்குப் பிறகு பயிற்சியாளர்கள் மற்றும் ஃபாஃப் ஆகியோரிடம் சென்று, வேறு ஒரு வீரரை முயற்சி செய்ய இது சரியான தருணமாக இருக்கும் என்று கூறினேன். நான் இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்கெனவே இருந்திருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து விளையாட விளையாட, குழிக்குள் ஆழமாகத்தான் விழுவீர்கள்.

இதுதான் எனக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு பிரேக் கொடுப்பதற்கு நல்ல தருணம் என்று நினைக்கிறேன். என் உடலை மீண்டும் சீராக்க இதுவே சரியான தருணம். எனக்கு அந்த பிரேக் கிடைத்தால் என்னால் நல்ல மனநிலைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்றும் என்னால் ஒரு தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

மேக்ஸ்வெல்
"அது என்ன Undertaker செலிப்ரேஷன்?.. எதற்காக கண்களை அப்படி செய்கிறேன்" - பதிரானா கொடுத்த விளக்கம்!

பவர்ப்ளே முடிந்ததும் பிரச்னை

எங்கள் அணிக்கு பவர்பிளே முடிந்தவுடனேயே பிரச்னைகள் வந்துவிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதுதான் என்னுடைய பலம். ஆனால், இத்தொடரில் என் பேட்டிங்கின் மூலம் என்னால் ஒரு பாசிடிவான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எங்கள் அணி சமீபமாக சந்திக்கும் சூழ்நிலைகள், அணியின் முடிவுகள், புள்ளிப் பட்டியலில் இருக்கும் இடம்... இதையெல்லாம் கருதியபோதுதான் இன்னொரு வீரருக்கு அவர் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது சரியானது என்று தோன்றியது. அந்த வீரரால் அந்த இடத்தை தனதாக்கிக்கொண்டால் அது அணிக்கு நல்லது" என்று கூறினார் கிளென் மேக்ஸ்வெல்.

மேலும், "டி20 கிரிக்கெட் சில சமயங்களில் அப்படித்தான். யூகிக்க முடியாதது. முதல் போட்டியைப் பார்த்தால் தெரியும், நான் அவுட் ஆன பந்தை நன்கு பேட்டின் மையப் பகுதியில் தான் அடித்தேன். ஆனால் அது கீப்பரின் கையில் விழுந்தது. அந்தப் பந்தின் லென்த்தை நன்றாகவே கணித்திருந்தேன். ரன் அடிப்பதற்கு நல்ல வாய்ப்பு என்று கருதினேன். ஆனால், பேட்டை சரியான கோணத்தில் கொண்டுசெல்லவில்லை. உங்களுக்கு எல்லாம் சரியாக சென்றால் அதுவே பௌண்டரி ஆகியிருக்கும். ஒரு பந்தில் 4 ரன்கள் என தொடருக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருக்கும்.

மேக்ஸ்வெல்
‘17 இல்ல, 1017 IPL ஆடினாலும் தோல்விதான்’ - 287 ரன்கள் விட்டுக்கொடுத்த RCB! இமாலய சாதனை படைத்த SRH!

உண்மையைச் சொல்லவேண்டுமானால் எனக்கு சரியான தொடக்கம் கிடைத்துவிடவில்லை. முதல் சில போட்டிகளில் நான் சரியான முடிவுகள் தான் எடுத்தேன். இருந்தாலும் அவுட் ஆகிக்கொண்டே தான் இருந்தேன். டி20 கிரிக்கெட்டில் அது நடக்கக் கூடியது தான். அது தொடர்ந்துகொண்டிருக்கும்போது, நீங்கள் ரன்களைத் தேடி உங்கள் அடிப்படையைத் தவறவிடவும் வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார் மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல்
"நம்பிக்கை குறையும்போது ஒளிந்துகொள்ள இடம் இல்லை" - ஃபாஃப் டு ப்ளெஸி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com