கோயிலில் அனுமதி மறுப்பு.. காங். தலைவரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர்!
வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தம்மை அனுமதிக்காதது அதிகாரியின் தவறு என்று குற்றம்சாட்டியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அங்கு என்ன நடந்தது என்பதை சிசிடிவியைப் பார்த்து அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் புதிய தலைகுறைக்கு அளித்துள்ள பேட்டியில், “விஐபி, கூட்ட நெரிசலால் முருகனை வழிபட முடியவில்லை. அதிகாரிகள் சிலரின் தவறுதான் இது. ஆட்சியாளர்கள் தவறல்ல. மக்களுக்கான ஆட்சியை நடத்துகிறார் முதல்வர். வலதுசாரி அதிகாரிகளின் தவறுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது. தனிப்பட்ட முறையில் ஒரு அதிகாரி காழ்ப்புணர்ச்சி காட்டினார். இது அதிகாரியின் தவறு, நவீன தீண்டாமையல்ல. சிசிடிவி உள்ளது, அதைப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிரண்டு கருப்பாடுகள் இருக்கத்தான் செய்வார்கள். காந்தியே ஆட்சி செய்தாலும் கருப்பாடுகள் இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கோயிலில் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து அவரிடம் வருத்தம் தெரிவித்தார்.