குரு பூர்ணிமா 2025
குரு பூர்ணிமா 2025FB

’குரு பூர்ணிமா 2025’ எப்போது? எந்த நேரம்? வியக்கவைக்கும் பின்னணி தகவல்கள்!

வறுமை நீங்கி செல்வம் பெருக குரு பூர்ணிமா அன்று இதையெல்லாம் செய்யலாம் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்..
Published on

செய்தியாளர் - வைஜெயந்தி.எஸ்

குரு பூர்ணிமா என்பது மகரிஷி வேத வியாசரின் பிறப்பைக் குறிக்கிறது. ஆனி மாத பெளர்ணமியில் அனுசரிக்கப்படும் குரு பூர்ணிமா குருக்களை நன்றியுணர்வுடன் கௌரவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

வழிகாட்டிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும், ஞானத்தையும் வழிகாட்டுதலையும் வழங்கும் குருக்களின் பங்கை அங்கீகரிக்கும் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இந்த குருக்கள் நமது ஆசிரியர்களாகவோ, பெற்றோராகவோ, ஆன்மீக வழிகாட்டிகளாகவோ அல்லது வாழ்க்கையில் நமக்கு சரியான பாதையைக் காட்டிய எந்தவொரு நபராகவோ இருக்கலாம். மேலும் இந்த நாள் ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

guru purnima 2025
guru purnima 2025Facebook

குரு பூர்ணிமா ஏன் கொண்டாடப்படுகிறது?

குரு பூர்ணிமா இந்து மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது இந்து இதிகாசமான மகாபாரதத்தை தொகுத்த புகழ்பெற்ற முனிவரான மகரிஷி வேத வியாசரின் பிறப்பை நினைவுகூரும் நாளாகும். மேலும், இந்திய பாரம்பரியத்தில் மிகச் சிறந்த ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் போற்றப்படுகிறார்.

குரு பூர்ணிமா 2025
கோயிலில் அனுமதி மறுப்பு.. காங். தலைவரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர்!

இந்த பண்டிகை புத்த மதம் மற்றும் சமண மதத்திலும் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. புத்தர் ஞானம் பெற்ற பிறகு சாரநாத்தில் தனது முதல் பிரசங்கத்தை இந்த நாளில் நிகழ்த்தினார் என்று நம்பப்படுவதால், அவரை கௌரவிக்கும் விதமாக பௌத்தர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். மேலும் மகாவீரருக்கும் அவரது தலைமை சீடர் கௌதம சுவாமிக்கும் மரியாதை செலுத்துவதற்காக சமணர்கள் குரு பூர்ணிமாவைக் கடைப்பிடிக்கின்றனர்.

புத்தர் ஞானம் பெற்ற பிறகு சாரநாத்தில் தனது முதல் பிரசங்கத்தை இந்த நாளில் நிகழ்த்தினார் என்று நம்பப்படுவதால், அவரை கௌரவிக்கும் விதமாக பௌத்தர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

குரு பூர்ணிமா என்பது நம் வாழ்வில் உள்ள குருக்களை மரியாதையுடன் வணங்கும் ஒரு சிறப்பு நாள். இந்த பண்டிகையின் மத மற்றும் உணர்ச்சி முக்கியத்துவம் ஆழமானது. ஆனி மாத பௌர்ணமி நாளில், மகரிஷி வேத வியாசர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. வேதங்கள், புராணங்கள் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை இயற்றுவதன் மூலம், அவர் சனாதன தர்மத்திற்கு ஆழமான அறிவுசார் அடித்தளத்தை அமைத்தார். எனவே, இந்த நாள் வேத வியாசர் ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.

ஆனி மாத பௌர்ணமி நாளில், மகரிஷி வேத வியாசர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இந்த நாள் வேத வியாசர் ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.
குரு பூர்ணிமா 2025
32 தீர்த்தங்கள், இசை தூண்கள் | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் தனிச்சிறப்புகள் பற்றி தெரியுமா?

குரு பூர்ணிமாவின் முக்கியத்துவம்

இந்த நாளில், மக்கள் தங்கள் குருக்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள், அவர்களுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார்கள். மத நம்பிக்கையின்படி, இந்த நாளில் புனித நதிகளில் நீராடுவது, தானம் செய்வது மற்றும் குருவை வணங்குவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மேலும் குரு பூர்ணிமா என்பது வாழ்க்கையின் அறியாமை என்னும் இருளை அகற்றி நம்மை சரியான பாதைக்கு கொண்டு செல்லும் அறிவுக்கு ஒரு மரியாதை கொடுக்கும் பண்டிக்கையாகும். குரு பூர்ணிமாவின் தேதி, நல்ல நேரங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

இந்த வருடம் குரு பூர்ணிமா 2025 தேதி, நேரம் என்ன?

பூர்ணிமா திதி ஜூலை 10, 2025 – அதிகாலை 01:36 மணிக்கு தொடங்குகிறது. அதன் பிறகு

ஜூலை 11, 2025 - 02:06 மணிக்கு பூர்ணிமா திதி முடிவடைகிறது. அத்துடன் மாலை சந்திர உதயம் (ஜூலை 11, 2025) 07:19 மணிக்கு தொடங்குகிறது.

குரு பூர்ணிமா 2025
திருப்பதிக்கு போக பிளான் இருக்கா? அப்போ கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க..!

குரு பூர்ணிமாவில் வறுமை நீங்க இப்படி வழிபாடு செய்யுங்கள்

வீட்டின் முன் வாசலில் மகாலட்சுமியின் பாதத் தடங்களை கோலமாக போட வேண்டும். அல்லது வீட்டில் இந்த காலடியின் உலோக வடிவம் இருந்தால், அதை வடக்கு திசையில் வைத்து வழிபட வேண்டும். இது வறுமையை நீக்கி நிதி வளத்தை மேம்படுத்தும். மேலும் அன்றைய தினம் பெளர்ணமி என்பதால் லட்சுமி தேவிக்கு தேங்காய் மற்றும் இனிப்புகளை வைத்து வழிபடுவது மங்களகரமானதாக கருத்தப்படுகிறது.

அதே போல மாலையில் சந்திரன் (நிலா) உதயமானதும் தீபம் ஏற்றி வழிபடவும். திறந்த இடத்தில் சந்திரனுக்கு பிரசாதமாக வெள்ளை நிறத்திலான உணவுகளை படையலிடலாம். இதனால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஆன்மீக நம்பிக்கை. அத்துடன் இன்றைய நாளில் ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்தால் சிறப்பு.

குரு பூர்ணிமா 2025
திருப்பதிக்கு போக பிளான் இருக்கா? அப்போ கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com