“நீங்கள் தேடும் வீரர் நான்தான்”-விஹாரி பதிவுக்கு ரிப்ளை செய்த அரசியல்வாதி மகன்-தீவிரமாகும் விவகாரம்?

அரசியல்வாதியின் தலையீட்டால் தன்னுடைய கேப்டன் பொறுப்பை இழந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் அரசியல்வாதி மகன் இன்ஸ்டாகிராம் பதிவொன்றை பதிவுசெய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரிweb

2024 ரஞ்சிக்கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக ஹனுமான் விஹாரியின் ஆந்திரா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவெளியேறியது.

இந்நிலையில் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு வருத்தம் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த ஹனுமா விஹாரி, ஒரு அரசியல்வாதியின் தலையீட்டால் ஆந்திரா கிரிக்கெட் சங்கம் தன்னை கேப்டன் பதவியிலிருந்து விலகச்சொன்னதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார். விஹாரியின் பதிவை தொடர்ந்து யார் அந்த அரசியல்வாதி?, அந்த அரசியல்வாதியின் மகன் யார்?, அந்த வீரரின் பெயர் என்ன? என்ற கேள்விகளுக்கு விடைதேடும் விதமாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தேடலை தொடங்கினர். இத்தகைய சூழலில் விஹாரி கூறிய அந்த வீரர் ப்ருத்வி ராஜ் என்ற ஆந்திர கிரிக்கெட் வீரர் தான் என கூறப்படுகிறது.

ஹனுமா விஹாரி
”அரசியல்வாதி மகனால் கேப்டன் பதவியை இழந்தேன்!” - அதிர்ச்சி பதிவிட்ட ஹனுமா விஹாரி! நடந்தது என்ன?

அதனை உறுதிசெய்யும் விதமாக விஹாரின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் ப்ருத்வி ராஜ் என்ற ஆந்திர கிரிக்கெட் வீரர், “நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் வீரர் நான் தான், விஹாரி கூறிய அனைத்தும் பொய்” என்று இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் ஒரு இன்ஸ்டா பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஹனுமா விஹாரி
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

என்ன நடந்தது?

காலிறுதிப்போட்டியில் தோற்றபிறகு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஹனுமா விஹாரி, காலிறுதிப்போட்டியில் 4 ரன்னில் தோல்வியடைந்ததற்காக வருத்தம் தெரிவித்தார். அதேவேளையில் முதல் போட்டியில் கேப்டனாக இருந்த தான், அதற்கு பிறகு ஏன் கேப்டனாக செயல்படவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், “ 2024 ரஞ்சிக்கோப்பையின் முதல் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான் கேப்டனாக இருந்தேன், அந்த ஆட்டத்தின் போது 17வது வீரர் ஒருவரை தவறு செய்ததற்காக கேப்டன் என்ற முறையில் நான் கத்தினேன், அவர் அதை தனது அரசியல்வாதி அப்பாவிடம் புகார் செய்தார், பதிலுக்கு அவருடைய அப்பா என் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திரா கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டார். அதனை அப்படியே நிறைவேற்றிய ஆந்திரா கிரிக்கெட் சங்கம், என்மீது எந்தத் தவறும் இல்லாதபோதும் கேப்டன் பதவியிலிருந்து விலகும்படி கேட்டது” என்று அதிர்ச்சிக்குரிய தகவலை வெளிப்படுத்தினார்.

மேலும் இனி ஆந்திராவுக்காக கிரிக்கெட்டே விளையாட மாட்டேன் என்ற விரக்தியையும் விஹாரி முன்வைத்தார். இந்த சூழலில் ஹனுமா விஹாரியின் பதிவுக்கு அந்த அரசியல்வாதியின் மகன் பதில் பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் பதிவு வைரலாகிவருகிறது.

ஹனுமா விஹாரி
INDvENG|“வெளிப்படைத்தன்மை தேவை; DRS இயக்குபவர்களை கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்!”- மைக்கேல் வாகன்

உங்களால் இதைவிட எதுவும் செய்யமுடியாது மிஸ்டர் டம்மி சாம்பியன்!

விஹாரியின் பதிவை தொடர்ந்து அந்த வீரர் யார் என்று ரசிகர்கள் தேடியநிலையில், தானாகே முன்வந்து “நான் தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் அந்த வீரர்” என ப்ருத்வி ராஜ் என்ற ஆந்திரா வீரர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துவருகின்றனர்.

ரசிகர்கள் பகிர்ந்திருக்கும் அந்த ஸ்கிரீன்ஷாட் பதிவில் பேசியிருக்கும் ப்ருதிவி ராஜ், “அனைவருக்கும் வணக்கம், விஹாரியின் கமெண்ட் பாக்ஸில் நீங்கள் தேடிக்கொண்டிருந்த அந்த வீரர் நான் தான், ஆனால் விஹாரியின் பதிவில் நீங்கள் பார்த்தது முற்றிலும் தவறானது. இங்கு விளையாட்டை விட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல, அதைவிட எனது சுய மரியாதை எல்லாவற்றையும் விட பெரியது, தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மோசமான வார்த்தைகள் எந்த வகையான மனித தளத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இறுதியில் ஹனுமா விஹாரியை அட்டாக் செய்து பேசியிருக்கும் அந்த நபர், “அன்று என்ன நடந்தது என்று அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும், உங்களால் பதிவிடுவதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியாது மிஸ்டர் சோ கால்ட் சாம்பியன். இதுபோலான அனுதாப விளையாட்டுக்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விளையாடுங்கள்” என்று சிரித்த எமோஜியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த ஸ்கிரீன்ஷாட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்ககூடாது. பிசிசிஐ உடனடியாக இதில் தலையிட்டு முடிவுகளை எடுக்கவேண்டும் என்று கருத்திட்டு வருகின்றனர். அதேவேளையில் மீண்டுமொரு இன்ஸ்டா பதிவை பதிவிட்டிருக்கும் ஹனுமா விஹாரி, சம்பந்தப்பட்ட அரசியல்வாதி மகனை தனிப்பட்டமுறையில் பாதிக்கும்படி எதுவும் விஹாரி திட்டவில்லை என ஒட்டுமொத்த அணியும் கையெழுத்திட்டிருக்கும் கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

ஹனுமா விஹாரி
“மனசுல என்ன ஹீரோ-னு நினைப்பா?” - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா! என்ன நடந்தது?

விஹாரிக்காக கையெழுத்திட்ட அணி வீரர்கள்!

விஹாரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அடுத்த பதிவில், “என்ன நடந்தது என்று அணிக்கு தெரியும்” என்று அணி வீரர்கள் விஹாரி தான் கேப்டனாக வேண்டும் என்று ஆந்திரா கிரிக்கெட் அஸோசியேஷனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், “சமீபத்தில் விஹாரி மீது எழுந்திருக்கும் பிரச்னை குறித்து தெளிவுபடுத்தவிரும்புகிறோம். ஆந்திரா கிரிக்கெட்டின் சகவீரர் ஒருவர் சமீபத்தில் கேப்டன் விஹாரி கஷ்டப்படும்படி திட்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்டிருக்கும் படி எந்தவிதமான தவறான வார்த்தைகளையோ அல்லது திட்டவோ விஹாரி செய்யவில்லை, இதுபோன்ற நிகழ்வுகள் கிரிக்கெட் சூழலில் நடப்பது எதார்த்தனமான விசயம். அன்றும் அப்படித்தான் நடந்தது, அதுவும் அணியின் முன்னேற்றத்திற்காக மட்டுமே விஹாரி அப்படி பேசினார்,

ஆனால், அந்த வீரர் அதை அவருக்காக கூறியதாக தவறுதலாக எடுத்துக்கொண்டார். அன்று இதுதான் நடந்தது என்பதற்கு அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாஃப் என அனைவரும் சாட்சி. விஹாரியின் கேப்டன்சியின் கீழ் ஆந்திரா அணி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. அவரிடம் எங்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் கிடையாது. அவருடைய தலைமையில் ரஞ்சிக்கோப்பையில் ஒரு அணியாக 7முறைக்கு மேல் நாங்கள் தகுதிபெற்றுள்ளோம். தொடர்ந்து விஹாரி கேப்டனாகவும், ஒரு வீரராகவும் ஆந்திரா கிரிக்கெட் அணியில் தொடரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்று கூறி அனைத்து வீரர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

ரசிகர்களின் அதிகப்படியான கமெண்ட்டால் ப்ருத்வி ராஜ் தன்னுடைய பதிவை டெலிட் செய்துவிட்டதாகவும், கமெண்ட் பாக்ஸையும் அனைத்து வைத்துவிட்டதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். எப்படியிருப்பினும் இந்தவிவகாரம் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியுள்ளது.

ஹனுமா விஹாரி
”அரசியல்வாதி மகனால் கேப்டன் பதவியை இழந்தேன்!” - அதிர்ச்சி பதிவிட்ட ஹனுமா விஹாரி! நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com