சக்கர வியூகம் 16 | கனவுப்பொழுது

“இனி நான் இருக்கும் இடத்தில் ஒரு நாய்க்குட்டியை அமரவைத்தாலும் போட்டு வைத்திருக்கும் பாதையில் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு எந்தக்குறையுமின்றி இந்த நிர்வாகம் சிறப்புற நடக்கும்”
சக்கர வியூகம் 16
சக்கர வியூகம் 16 புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 16 | கனவுப்பொழுது

தியானத்தில் இருப்பது போல கண்களை மூடிக்கொண்டு தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார். மீண்டும் அவர் முகத்தைப்பார்க்கும் துணிச்சலின்றி தலையைக் குனிந்து கொண்டேன்.

சில நிமிடங்களுக்குப்பிறகு அவர் கனைப்புக்குரல் கேட்டது.

“சந்நியாசத்தின் முழுமையை நோக்கி பயணிப்பதுதான் என் நோக்கமாக இருக்கிறது மிருணாளினி. உனக்குத்தெரியாதது ஒன்றுமல்ல. எனக்கென்று ஆசிரமங்கள் கிடையாது, சீடர்கள் கிடையாது, என் கொள்கைப் பிரச்சாகர்கள் என யாரையும் சேர்த்துக்கொள்வது கிடையாது. இறை எனக்கு அளித்ததை பிறருக்கும் அளிக்கும் கற்பித்தல் மட்டும்தான் எனக்கிடப்பட்ட ஒரே பணி. 

சக்கர வியூகம் 16
சக்கர வியூகம் 15 | பாலைவன நிலா

அதைத்தான் அதைமட்டுமேதான் ஊர் ஊராகச்சென்று செய்துகொண்டிருந்தேன், இளமையில். பிறகு மக்களின் துன்பங்கள் பெருகிக்கொண்டே போவதையும், வெறும் வேத, வேதாந்தக்கற்பிதங்கள் மட்டும் போதாதென்பதற்காக என்னால் இயன்ற அளவிற்கு எளிய மருத்துவங்கள் கற்றுக்கொண்டேன்.

மருத்துவங்களால் தீர்க்க முடியாத பிணிகளும் இருப்பதைத்தெரிந்துகொண்டு பணக்காரர்களை அணுகி உதவிக்கு வேண்டுகோள் வைத்தேன், அவர்களுக்கும் பிணிகள் இருப்பதைத் தெரிந்து கொண்டு அதன் பொருட்டு அரசியல் வாதிகளை அணுகினேன் இப்படி பல்கிப்பெருகிப் போய்க் கொண்டிருந்தாலும் என் அடிப்படையான சந்நியாச விரதத்தை நான் யார் பொருட்டும் விட்டுக்கொடுத்ததில்லை”

சக்கர வியூகம் 16
சக்கர வியூகம் 13 | பிங்க்ஸ்டார் பினாமி மற்றும் சக்கூன் சகோதரர்கள்

சட்டென்று இடைமறித்து “ஸ்வாமி, நான் சரியாகச்சொல்லவில்லையா என்று தெரியவில்லை. மீண்டும் சொல்கிறேன், உடற்தேவைகளைக்கொண்டு நான் சத்தியமாக உங்களை அணுகவில்லை. என் ஆன்மத்துணை ஒன்றைத்தேடித்தான்….” என்று சொல்ல முயன்றேன்.

“அது எனக்குப்புரிந்தது மிருணாளினி. ஆனால் இதன்பொருட்டு வரும் சிரமங்களையும் நான் மட்டுமேதான் எதிர்கொள்ளவேண்டும் என விரும்புகிறேன். இப்படி பல்கிப்பெருகியிருக்கும் என் கரங்களில் எதுவும் கறைபட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேனோ, அதே போன்றே என்னால் ஏற்படும் இடர்களுக்கும் யாரும் பொறுப்பாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்”

சக்கர வியூகம் 16
சக்கர வியூகம் 12 | இல்லம் நுழைந்த இறை

நீ ஒரு பெரிய புத்திசாலி, உன்னால் இந்த தேசம் அடைந்திருக்கும் மலர்ச்சிகள் சாதாரணமானதல்ல. உன் திட்டங்களில் பயனடைந்ததாலேதான் ஷேக்கிற்கு நீ பிரியமானவளாக இருக்கிறாய். உன்னால் ஆக வேண்டிய காரியங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. கர்ம யோகத்தில் திளைத்திருக்கும் உன் போன்ற நல் மனங்கள் உலகிற்கு மிகவும் அதிகமாகத்தேவை மிருணாளினி”

“ஸ்வாமி, இந்த நாடு சுபிட்சம் பெறுவது என் ஒருவளால் மட்டுமல்ல என்பதை நீங்களே அறிவீர்கள். இனி நான் இருக்கும் இடத்தில் ஒரு நாய்க்குட்டியை அமரவைத்தாலும் போட்டு வைத்திருக்கும் பாதையில் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு எந்தக்குறையுமின்றி இந்த நிர்வாகம் சிறப்புற நடக்கும். எனக்குத்தான் தனிமையின் நிழலில் இளைப்பாற மனமின்றி தட்டுத்தடுமாறி விழும் நிலை வரும் என அஞ்சுகிறேன்”

சக்கர வியூகம் 16
சக்கர வியூகம் 10 | மலர்வு

சற்றே யோசனையுடன் அமர்ந்திருந்தார். பிறகு சற்றே மெல்லிய குரலில், “சரி உனக்குப்புரியும் மொழியில் சொல்கிறேன், சட்டென்று திரும்பாதே. மெதுவாக, ஆராவாரம் ஏதுமின்றி தன்னிச்சையாக என் தலைக்குப்பின்னே சற்று தூரத்தில் இரண்டு சிவப்பு விளக்குகள் மின்னி மின்னி எரிகிறது உனக்குத்தெரிகிறதா பார்” என்றார்.

இது எதற்கு என்றே புரியாமல், கேள்விக்குறியுடன் மிக மெதுவாக ஒற்றைக்கண்ணை மட்டும் அவர் தலைக்கு மேலே நகர்த்திப்பார்த்தேன். உண்மைதான், வெகுதூரத்தில் வானத்தில் சிகப்புப்புள்ளிகள் இரண்டு கண்ணைச்சிமிட்டிக்கொண்டிருந்தன.

சக்கர வியூகம் 16
சக்கர வியூகம் 4 | நட்சத்திர வரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com