பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புதான் தற்போது நாடு முழுவதும் கடும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.