kevin pietersen slams england cricket team
kevin pietersen slams england cricket teamweb

”உங்களில் யாருக்கும் தகுதியில்லை..” ENG அணி செய்த மோசமான செயல்! அதிருப்தியில் சாடிய பீட்டர்சன்!

இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது இங்கிலாந்து அணி செய்த மோசமான சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கெவின் பீட்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இதில் ஒரு டி20 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, ஒட்டுமொத்த தொடரையும் 7-1 என படுமோசமாக முடித்தது.

அதிலும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக விளையாடிய 3 ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்து 3-0 என ஒயிட்வாஷை சந்தித்தது.

இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்துX

இந்நிலையில் தொடரின் போது இங்கிலாந்து அணி ஒரேயொரு பயிற்சி அமர்வில் தான் விளையாடியதாகவும், அதற்குபிறகு ஒரு வீரர் கூட பயிற்சியில் ஈடுபடவில்லை என்ற செய்தியறிந்து வேதனை அடைந்ததாக கெவின் பீட்டர்சன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒருவருக்கு கூட தகுதியில்லை..

இந்தியாவிற்கு வந்து பயிற்சி அமர்வில் பங்கேற்காமல் எப்படி வெற்றிபெற முடியும் என நினைத்தீர்கள் என்று இங்கிலாந்து அணியை கடுமையாக சாடியுள்ளார் கெவின் பீட்டர்சன்.

இதுகுறித்து ரவிசாஸ்திரி வெளிப்படுத்தியதை கேட்டு உண்மையில் பீட்டர்சன் அதிர்ச்சியடைந்தார். அதற்குபிறகு தன்னுடைய ஆதங்கத்தை கடுப்படுத்த முடியாமல் வார்த்தைகளால் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ind vs eng
ind vs engweb

எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கெவின், “நானும் ரவி சாஷ்திரியும், இங்கிலாந்து வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரமாக பயிற்சி எடுத்திருப்பார்கள் என பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாக்பூர் போட்டிக்கு முன்னதாக ஒரேயொரு பயிற்சி செசன் மட்டும் எடுத்துள்ளனர். அதன்பிறகு பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஜோ ரூட் மட்டும் வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். நீங்கள் ஆசிய கண்டத்திற்குள் விளையாட வந்துவிட்டு, பயிற்சி எடுக்க மாட்டேன் என்ற முடிவுடன் போட்டுக்குள் வருவது முற்றிலும் தவறானது.

ஒரு தொடரில் எந்த விதமான பயிற்சியும் செய்யாமல் என்னால் சிறப்பாக விளையாடமுடியும் என கூறும் ஒரு விளையாட்டு வீரர் கிடையாது. அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. இங்கிலாந்து அணியின் இந்த செயல் எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. முதல் போட்டியில் இருந்து இங்கிலாந்து பயிற்சி மேற்கொள்வில்லை என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன், திகைத்து போனேன்” என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ”நீங்கள் கோல்ஃப் விளையாடுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் கிரிக்கெட் விளையாடும் உங்களுக்கு சிறந்த கிரிக்கெட்டை விளையாட மட்டுமே பணம் கொடுக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

தொடர் முடிந்து விமானத்தில் சென்று அமர்ந்த ஒருவீரருக்கு கூட, இங்கிலாந்து அணிக்காக நம்மால் முடிந்த அனைத்தையும் செய்தும் தோற்றுவிட்டோம் என கூறும் தகுதி யாருக்கும் கிடையாது. ஜோ ரூட் ஒருவர் மட்டும் சொல்லிக்கொள்ளலாம், மற்றபடு வேறு யாருக்கும் தகுதி இல்லை, எந்த இங்கிலாந்து ரசிகனுக்கும் இது இதயம் உடைக்கும் ஒரு செய்தி” என சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com