pant run out
pant run outcricinfo

'63 எக்ஸ்ட்ரா ரன்கள் to பண்ட் RunOut' | லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவின் தோல்விக்கான 5 காரணங்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லார்ட்ஸ் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்திய அணி 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தபோதும், நம்பர் 10, நம்பர் 11 வீரர்களான பும்ரா மற்றும் சிராஜ் உடன் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஜடேஜா இந்தியாவின் நம்பிக்கையை உயர்த்தினார். ஆனால் என்னதான் ஜடேஜா தனியாளாக போராடினாலும், இறுதி சிரிப்பை இங்கிலாந்தே ருசித்தது.

போட்டியின் கடைசி செஸ்ஸன் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்ற லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி, ஒரு த்ரில்லிங்கான முடிவை எட்டியது. 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

வெற்றிபெறுவதற்கான பக்கத்தில் இந்தியா இருந்தபோதும், வீரர்களின் பொறுப்பற்ற ஷாட் மற்றும் நிதானமில்லாத பேட்டிங்கால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கான 5 காரணங்களை இங்கே பார்க்கலாம்..

1. ரிஷப் பண்ட் - ராகுல் செய்த RunOut!

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா தோற்றதற்கான முதல் காரணமாக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் செய்த ரன் அவுட் குளறுபடியை தான் கூறவேண்டும்.

248/3 என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டுக்கு பிறகு 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 387 ரன்கள் அடித்தது.

pant run out
pant run out

உணவு இடைவேளைக்கு முன்னதாக 100 அடிக்க ஆசைப்பட்ட கேஎல் ராகுல் ரிஷப் பண்ட்டை சிங்கிளுக்கு அழைக்க, புத்திசாலித்தனமாக நான் ஸ்டிரைக் எண்ட்டிற்கு அடித்த பென் ஸ்டோக்ஸ் ரிஷப் பண்ட்டை 74 ரன்களுக்கு அவுட்டாக்கினார். அவர் அவுட்டான சிறிது நேரத்தில் கேஎல் ராகுலும் 100 ரன்களில் வெளியேறினார்.

ஒருவேளை கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அந்த முடிவை எடுக்காமல் நிலைத்து ஆடியிருந்தால் இந்தியா 100 ரன்களையாவது கூடுதலாக அடித்திருக்கும்.

ரன் அவுட் குறித்து பின்னர் பேசிய கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டும் நானும் உணவு இடைவேளைக்கு முன்னதாக 100 அடிக்கவேண்டும் என்று பேசிக்கொண்டதாக உண்மையை ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்வு மற்ற காரணங்களை காட்டிலும் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.

pant run out
அனல்பறந்த களம்| அடிபட்டதாக நடித்த ENG வீரர்.. ஸ்நாக்ஸ், தண்ணீர் கொண்டுவாங்கணு கலாய்த்த IND வீரர்கள்!

2. மோசமான ஷாட் சலெக்சன்.. மோசமான அணுகுமுறை!

டாப் ஆர்டர் வீரர்களிடமிருந்து ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்திருந்தாலே இந்திய அணி வெற்றிபெற்றிருக்கும். தொடர் முழுவதும் சதங்களாக அடித்த ஒரு வீரர் கூடசோபிக்க தவறிவிட்டனர். போதைக்குறைக்கு மோசமான ஷாட்களை விளையாடிய இந்திய வீரர்கள் அணியை தோல்விக்கு அழைத்துச்சென்றனர்.

அதில் முக்கிய குற்றவாளி யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். சிறந்த ஃபார்மில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் இடமிருந்து அப்படியான ஷாட் சலெக்சன் வந்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

அதேபோல ‘டியர் கிரிக்கெட் இன்னொரு வாய்ப்பு கொடு’ என்று கேட்ட கருண் நாயர், இந்தபோட்டியில் நிலைத்து ஆடி வெற்றியை தேடிக்கொடுத்திருந்தால் கிடைத்த வாய்ப்பிற்கு அவர் நியாயம் செய்துவிட்டார் என்ற நிலை உருவாகியிருக்கும். மாறாக அனுபவமில்லாத வீரரை போல பந்தைவிட்டு LBW மூலம் வெளியேறிய அவர் மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்துவருகிறார். நீங்கள் எப்படிபட்ட வீரர் என்பது முக்கியமல்ல, இந்திய அணிக்கு எப்படிபட்ட வெற்றிகளை தேடித்தருகிறீர்கள் என்பது தான் முக்கியமானது.

அதேபோல கேப்டன் சுப்மன் கில்லின் அணுகுமுறையும் 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் நிலைத்து நின்று ஆடுவதாக இல்லை. மாறாக ஆக்ரோஷமாக செயல்பட்ட அவர் 9 பந்தில் 6 ரன்கள் அடித்து விரைவாகவே வெளியேறினார். இப்படி ஒவ்வொரு டாப் ஆர்டர் வீரர்களும் தங்களுடைய பொறுப்பை உணராமல் விளையாடியது தோல்விக்கு மற்றொரு பெரிய காரணமாக அமைந்தது.

pant run out
இதே நாள் சட்டையை சுழற்றிய கங்குலி| ’ஒட்டுமொத்த அணியையும் செய்ய சொன்ன தாதா..’ 3 சுவாரசிய தகவல்கள்!

3. டெய்ல் எண்டர்களை விக்கெட் எடுக்க தெரியாத பவுலர்கள்..

காலங்காலமாக இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது இந்திய அணி. டாப் ஆர்டர் வீரர்களை எல்லாம் அவுட்டாக்கிவிட்டு, டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன்களை விக்கெட் வீழ்த்த முடியாமல் ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டு தோல்வியை கண்டுவருகிறது.

லார்ட்ஸ் போட்டியிலும் சதமடித்த ஜோ ரூட் அவுட்டான பிறகு 271/ 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி, கடைசி 3 விக்கெட்டுக்கு 116 ரன்களை சேர்த்து அசத்தியது. நம்பர் 9-ல் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் கார்ஸ் அரைசதமடித்தது தான் கொடுமையிலும் கொடுமை. ’இதுக்கு இல்லையா சார் ஒரு முற்றுப்புள்ளி’ என்ற விதத்திலேயே இந்தியாவின் பந்துவீச்சு இருந்துவருகிறது.

கார்ஸ்
கார்ஸ்

டெய்ல் எண்டர்களின் ஸ்டம்புகளை எல்லாம் பறக்கவிட்ட அஜித் அகர்கரை தேர்வுக்குழு தலைவராக வைத்திருக்கும் இந்தியா இதற்கு ஒரு தீர்வை கொண்டுவர வேண்டும். ’அய்யா பவுன்சரும், யார்க்கரும் போட சொல்லுங்க அய்யா’ என்ற நிலைமையிலேயே இந்திய ரசிகர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திவருகின்றனர்.

pant run out
தோனி Or கோலி? அழுத்தமான நேரத்தில் யாரின் வழியை தேர்ந்தெடுக்க போகிறார் கில்..?

4. கேட்ச்களை கோட்டைவிடுவது.. கடைசி 5 விக்கெட்டுகளை எளிதாக விடுவது!

இந்தியாவின் சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சென்ற பிறகு, ஸ்லிப் கேட்ச்களை கோட்டைவிட்டு வருகிறது இந்திய அணி. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியை இழக்க மிகப்பெரிய காரணமாக இருந்தது கேட்ச்களை இந்தியா கோட்டைவிட்டது தான்.

இந்த சூழலில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தின் கேட்ச்சை 5 ரன்னில் கோட்டைவிட்டார் கேஎல் ராகுல். அதற்குபிறகு அவர் அரைசதமடித்து இங்கிலாந்தை 387 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

இதுபோக இந்தியாவின் டாப் 5 வீரர்கள் ரன்களை அடித்தால், கீழ்வரிசையில் களமிறங்கும் வீரர்கள் குறைவான ரன்களில் அவுட்டாகின்றனர். இது அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு கடைசி 6 விக்கெட்டுகளை இழந்தது.

இதையேதான் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் இந்தியா செய்தது. அங்கு 326/5 விக்கெட்டுகளில் இருந்த இந்தியா கடைசி 5 விக்கெட்டுகளை 61 ரன்களில் இழந்தது.

pant run out
"விராட் கோலி பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும்" - சீண்டும் வகையில் பேசிய ஸ்டோக்ஸ்! Fans கொந்தளிப்பு!

5. 63 எக்ஸ்ட்ரா ரன்கள்..

விக்கெட் கீப்பிங்கின் போது ரிஷப் பண்ட்டின் கையில் அடிபட, துருவ் ஜுரல் இந்தியாவின் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். ஆனால் அவருக்கு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி ஒரு மோசமான போட்டியாக மாறியது, அவருடைய கையில் பந்து நிற்கவே இல்லை. மாறாக தனியொரு ஆளாக 30 ரன்களை இங்கிலாந்தின் பக்கம் விட்டுக்கொடுத்தார்.

துருவ் ஜுரலின் மோசமான விக்கெட் கீப்பிங் காரணமாக இந்தியா முதல் இன்னிங்ஸில் 31 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 32 ரன்கள் என மொத்தம் 63 எக்ஸ்ட்ரா ரன்களை வாரிவழங்கியது. இது நடக்காமல் இருந்திருந்தாலே இந்தியாவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருக்கும்.

india england
india england

எப்படியிருப்பினும் இந்தியா கடினமான முயற்சிக்கு பிறகும் தோல்வியின் பக்கம் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வென்று இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

pant run out
The Unsung Hero - சிராஜ்| எத்தனை தோல்விகள், எத்தனை ட்ரோல்கள்.. விழவிழ எழுந்து நின்ற வீரனின் கதை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com