Rajini, Kamal, Sundar C
Rajini, Kamal, Sundar CThalaivar 173

ரஜினி படத்திலிருந்து விலகும் சுந்தர் சி.. கனத்த இதயத்துடன் அறிக்கை| Rajini | Sundar C

எனக்கு இப்படம் தயாராவது ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர் சி இயக்குவதாக நவம்பர் 5ம் தேதி அறிவித்தனர். அருணாச்சலம் படத்திற்கு பின் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படமா பொங்கல் 2027க்கு வெளியீடு என அறிவித்தனர். ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இப்படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் என சொல்லப்பட்டது.

இந்த சூழலில் இயக்குநர் சுந்தர் சியிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ரஜினி படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அதில் அவர் "என் அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு ஒரு குறிப்பு. கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், மதிப்புமிக்க #Thalaivar173யிலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்.

Thalaivar 173
Thalaivar 173
Rajini, Kamal, Sundar C
துல்கரின் `காந்தா' முதல் Edgar Wrightன் `The Running Man' வரை இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ!

புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இடம்பெறும் இந்த முயற்சி, புகழ்பெற்ற உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்கள் தயாரிப்பில் இப்படம் தயாராவது எனக்கு ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன. இந்த இரண்டு மாபெரும் அடையாளங்களுடன் எனது தொடர்பு நீண்ட தூரம் செல்கிறது, நான் எப்போதும் அவர்களை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன். கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் போற்றப்படும். அவர்கள் எனக்கு விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளனர், மேலும் நான் முன்னேறும்போது அவர்களின் உத்வேகத்தையும் ஞானத்தையும் தொடர்ந்து தேடுவேன்.

இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகிச் சென்றாலும், அவர்களின் நிபுணத்துவம் மிக்க வழிகாட்டுதலை நான் தொடர்ந்து நாடுவேன். இந்த மகத்தான படைப்பிற்காக என்னைக் கருத்தில் கொண்டதற்காக அவர்கள் இருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இந்தச் செய்தி இந்த முயற்சியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றியிருந்தால் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் உற்சாகத்தை உயர்த்தும் பொழுதுபோக்குகளைத் தொடர்ந்து வழங்குவேன் என உறுதியளிக்கிறேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி.  மேலும் உங்கள் அனைவருடனும் மேலும் நினைவுகளை உருவாக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Rajini, Kamal, Sundar C
10 கோடி வீயூஸ்.. ட்ரெண்டிங்கில் ஏ ஆர் ரஹ்மான்! மேடையில் மேஜிக் செய்த தனுஷ் | Tere Ishk Mein | ARR

இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விளக்குவதற்கான நேரடி காரணம் ஏதும் சொல்லப்படவில்லை. ஆனால் இப்போது அவர் நயன்தாரா நடிப்பில் `மூக்குத்தி அம்மன் 2' இயக்கி வருகிறார். மேலும் விஷால் நடிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கார்த்தி நடிப்பில் ஒரு படமும் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் இப்போது ரஜினி படம் இல்லை என்பது இப்போது உறுதியாகியுள்ளது. அடுத்து இந்தப் படம் யார் கைக்கு செல்லும் என்பதும் பெரிய எதிர்பார்பை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com