dhoni - kohli - gill
dhoni - kohli - gillweb

தோனி Or கோலி? அழுத்தமான நேரத்தில் யாரின் வழியை தேர்ந்தெடுக்க போகிறார் கில்..?

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் 6 ரன்னில் அவுட்டான பிறகு, அழுத்தமான நேரத்தில் இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் அணுகுமுறை தோனி அல்லது கோலி இருவரின் ஒருவரை போல இருக்கவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கூறினார்.
Published on

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் என்ற மிகப்பெரிய பொறுப்பை தோளில் சுமந்திருக்கும் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் சவாலை எதிர்கொண்டுள்ளார்.

கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து மண்ணில் 600 ரன்களுக்கு மேல் குவித்த சுப்மன் கில், இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட்டின் 602 ரன்கள் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதுபோக கேப்டனாகவும் இங்கிலாந்து அணிக்கு சவாலை கொடுத்துள்ளார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

எப்போதும் ஆக்ரோஷமான அணுகுமுறையை கையிலெடுக்கும் ’பாஸ்பால்’ இங்கிலாந்து அணி, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடையக்கூடாது என பின்னோக்கி சிந்தித்துள்ளதே சுப்மன் கில்லுக்கு பெரிய வெற்றிதான்.

ஆனால் 3வது டெஸ்ட் போட்டியில் 192 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய பிறகும், இந்திய அணி 58 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில் அழுத்தமான தருணங்களில் எப்படியான அணுகுமுறையை கில் கையிலெடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் மஞ்ச்ரேக்கர் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

dhoni - kohli - gill
இதே நாள் சட்டையை சுழற்றிய கங்குலி| ’ஒட்டுமொத்த அணியையும் செய்ய சொன்ன தாதா..’ 3 சுவாரசிய தகவல்கள்!

தோனியா? கோலியா? யாரை கில் பின்பற்ற வேண்டும்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது. 192 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டிய பிறகு இந்தியாவே வெற்றிபெற போகிறது என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது, ஆனால் தரமான கம்பேக் கொடுத்த இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தையே மாற்றியுள்ளது.

3வது வீரராக களமிறங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில் 9 பந்தில் 6 ரன்கள் அடித்து அவுட்டானார். அதற்குபிறகு நைட் வாட்ச்மேன் ரோலில் களமிறங்கிய ஆகாஷ் தீப்பும் அவருடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த தொடரில் மட்டும் 3 சதங்களை அடித்திருக்கும் சுப்மன் கில், நேற்றைய ஆட்டத்தில் சற்று பதட்டமாக விளையாடினார். அவரின் பதட்டத்தை சரியாக பயன்படுத்திகொண்ட இங்கிலாந்து அடுத்தடுத்து அழுத்தம் கூட்டியது. அதிலும் பென் டக்கெட் உடனான வாக்குவாதத்தை தொடர்ந்து, அம்பயர் அவுட் கொடுத்து ரிவ்யூ எடுத்தது என அனைத்திற்கு பிறகும் நிதானத்தை இழந்த கில் விக்கெட்டை விரைவாக இழந்தார்.

இந்நிலையில் ஆக்ரோசம் அல்லது அழுத்தமான சூழலில் சுப்மன் கில் பதட்டமடைகிறார். இதே இடத்தில் விராட் கோலி இருந்திருந்தால் கோவமாக இருக்கும்போது இன்னும் வலுவான தாக்குதலை எடுத்துவருவார். தோனி அதற்கு அப்படியே எதிரணிக்கு சவால் கொடுத்து அமைதியாக நிலைத்து நிற்பார். சுப்மன் கில் கோபத்தின் போதும், அழுத்தத்தின் போதும் தோனி அல்லது கோலி இருவரில் ஒருவரை பின்பற்ற வேண்டும் என மஞ்ச்ரேக்கர் பரிந்துரைத்துள்ளார்.

virat kohli
virat kohli

கில் பேட்டிங் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “நேற்று மாலை திடீரென கில் பதட்டமாக விளையாடியதற்கு, இங்கிலாந்திடமிருந்து அவர் களத்தில் எதிர்கொண்ட மோதல்போக்கு ஒரு முக்கிய காரணமாகும். இப்படியான நேரங்களில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார், அவர் கோபத்தின் போது சிறந்தவீரராக வெளிப்படுவார். தோனி அதற்கு அப்படியே நேர்மாறாக அமைதியாக விளையாடக்கூடியவர்.

சுப்மன் கில் இப்படியான தருணங்களின் போது தன்னிடமிருந்து சிறந்ததை பெற, அமைதி அல்லது கோபம் இரண்டில் எதைப் பின்பற்றபோகிறார் என்பதை தீர்மானிக்க வேண்டும்” என்று கருத்திட்டுள்ளார்.

dhoni - kohli - gill
அனல்பறந்த களம்| அடிபட்டதாக நடித்த ENG வீரர்.. ஸ்நாக்ஸ், தண்ணீர் கொண்டுவாங்கணு கலாய்த்த IND வீரர்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com