AUS vs NED | ஹாட்ரிக் வெற்றியைக் குறிவைக்கும் ஆஸ்திரேலியா... நெதர்லாந்தோடு டெல்லியில் மோதல்!

ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
AUS v NED
AUS v NEDFile image

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

ஆஸ்திரேலியா

போட்டிகள் - 4, வெற்றிகள் - 2, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4

புள்ளிப் பட்டியலில் இடம்: நான்காவது

சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் வார்னர் - 228 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 9 விக்கெட்டுகள்

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

இரு தோல்விகளோடு (இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக) உலகக் கோப்பையை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அதன்பிறகு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. இலங்கைக்கு எதிராக சேஸ் செய்து வென்ற ஐந்து முறை சாம்பியன், டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் கூட்டணியின் மிரட்டல் இன்னிங்ஸால் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறியிருக்கிறது.

AUS v NED
PAK vs AUS | ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஆடம் ஜாம்பா: ஆனால், ஆட்ட நாயகன் வார்னர் - நடந்தது என்ன?

நெதர்லாந்து

டாப் ஆர்டர் படுமோசமாக ஆடும்போது, மிடில் ஆர்டரில் ஆடும் கேப்டன் மீதுதான் நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாமே!

போட்டி 24: ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

மைதானம்: ஃபெரோஷ் ஷா கோட்லா, டெல்லி

போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 25, மதியம் 2 மணிநெதர்லாந்து

போட்டிகள் - 4, வெற்றி - 1, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2

புள்ளிப் பட்டியலில் இடம்: எட்டாவது

சிறந்த பேட்ஸ்மேன்: காலின் அகர்மேன் - 127 ரன்கள்

சிறந்த பௌலர்: பாஸ் டி லீட் - 7 விக்கெட்டுகள்

நெதர்லாந்து
நெதர்லாந்து

எதிர்பார்த்ததை விடவுமே களத்தில் போராடுகிறது நெதர்லாந்து அணி. முரட்டு ஃபார்மில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்திருப்பது இப்போதைக்கு இவர்கள் மட்டும்தான்! இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகத் தோற்றிருந்தாலும், ஒவ்வொரு கட்டத்தில் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது ஆரஞ்ச் ஆர்மி.

மைதானம் எப்படி?

டெல்லியில் நடக்கும் நான்காவது போட்டி இது. இரு போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி வென்றிருக்கிறது. மற்றொரு போட்டியில் சேஸ் செய்த அணி (இந்தியா) வென்றிருக்கிறது. இந்த மைதான ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கின்றன. தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை சாதனையான 428 ரன்களை எடுத்தது இந்த ஆடுகளத்தில் தான்.

AUS v NED
SLvNED | இலங்கைக்கு முதல் வெற்றியைப் பரிசளித்த சதீரா சமரவிக்ரமா..!

தலை வந்தாச்சு!

ஆஸ்திரேலிய அணிக்கு இந்தப் போட்டி பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கிறது. உலகக் கோப்பைக்கு முன் அசுர ஃபார்மில் இருந்த தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், காயத்திலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்திருக்கிறார். அவரும் வார்னரும் அடித்த அடியைப் பார்த்த ரசிகர்கள் இந்தக் கூட்டணியை வார்-ஹெட் என்று அழைத்தனர்.

அந்த அளவுக்கு எதிரணிகளை இவர்கள் துவம்சம் செய்தனர். அவர் களம் கண்டால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் பன்மடங்கு பலமடையும். அதேசமயம், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடி ஃபார்முக்கு வர இந்தப் போட்டி ஒரு நல்ல வாய்ப்பு.

AUS v NED
உலகக்கோப்பையில் இருந்து விலகிய பதிரானா! மாற்றுவீரராக களமிறங்கிய மூத்த ஆல்ரவுண்டர்! யார் தெரியுமா?

4 இன்னிங்ஸ்களில் வெறும் 72 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் ஸ்மித், அந்த அணியின் மிடில் ஆர்டரை நிச்சயம் பலப்படுத்தவேண்டும். ஆஸ்திரேலிய அணியின் பௌலிங் யூனிட் கொஞ்சம் ஃபார்முக்கு வந்துகொண்டிருக்கிறது. ஜாம்பா நன்றாக விக்கெட் எடுக்கிறார். ஹேசில்வுட் அசத்தல் ஸ்பெல்களால் எதிரணிகளைத் திணறவிடுகிறார். சீனியர் ஸ்டார்க் நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தியிருந்தார். நெதர்லாந்து அணியின் டாப் ஆர்டர் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்டார்க் நிச்சயம் பெரும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

டாப் ஆர்டர் எழுச்சி காணுமா?

நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை அவர்களது டாப் ஆர்டர் பேட்டிங் எழுச்சி காண வேண்டும். அவர்களின் மிடில் ஆர்டரும், பௌலிங் யூனிட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் போராடிக்கொண்டிருக்கிறது. ஒருசில முக்கிய வீரர்கள் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். ஓப்பனர் விக்ரம்ஜித் சிங் 4 போட்டிகளில் 70 ரன்கள்தான் அடித்திருக்கிறார். மற்றொரு ஓப்பனர் மேக்ஸ் ஓ'தாவ்த் 55 ரன்களே எடுத்திருக்கிறார். சீனியர் வீரர் தேஜா நிதாமனாருவும் 55 ரன்கள் தான். இப்படி இருந்தால் அந்த அணியால் எப்படி பெரிய அணிகளுக்கு சவாலளிக்க முடியும். ஒவ்வொரு முடியும் லோயர் மிடில் ஆர்டரே அவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்க முடியாது அல்லவா!

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர்

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் குவித்து பெரும் உத்வேகத்தோடு களம் காண்பார் வார்னர். போதாக்குறைக்கு தன் ஃபேவரிட் ஓப்பனிங் பார்ட்னரும் அணிக்குத் திரும்பினால்!

போட்டி 24: ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து

மைதானம்: ஃபெரோஷ் ஷா கோட்லா, டெல்லி

போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 25, மதியம் 2 மணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com