அந்தப் போட்டி! ஆஸ்திரேலியாவின் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்து வி.வி.எஸ்.லட்சுமண் செய்த தரமான சம்பவம்!

ஒருகாலத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதப் போகிறது என்றால், அந்த வீரர்களின் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்தவர் வி.வி.எஸ்.லட்சுமண்.
வி.வி.எஸ்.லக்‌ஷ்மண்
வி.வி.எஸ்.லக்‌ஷ்மண்twitter

வி.வி.எஸ்.லட்சுமண் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ செயலாளர்

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப் பின், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்படுவார் எனவும், அவரது பெயரை, பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இல்லாத பல சமயங்களில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக லட்சுமண் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பதவிக்கு அவர் வருவதற்கு தகுதியும், திறமையும் இருக்கும் நிலையில், மறுபுறம் அவர் இந்திய அணிக்காக நிகழ்த்திய சாதனைகளும் எண்ணில் அடங்காதது. அப்படிப்பட்ட ஜாம்பவான் லட்சுமண்-க்கு (தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர்) இன்று பிறந்த நாள்.

அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஜெர்சி ஒன்றையும் வழங்கி பரிசளித்துள்ளார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார், பர்த் டே பேபி லக்‌ஷ்மண்.

இதையும் படிக்க: 12 மசோதாக்கள் நிறுத்திவைப்பு.. 5 முக்கிய குற்றச்சாட்டுகள்.. ஆளுநர் மீது வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

ராகுல்  டிராவிட்டுக்கு மாற்றாகக் கருதப்பட்டவர் லட்சுமண்

ஒருகாலத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதப் போகிறது என்றால், அந்த வீரர்களின் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்தவர் வி.வி.எஸ்.லட்சுமண். அதிலும், நடுவரிசையில் இறங்கி விக்கெட்டை இழந்திடாமல், அதேநேரத்தில் பொறுமையுடனும் கவனமுடனும் விளையாடி ரன்களை விரைவாகவும் குவிக்க வேண்டும். இது, எல்லா வீரர்களாலும் இயலாத காரியம் என்றாலும், இதில் தனக்கென ஒரு சாதனை படைத்தவர் ராகுல் டிராவிட். ஆனால், அவருக்கே போட்டியாக விளங்கியவர் லட்சுமண்.

அதனால்தான் அந்தச் சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைத் தன் பேட்டால் தவிடுபொடியாக்கி தனக்கென ஓர் நிரந்தர இடத்தைப் பிடித்தார், லட்சுமண். இந்தியாவின் தடுப்புச் சுவர் என பெயரெடுத்தவர், டிராவிட். ஆனால், அவருக்கு மாற்றாக சம பங்களிப்பை அளித்தவர் லட்சுமண். அவரது முழு ஆட்டத்திறனும் டெஸ்ட் போட்டிகளில் வெளிப்பட்டிருக்கிறது; அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில்தான் அதிகம் வெளிப்பட்டிருக்கிறது. அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், இன்றும், லட்சுமணனைப் பற்றிப் பேசப்படும் ஒரே போட்டி, 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான்.

இதையும் படிக்க: உ.பி: லிஃப்ட்டில் நாயை அழைத்து வந்த பெண்மணி..கன்னத்தில் அறைவிட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி! வீடியோ

இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரே போட்டி

அந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலியா, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. மார்ச் 11-15 வரை நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 171 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

எனினும், அந்த முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் லட்சுமண் மட்டுமே. அவர் 59 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து இந்திய அணி பாலோ ஆன் ஆகி விளையாடியது. இதனால், இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றுவிடும் என்பதே பலருடைய எண்ணமாக இருந்தது. என்றாலும் அதைச் சுக்குநூறாக உடைத்தவர் லக்‌ஷ்மண். ஆம், இரண்டாவது இன்னிங்ஸில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 281 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக ராகுல் டிராவிட் 180 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி, அந்த இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்ததுடன், 171 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதையும் படிக்க: ’நவம்பர் 12.. ப்ளைட் ரெடி’ - கோலியைக் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்தியா பதிலடி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாகசம் நிகழ்த்திய லட்சுமண்

இது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமண் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளில் ஒரு பக்கம்தான் என்றாலும், இன்னும் சொல்ல வேண்டிய பக்கங்கள் நிறைய உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் படைத்த சாதனைப் புத்தகத்தில் 2000இல் சிட்னி, 2003இல் அடிலெய்டு மற்றும் சிட்னி, 2008இல் பெர்த் உள்ளிட்ட மைதானங்களில் அவர் ஆடிய ஆட்டங்கள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாம்ராஜ்ஜியத்தோடு சரிசமமாக உட்காரவைத்தது.

அவை, இன்றும் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்து, அவருடைய திறனை உலகுக்கு மெய்ப்பித்து வருகின்றன.

இதையும் படிக்க: மராத்தா இடஒதுக்கீடு: பற்றி எரியும் மகாராஷ்டிரா.. MLA, MPக்கள் ராஜினாமா.. ஆளும் அரசுக்கு சிக்கலா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com