உ.பி: லிஃப்ட்டில் நாயை அழைத்து வந்த பெண்மணி..கன்னத்தில் அறைவிட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி! வீடியோ

செல்லப்பிராணியை லிஃப்ட்டில் அழைத்துச் சென்ற விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், பெண்ணை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உ.பி. வீடியோ
உ.பி. வீடியோட்விட்டர்

நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை பலரும் ஆசையாக வளர்ப்பதுண்டு. ஆனால், அதில் சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளை கையாளும் விதமானது அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு கடும் தொந்தரவாக மாறி பெரும் சங்கடங்களை உருவாக்கிவிடுகிறது. செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், அதை தங்களுடன் இன்று பல இடங்களுக்கும் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆம், அடுத்தவர்களின் பிரைவசி மற்றும் பாதுகாப்புக்கு தொந்தரவு தரும் வகையில் சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் பொதுவெளியில் நடந்துக்கொள்வதை சமீப நாள்களில் பார்த்திருப்போம்.

இதனால் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கடந்த காலங்களில் லிஃப்ட்டில் செல்லப்பிராணியான நாய்க்குட்டியை அழைத்துச் சென்றபோது அது, மற்றவர்களைக் கடித்து வைத்த சம்பவங்கள் வீடியோவாக இணையதளங்களில் பரவி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக மேலும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இதையும் படிக்க: மராத்தா இடஒதுக்கீடு: பற்றி எரியும் மகாராஷ்டிரா.. MLA, MPக்கள் ராஜினாமா.. ஆளும் அரசுக்கு சிக்கலா?

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் லிஃப்ட்டில் நாயை அழைத்து வந்த பெண்ணை, ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரி ஒருவர் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக அந்த வீடியோவில் உள்ள தேதி காட்டுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், செக்டர் 108இல் உள்ள பாரக்ஸ் லாரெட் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அங்கிருந்த லிஃப்ட்டில் பயணித்துள்ளார்.

அப்போது பெண்மணி ஒருவர், தனது நாயை வெளிப்புறத்திற்கு அழைத்துச்செல்ல அந்த லிஃப்ட்டை பயன்படுத்தி இருக்கிறார். அந்தப் பெண்மணி லிஃப்ட்டுக்குள் நாயை அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்த ஓய்வுபெற்ற ஆட்சியர், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து இருக்கிறார். தவிர, இதுகுறித்தும் அந்தப் பெண்மணியிடம் கேட்டுள்ளார். இதற்கு அந்தப் பெண்மணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதையும் படிக்க: போலந்து தற்காப்பு கலை போட்டி: மகனின் முன்னாள் காதலிக்கு குத்துவிட்டு சாய்த்த அம்மா! வைரல் வீடியோ!

ஒருகட்டத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் போனையும் அந்தப் பெண்மணி தட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி தன் கணவருக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அவர், லிஃப்ட்டுக்குள் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

பின்னர், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள் வந்து இருதரப்பையும் விலக்கிவிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ’இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ - அதிரடியில் இறங்கிய தாய்லாந்து! ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com