SLvNED | இலங்கைக்கு முதல் வெற்றியைப் பரிசளித்த சதீரா சமரவிக்ரமா..!

வேன் மீக்ரன், வேன் பீக் என நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் பக்கம் திரும்ப, தன் ஆட்டத்தை அப்படியே மாற்றினார் சமரவிக்ரமா. பௌண்டரிகளை டார்கெட் செய்யவில்லை.
Sadeera Samarawickrama
Sadeera SamarawickramaKamal Kishore
போட்டி 19: நெதர்லாந்து vs இலங்கை
முடிவு: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி (நெதர்லாந்து - 262 ஆல் அவுட், 49.4 ஓவர்கள்; இலங்கை - 263/5, 48.2 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: சதீரா சமரவிக்ரமா (இலங்கை)
பேட்டிங்: 107 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் (7 ஃபோர்கள்)

262 என்ற இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி 9.3 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அது மோசமான நிலை இல்லைதான். ஆனாலும் அது கவலை தருவதாகவே இருந்தது. ஏனெனில், இரண்டாவது விக்கெட்டாக வெளியேறியிருந்தது அந்த அணியின் நம்பிக்கை நாயகன் குஷல் மெண்டிஸ். நெதர்லாந்து வேறு கடந்த போட்டியில் தான் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க பேட்டிங்கையே புரட்டிப் போட்டிருந்தது. அதனால் நிச்சயம் இலங்கை ரசிகர்களுக்கு சற்று பயம் இருக்கவே செய்திருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் விரைவிலேயே போக்க வந்தார் சமரவிக்ரமா.

இந்த ஆண்டு ஒருநாள் தொடரில் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் சமரவிக்ரமா, இந்த உலகக் கோப்பையில் ஓரளவு நன்றாகவே ஆடியிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 108 ரன்கள் எடுத்திருந்தார் அவர். அதனால் அவர் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படவே செய்தது. அதற்கு ஏற்றதுபோல் தீர்க்கமாக இன்னிங்ஸை தொடங்கினார் அவர். ஆரம்பத்திலேயே ஸ்பின்னர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு பௌண்டரிகள் அடித்தார். காலின் அக்கர்மேன் ஓவரில் ஒரு ஃபோர், வேன் டெர் மெர்வ் ஓவரில் இரண்டு ஃபோர்கள் என முதல் 20 பந்துகளிலேயே 22 ரன்கள் விளாசினார் அவர்.

வேன் மீக்ரன், வேன் பீக் என நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் பக்கம் திரும்ப, தன் ஆட்டத்தை அப்படியே மாற்றினார் சமரவிக்ரமா. பௌண்டரிகளை டார்கெட் செய்யவில்லை. அதே சமயம் பந்துகளையும் வீணடிக்காமல் சிங்கிள், டபுள் என ஸ்டிரைக்கை மாற்றிக்கொண்டே இருந்தார். 21-50 என 30 பந்துகளில் ஒரு பௌண்டரி கூட அடிக்கவில்லை. ஆனாலும் அதில் 30 ரன்கள் விளாசினார் அவர். 51வது பந்தில் அடுத்த ஃபோர் வந்தது. இதுவும் ஸ்பின்னரின் ஓவரில் தான். இப்படி மிகவும் அற்புதமாக தன்னுடைய இன்னிங்ஸை கட்டமைத்த சமரவிக்ரமா, 53வது பந்தில் தன் அரைசதத்தைக் கடந்தார். இதே பாணியைக் கடைசி வரை கடைப்பிடித்த அவர், விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு இலக்கையும் நோக்கிப் பயணித்தார். ஒருகட்டத்தில் சமரவிக்ரமா சதம் அடிப்பாரோ என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. அவர் நினைத்திருந்தால் நிச்சயம் அதை நெருங்கியிருக்கலாம். ஆனால் அந்த ரிஸ்க்கை அவர் எடுக்கவில்லை. அணிக்கு வெற்றி முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறே பேட்டிங் செய்தார். தனஞ்சயா டி சில்வா அதிரடி காட்டியபோது நிதானம் காட்டி அவருக்கு ஸ்டிரைக் கொடுத்து ஆடவைத்தார். வல்லுநர்கள் சொல்வது போல் சொல்லவேண்டுமெனில் 'சென்சிபிள் கிரிக்கெட்' ஆடினார். அதன் காரணமாக தன் அணியை முதல் வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

Sadeera Samarawickrama
INDvNZ |ஐந்தாவது வெற்றி யாருக்கு..?

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"ஆட்டத்தை முடித்துக் கொடுத்ததில் மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். எங்களுக்கு ஒரு வெற்றி அவசியம் தேவைப்பட்டது. நான் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது ஆடுகளம் பேட்டிங்குக்கு அவ்வளவு எளிதாக இல்லை. பந்து நன்றாக சுழன்றது. வேகப்பந்துவீச்சாளர்களும் லைன் & லென்த் மிகவும் சரியாக வைத்திருந்தனர். நான் என்னுடைய அடிப்படையை சரியாக வைத்துக்கொண்டேன். போகப்போக ஆடுகளம் இன்னும் கடினமாகும் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் பந்து நன்றாக கிரிப் ஆகி வந்தது. நன்கு திரும்பியது. அதனால், கடைசி வரை களத்தில் நிற்கவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டேன்"

சதீரா சமரவிக்ரமா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com