உலகக்கோப்பையில் இருந்து விலகிய பதிரானா! மாற்றுவீரராக களமிறங்கிய மூத்த ஆல்ரவுண்டர்! யார் தெரியுமா?

இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான மதீஷா பதிரானா காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
பதிரானா
பதிரானாCricinfo

நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவுக்கு பதிலாக இலங்கை அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தோள்பட்டை காயத்தால் விலகும் பதிரானா!

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால், எந்த அனுபவமும் இல்லாத 20 வயது இளம் வீரரான பதிரானாவை உலகக்கோப்பைக்கு அழைத்து வந்தது இலங்கை அணி. ஆனால் அனுபவ பற்றாக்குறையால் ஒரு மோசமான உலகக்கோப்பையாகவே அமைந்தது பதிரானாவுக்கு. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 90 ரன்கள், 95 ரன்கள் என வாரிவழங்கிய பதிரானா உலகக்கோப்பையில் ஒரு மோசமான சாதனை படைத்த இலங்கை பந்துவீச்சாளராக மாறினார்.

பதிரானா
பதிரானா

பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை போட்டியின் போது மதீஷா பதிரானாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு பிறகான ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் பதிரானா உலகக்கோப்பையிலிருந்தே விலகுவதாகவும், அவருக்கு பதில் மூத்த ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதிரானா
174 ரன்கள் குவித்த டி-காக்! 8 முறை 350 ரன்களை கடந்து தென்னாப்பிரிக்கா உலக சாதனை!

4வது உலகக்கோப்பையில் களமிறங்கும் ஏஞ்சலோ மேத்யூஸ்!

இலங்கை அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், மிடில் ஆர்டரில் யாரும் பெரிதாக சோபிக்காததால் பல போட்டிகளை இலங்கை இழந்தது. கேப்டன் தசுன் ஷனகாவின் மோசமான ஃபார்ம் காரணமாக எல்லாமே தவறாகவே சென்று முடிந்தது இலங்கை அணிக்கு. இந்நிலையில் மிடில் ஆர்டர் குறையைத் தீர்ப்பதற்காகவே ஏஞ்சலோ மேத்யூஸை மீண்டும் அணிக்குள் எடுத்துவந்துள்ளது இலங்கை அணி.

Angelo Mathews
Angelo Mathews

2011 உலகக்கோப்பைக்கு பிறகு இது மேத்யூஸுக்கு 4வது உலகக்கோப்பையாகும். 36 வயதான அவர் இலங்கைக்காக 221 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, மூன்று சதங்கள் மற்றும் 40 அரைசதங்களுடன் 5,865 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 120 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அணிக்கு, அடுத்த 5 போட்டிகளிலும் வெற்றி தேவைப்படும் என்பதால் மிடில் ஆர்டரில் மேத்யூஸ் ஒரு முக்கிய வீரராக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

பதிரானா
“தினமும் 8 கிலோ மட்டன் சாப்பிடுவாங்க போல”-பாக். வீரர்களின் மோசமான ஃபீல்டிங்கை சாடிய வாசிம் அக்ரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com