மலாக்கா தூதர் ஆகிறார் ரஜினிகாந்த்?

மலாக்கா தூதர் ஆகிறார் ரஜினிகாந்த்?
மலாக்கா தூதர் ஆகிறார் ரஜினிகாந்த்?

மலேசியாவில் உள்ள சுற்றுலா நகரமான மலாக்காவுக்குத் தூதராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியாவில் உள்ள சுற்றுலா நகரம் மலாக்கா. இங்கு வருடந்தோறும் அதிகமான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் டூரிஸ்ட்டாக வந்து செல்கின்றனர். இதனால் மலேசிய சுற்றுலாத்துறை, மலாக்காவுக்கு பிரபலமான இந்தியர் ஒருவரைத் தூதராக நியமிப்பது வழக்கம். இப்போது இந்தி நடிகர் ஷாரூக் கான், தூதராக இருக்கிறார். இப்போது ரஜினிகாந்த்தை தூதராக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் ரஜினி நடித்து வெளியான கபாலி படம், முழுக்க மலேசியாவில் படமானது. மலாக்காவிலும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது அங்குள்ள தமிழர்கள் ரஜினிகாந்த் மீது காட்டியை அன்பை பார்த்த பின், இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. இதற்காக மலேசிய அரசு அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இன்னும் ரஜினிகாந்த் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி ஒப்புதல் கொடுத்தால், ஷாரூக்கானுக்கு பதிலாக ரஜினிகாந்த் மலாக்கா தூதராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com