INDvENG|“வெளிப்படைத்தன்மை தேவை; DRS இயக்குபவர்களை கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்!”- மைக்கேல் வாகன்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் முழுக்க டிஆர்எஸ் முடிவால் கொடுக்கப்பட்ட விக்கெட்டுகள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் DRS ஆப்ரேட்டர்களை கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
joe root drs out
joe root drs outX

கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றது. அதற்கு பிறகு கம்பேக் கொடுத்த இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-1 என தொடரை கைப்பற்றியது. அப்போது போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களை குற்றஞ்சாட்டிய இங்கிலாந்து அணி, இந்தியா ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளங்களை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டியது.

கடந்தமுறை பிட்ச்களை குற்றஞ்சாட்டிய இங்கிலாந்து வீரர்கள் மற்றும் இங்கிலாந்து அணி, தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் DRS சிஸ்டத்தை குற்றஞ்சாட்டிவருகின்றனர். முதல் 3 போட்டிகளில் 3 முடிவுகள் மீது குற்றஞ்சாட்டிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ”DRS சிஸ்டமில் இருந்து அம்பயர்ஸ் கால்” என்பதை நீக்கவேண்டும் என பகிரங்கமாக தெரிவித்தார்.

அதற்கு பிறகு தொடங்கப்பட்ட 4வது டெஸ்ட் போட்டியின் (தற்போது ராஞ்சியில் நடக்கும் போட்டி) முதல் இன்னிங்ஸில் இந்தியாவிற்கு எதிராக ”DRS அம்பயர்ஸ் கால்” மூலம் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது. அதனால் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அப்போது பென் ஸ்டோக்ஸின் குற்றச்சாட்டு குறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், “இப்போது உங்களுக்கு சாதகமாக DRS அம்பயர்ஸ் கால் இருக்கிறது என்று சொல்லமுடியுமா” என்று விமர்சனம் செய்தார்.

joe root
joe root

இத்தகைய சூழலில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் அவுட்டாகி வெளியேறிய DRS அவுட் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், ”DRS ஆப்ரேட்டர் அறையில் டிவி கேமரா பொறுத்தவேண்டும். அம்பயர்களை விட யார் DRS டெக்னாலஜியை இயக்குகிறார்களோ அவர்கள்தான் முக்கியமானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

joe root drs out
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

பேசுபொருளாக மாறிய விக்கெட்டுகள்!

2வது டெஸ்ட், 4வது நாள், ஜாக் கிராவ்லி - குல்தீப் யாதவ்:

2வது டெஸ்ட் போட்டியில் 398 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில், ஜாக் கிராவ்லி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது லெக் ஸ்டெம்புக்கு நேராக குல்தீப் யாதவ் பந்தைவீச, அது கிராவ்லியின் கால்களில் பட்டது. பந்து பிட்சாகி லெக் ஸ்டம்பை மிஸ் செய்வது போல் இருந்ததால் அம்பயரால் நாட்அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது இந்திய அணி DRS முடிவுக்கு சென்றனர்.

அதில் அம்பயரின் நாட் அவுட் முடிவு மாற்றப்பட்டு அவுட் கொடுக்கப்பட்டது. அந்த DRS முடிவால் இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி விரைவாகவே சென்றது. அந்தப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெறமுடியாமல் போயிருந்தாலும், போட்டியை சமன்செய்யும் வாய்ப்பாவது இருந்திருக்கும். DRS-ன் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குற்றஞ்சாட்டினார்.

joe root drs out
ரஞ்சி காலிறுதி: 18 வயதில் இரட்டை சதம்! வரலாறு படைத்த சர்பராஸ் தம்பி முஷீர்கான்! தப்பித்த மும்பை!

3வது டெஸ்ட், 4வது நாள், ஜாக் கிராவ்லி - ஜஸ்பிரித் பும்ரா:

3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெறக்கூடிய நிலையில் இல்லை என்றாலும், அந்த அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 122 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 434 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கவீரர் ஜாக் கிராவ்லியை LBW மூலம் பும்ரா வெளியேற்றினார். களநடுவர் அவுட் கொடுத்த பிறகு, அந்த முடிவை எதிர்த்து கிராவ்லி DRS பயன்படுத்தினார். அதில் பந்து லெக் ஸ்டம்பில் பட்டது போல் அம்பயர்ஸ் கால் காமிக்க அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிப்ளேவில் பந்தானது பிட்சாகி வெளியே செல்வது போலாகவே இருந்தது. அதுமட்டுமல்லாமல் பந்து பெய்ல்ஸ் மற்றும் ஸ்டம்பில் அடிக்கவே இல்லை என்று சமூக வலைதளங்களில் வாதிடப்பட்டது.

இந்த DRS முடிவால் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி தோல்வியை நோக்கி விரைவாகவே சென்றது. ஜாக் கிராவ்லியின் அந்த விக்கெட்டில் விரக்தியடைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “DRS-ல் இருந்து அம்பயர்ஸ் காலை நீக்கவேண்டும்” என்று கூறினார்.

joe root drs out
35 முறை 5 விக்கெட்கள்; இந்திய மண்ணில் 354 விக்கெட்கள் - அனில் கும்ப்ளே ரெக்கார்டை தகர்த்த அஸ்வின்!

4வது டெஸ்ட், 3வது நாள், ஜோ ரூட் - அஸ்வின்:

4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் அருகாமையில் இருந்துவருகிறது. இந்நிலையில் அஸ்வின் பந்தில் அவுட்டான ரூட்டின் விக்கெட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், DRS டெக்னாலஜியை இயக்குபவர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஜோ ரூட்டுக்கு எதிராக அஸ்வின் வீசிய பந்து லெக் ஸ்டம்புக்கு நேராக பிட்ச்சாகி வெளியே செல்வது போல் நேரடி பார்வைக்கு தெரிந்தது. ஆனால் DRS ரிவியூவில் பந்து பிட்சாகி நேராக சென்று லெக் ஸ்டம்பை தாக்குவது போல் காட்டப்பட்டு அவுட் கொடுக்கப்பட்டது. அதனை கேள்வி எழுப்பியிருக்கும் மைக்கேல் வாகன், “திரையில் காட்டப்பட்ட DRS புகைப்படத்தை பதிவுசெய்து பந்தானது ஸ்டம்ப் லைனுக்கு அவுட்சைடு பிட்சாகியுள்ளது, ஆனால் லைனுக்கு பிட்சாகியுள்ளதாக கூறப்பட்டது” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

joe root drs out
“இடது கை ஷேன் வார்னே” - 4 விக்கெட் வீழ்த்திய குல்தீப்பை புகழ்ந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

டிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும்!

4வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் குறித்து எக்ஸ் தளத்தில் அதிகமாக பதிவிட்டிருக்கும் மைக்கேல் வாகன், ஏன் ஜோ ரூட்டின் அவுட் அதிகமாக பார்க்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை நட்பு ரீதியாக கேட்கிறேன் என பேசியிருக்கும் அவர், DRS டெக்னாலஜியை இயக்குபவர்கள் யார் என்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் வாகன், “இதுபோன்ற முக்கியமான தொடர்களில் அம்பயர்களை விட DRS டெக்னாலஜியை இயக்குபவர்களே முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். டிரக்குகளில் DRS டெக்னாலஜியை இயக்குபவர்கள் யார் என்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். அதனால் ஆப்ரேட்டர் அறைகளில் வெளிப்படைத்தன்மைக்காக டிவி கேமராவை பொறுத்தவேண்டும்.

நான் டெக்னாலஜியை குறைகூறவில்லை, அதேநேரத்தில் DRS டெக்னாலஜியை யார் பயன்படுத்துகிறார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும், அதற்கு ஐசிசி ஒரு அதிகாரியை நியமிக்கலாம். மீண்டும் சொல்கிறேன், நான் யாரையும் குறைகூறவில்லை. அதேநேரம் சந்தேகத்திற்குரிய முடிவுகளை தவிர்ப்பதற்காக இதுபோன்ற வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் அவசியமான ஒன்று” என்றுள்ளார். இவ்வாறாக டெலிகிராப் மேற்கோள் காட்டியுள்ளது.

joe root drs out
“மனசுல என்ன ஹீரோ-னு நினைப்பா?” - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com