சென்னை திரைப்பட விழாவில் ரஜினியின் `பாட்ஷா' மற்றும் 13 தமிழ் படங்கள்! | CIFF | Rajini | Baashha
23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11, 2025 முதல் டிசம்பர் 18, 2025 வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் என 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த 122 திரைப்படங்களில் இருந்து 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.
இந்திய பனோரமா பிரிவில் பீகாரில் இருந்து ஒரு திரைப்படம் ( போஜ்புரி மொழி) மற்றும் CIFF இல் முதல் முறையாக, உலக சினிமா பிரிவில் செயிண்ட் ஹெலினா, ஜார்ஜியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியான்மர், நேபாளம் மற்றும் மாண்டினீக்ரோவிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது.
இந்த நிகழ்வில் `டூரிஸ்ட் ஃபேமிலி', `பறந்து போ', `மெட்ராஸ் மேட்னி', `3BHK', `மாமன்', `காதல் என்பது பொது உடைமை', `அலங்கு', `பிடிமண்', `மாயக் கூத்து', `மருதம்', `ஒன்ஸ் அபோன் அ டைம் இன் மெட்ராஸ்', `வேம்பு' ஆகிய தமிழ் திரைப்படங்கள் திரையாகவுள்ளன. மேலும் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைத்துறை பங்களிப்பு, பாஷாவின் 30 ஆண்டுகாலப் பங்களிப்பு மற்றும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் 60 ஆண்டுகால பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் `பாட்ஷா' திரைப்படம் திரையிடப்படுகிறது.

