சாம்பியன்ஸ் டிராபி | 4 முறை இறுதிப்போட்டிக்கு சென்ற ஒரே அணி! இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்?
8 நாடுகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்
தொடர் அடுத்த சில நாட்களில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
இதில் 4 முறை இறுதிப்போட்டிக்கு சென்ற ஒரே அணியாக இருக்கும் இந்தியாவின் கடந்துவந்த பாதை மற்றும் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் மாறியிருக்கும் விசயங்கள் குறித்து பார்க்கலாம்..
தவறவிட்ட உலகக்கோப்பை வென்ற அணிகள்..
இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள வெஸ்ட்
இண்டீஸ் அணி இல்லை. உலகக்கோப்பையை வென்றுள்ள இலங்கை அணி தகுதி பெறத்தவறிவிட்டது.
ஆனால் 2011-ஆம் ஆண்டு தான் ஒருநாள் போட்டிகளில்
விளையாடும் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி
இருக்கிறது.
போட்டித் தொடர் அறிவிப்புக்கு முன்னதான தரநிலைப்பட்டியலின் அடிப்படையில் முதல் 8 இடத்தில் இருந்த அணிகள் சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதிபெற்றுள்ளன.
4 முறை இறுதிப்போட்டிக்கு சென்ற ஒரே அணி இந்தியா..
நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஏ பிரிவில் நடப்புச் சாம்பியனான பாகிஸ்தான், நியுசிலாந்து ஆகிய அணிகள் இந்திய அணியுடன் உள்ளன. இந்தப்பிரிவில் இந்தியாவிற்கு எப்போதும் ஐசிசி தொடரில் அச்சுறுத்தலாக இருக்கும் பங்களாதேஷ் அணியும் இருக்கின்றது.
இதில் நியுசிலாந்து அணி ஏற்கெனவே 2000-மாம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. இறுதிப்போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து தான் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது நினைவுகூர வேண்டிய விஷயம்.
இதேபோல் கடந்த 2017 சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணியுடான இறுதிப்போட்டியில் வென்று தான் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆக இவ்விரு
அணிகள் மட்டுமில்லாமல், வங்கதேச அணியும் கூட சவால் கொடுக்க காத்திருக்கிறது.
பலமான அணியாக இருக்கும் ஆப்கானிஸ்தான்..
பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய ஜாம்பவான் அணிகளுடன் குட்டி அணியான ஆப்கானிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.
1998-ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வென்ற பெருமைக்குரிய
அணி தென்னாப்பிரிக்கா.
2006, 2009- என அடுத்தடுத்து இரண்டு முறை சாம்பியன்
பட்டம் வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா.
இரண்டு முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியிருக்கிறது இங்கிலாந்து அணி.
முதன்முறையாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் இப்பட்டியலில் மற்ற சாம்பியன் அணிகளை விட ஆப்கானிஸ்தான் அணி, பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. 2024 வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்ற ஆப்கானிஸ்தான் அணி, 2023 உலகக்கோப்பையில் விட்ட இடத்தை பிடிக்க கம்பேக் கொடுக்கவிருக்கிறக்கிறது.