சக்கர வியூகம் 15
சக்கர வியூகம் 15 புதிய தலைமுறை

சக்கர வியூகம் 15 | பாலைவன நிலா

“உடல் சார்ந்த சிந்தனைகள் என்னைவிட்டு விலகிப்போய் பல நாட்கள் ஆகிவிட்டன ஸ்வாமி. நான் கேட்பதெல்லாம் என் ஆத்மாவிற்கான ஒரு பெருந்துணைதான். அந்த ஆத்மார்த்த துணையை இந்த லெளகீக, சுயநல உலகில் தேடுவது வீண் என்பதை கற்றுத்தெளிந்திருக்கிறேன்”

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 15 | பாலைவன நிலா

அன்றே அத்தனை நாள் இல்லாத வேகமும் எனக்குள் பிறந்திருந்தது. அன்றிரவு சொற்பொழிவு முடிந்தவுடன் என் மன விழைவை அவரிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

தலை நகரத்திலிருந்து சற்றே விலகி, பாலைவனத்திற்கு நடுவில் கட்டப்பட்டிருந்த ஒரு சொகுசுவிடுதியை அன்று மாலைக்கு முழுவதுமாய் என் பெயரில் பதிவு செய்திருந்தேன்.

அன்றைய சொற்பொழிவு முடிந்தபிறகு ”உங்கள் அனுமதியுடன் இரவுணவுக்கு என்னுடன் வெளியில் அழைத்துச்செல்லலாமா” என்று கேட்டிருந்தேன். ”பாலும், பழமும்தான் என் இரவுணவு, அதை எங்கே சாப்பிட்டாலென்ன மிருளானிணி, ஆயினும் உன் விருப்பத்தை தடை செய்யவில்லை” என்றார்.

சக்கர வியூகம் 15
சக்கர வியூகம் 14 | அமானுல்லாவும் ஆர்ஜேவும்

அந்த நெடிய பயணத்தில், வழக்கம்போல அவர் சீட்டைத்தளர்த்தி மெல்லிய “பவர் நேப்”பிற்குள் சென்றுவிட்டார். பூடமாக சில விஷயங்களை காரிலேயே சொல்லிவிடவேண்டும் என்று நினைத்திருந்தது நடவாமலேயே போயிற்று.

மென்காற்று தவழும் அந்த முன்னிரவில் நடுப்பாலையில் கட்டப்பட்டிருந்த அந்த ரிசார்ட்டின் வெளியே, வெள்ளை சாடினில் தனியே ஒரு சிறிய தனிக்கூடாரம் ஒன்றை அமைக்கச்செய்திருந்தேன். என்ன இருந்தாலும் காதலைச்சொல்லும் தருணமல்லவா? பதில் காயோ, பழமோ, ஏற்பாடுகளில் ஏன் குறை வைக்க வேண்டும் என்று வலிந்து செய்திருந்தேன். 

வண்டியை வேலேவில் நிறுத்தச் சொல்லிவிட்டு காலில் மணல் பதிய மெல்ல கூடாரத்திற்கு அழைத்துச்சென்று அவருக்கான இருக்கையை சரிசெய்து கொடுத்தேன்.

“கட்டடங்களிலிருந்து நகர்ந்து இயற்கையை நோக்கி வர வர நல்ல இதமான குளிர்காற்று” என்றார், தன் மேல்துண்டை சற்றே நன்றாக இழுத்து போர்த்துக்கொண்டபடி.

சக்கர வியூகம் 15
சக்கர வியூகம் 13 | பிங்க்ஸ்டார் பினாமி மற்றும் சக்கூன் சகோதரர்கள்

“உள்ளே வேண்டுமானாலும் செல்லலாம் ஸ்வாமி, நமக்கென அங்கே ஒரு சூட் இருக்கிறது” என்றேன்

”ம்ஹீம்” என்றார் பலமாக தலையை அசைத்தபடி. ஏதோ அவர் கண்கள் அலைபாய்ந்தபடியே இருந்தன. எங்கே, எப்படி ஆரம்பிப்பது என்ற கடுமையான குழப்பத்துடனேயே இருந்தேன்.

”மனித மனத்தின் விசித்திரத்தைப் பார்த்தாயா மிருணாளினி. இது போன்ற கொடும் பாலையிலெல்லாம் மனிதத்தடமே படக்கூடாதென்றுதான் இயற்கை இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்து வைக்கிறது. பரந்த கடலென்றும், பரந்த பாலையென்றும் தனியே வாழ்வை மனிதத்திலிருந்து கடத்தும் சிற்சில காரணிகளைக்கூட அவன் விடுவதில்லை. அங்கும் உள்ளே புகுந்து தன் ஆணவத்தை விரித்து வைக்கிறான் இல்லையா” என்றார் அவரே.

சக்கர வியூகம் 15
சக்கர வியூகம் 12 | இல்லம் நுழைந்த இறை

“ஆமாம் ஸ்வாமி, மனித மனத்தின் இயல்பை இன்னவென்றே அறிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நாள் அது தளும்பத்தளும்ப ஞானத்தைக்கொண்ட பெரிய ஞானி போல நடந்துகொள்கிறது, சில நாட்களில் மிதமிஞ்சிய மது உட்கொண்ட மனிதன் போல அஞ்ஞானத்தின் மிகச்சீரிய பாதையைத்தேடுகிறது, இன்னும் சில நாட்களிலோ ஒரு சின்னஞ்சிறிய குழந்தை போல அடம்செய்கிறது” 

“ஆஹா, என்னமாய்ப் பேசுகிறாய் மிருணாளினி. அடுத்த சொற்பொழிவிற்கு உன்னிடமே குறிப்புகள் எடுத்துக்கொள்கிறேன்” என்றார் வழக்கமான சிரிப்புடன்

“இல்லை ஸ்வாமி, இன்று ஒரு அடம்பிடிக்கும் குழந்தை மனதோடயேதான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். என்னை குழந்தை என்றெண்ணுவீர்களோ, குமரி என்றெண்ணுவீர்களோ அல்லது பித்து நிறைந்த பேரிளம் பெண்ணென என்றெண்ணினாலும் சரி, ஒரு குழப்பமான சிந்தனையோடு உங்களைத்தேடி வந்திருக்கிறேன். என் கேள்விக்கு ஒரு பதில் வேண்டும், தருவீர்களா?”

சக்கர வியூகம் 15
சக்கர வியூகம் 11 | முடிச்சு

மாறாத புன்னகையுடன் என் முகத்தை நோக்கினார். அவர் கண்களின் கனிவு என் ஆழ்மனதை அறுத்து உட்சென்று என் அங்கங்களையும், மனதையும் தாண்டி ஆன்மாவை அர்ச்சித்தது.

“மிருணாளினி, நீ எவ்வளவு உயரங்களுக்குச்சென்றாலும் இறையின் மகிமையை மறவாத அற்புதக்குழந்தை. கர்மயோகத்தில் திளைத்து உனக்கு அளிக்கப்பட்ட பணியை எந்தக்குறையுமின்றி நிகழ்த்தும் செயல் வீராங்கனை.

நான் என்றோ உனக்கு இட்ட பணியை இன்று வரையில் மறவாது சிந்தை வழுவாது சிரமேற்கொண்ட அற்புத சிஷ்யை. நமக்குள் பீடிகை உதவாது. சொல்.” என்றார்.

மேலண்ணத்தில் ஒட்டிய நாவை வலுவில் விலக்கி, இன்னும் கொஞ்சம் சற்று எச்சில் விழுங்கி சொல்லலானேன்.

“உண்மை ஸ்வாமி. உங்களை சந்தித்த அந்தக்கணம் என் வாழ்வை மாற்றியது. என் பயணத்திற்கு புதிய இலக்குகளையும், புதிய உத்வேகங்களையும் உங்கள் சந்திப்பு வழங்கியது. மிகப்பெரிய கர்மயோகியானேன். என் எல்லா வெற்றிப்படிக்கட்டுகளிலும் உங்கள் ஆசீர்வாதக்கருங்கல், உங்களால் நடப்பட்டிருக்கிறது. எதையும் உங்களைக் கேட்காமல் செய்து வந்த நான், எதிலும் உங்கள் நோக்கம் குலையாது நடந்து வந்த நான், இன்று உங்கள் சொல் கேளாமல் ஒன்று செய்திருக்கிறேன். அதை உங்களிடம் ஸ்தாபிக்கத்தான் இப்போது வந்திருக்கிறேன்”

சக்கர வியூகம் 15
சக்கர வியூகம் 10 | மலர்வு

புன்னகை மாறவில்லையெனினும், இப்போது அவரின் புருவங்கள் லேசாக நெறிவதைக்கண்டேன், சில விநாடிகள்தான், மீண்டும் அப்புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. தொடர்ந்தேன். இனிமேலும் அவர் கண்களைப்பார்க்கும் தைரியம் எனக்கில்லாததால், தலைதாழ்ந்து கொண்டு பேச ஆரம்பித்தேன்.

“எக்கணத்திலும் அன்பில் கட்டுறாதே என்று எனக்கு சொன்னீர்கள்தானே ஸ்வாமி, அதை வேதவாக்காக வைத்திருந்தேன். எத்தனையோ பெரிய கனவான்கள், நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் அறிவாளர்கள், உச்ச நட்சத்திரங்கள், உலகக்கோடீஸ்வரர்கள், தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் என ஏகப்பட்ட பேரை என் இளமை சில வருடங்களுக்கு முன்பு வரைகூட அசைத்திருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் என் மன நுனி கூட சீண்டாமல் காத்தது உங்களின் அந்த வேதவாக்கு. காதல் என்பது வாழ்வுக்கு ஒவ்வாத வேலை என்பது நான் பயின்று தெரிந்து கொண்ட விஷயமென்பது ஒன்று என்பது இன்னொரு காரணம்.

ஆனால் எதை அடக்குகிறோமோ, அது நம்மை இரண்டு மடங்காக்கி நம்மை வந்து நெருங்கும் எனும் இயற்கை விளையாட்டு என்னிலும் சற்றே தாமதமாக நிகழ்ந்ததிருக்கிறது ஸ்வாமி. யாரின் வாக்கை காப்பாற்ற இவ்விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேனோ, அவரை நோக்கியே இக்காதல் கணைகள் திரும்பப் பாயுமென்று நான் கனவிலும் எண்ணியிருக்கவில்லை. இயற்கை மிகத்தீவிரமாக என் காதலை உங்கள் பக்கமாகத்திருப்பியிருக்கிறது.”

அவரின் முகத்தைப்பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. வாக்கியங்களின் இடைவெளிகளின் இதய ஒலியை இன்னும் அதிகரிப்பதால், மிகுந்த வேகத்துடன் என் சொற்களை அவரை நோக்கி செலுத்திக்கொண்டிருந்தேன்.

“உடல் சார்ந்த சிந்தனைகள் என்னைவிட்டு விலகிப்போய் பல நாட்கள் ஆகிவிட்டன ஸ்வாமி. நான் கேட்பதெல்லாம் என் ஆத்மாவிற்கான ஒரு பெருந்துணைதான். அந்த ஆத்மார்த்த துணையை இந்த லெளகீக, சுயநல உலகில் தேடுவது வீண் என்பதை கற்றுத்தெளிந்திருக்கிறேன்.

சக்கர வியூகம் 15
சக்கர வியூகம் 9 | ராஜபாட்டை

மிகுந்த யோசனைக்குப்பிறகு என் வாழ்வை உங்களுடனான சந்நியாசத்திற்கு ஒப்படைப்பதாக முடிவு செய்திருக்கிறேன், உங்கள் ஆசிகளோடு, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் ஸ்வாமி” 

என்றேன், வாக்கிய முடிவில் தன்னை அறியாத பெருகி வந்த கண்ணீரோடு கைகூப்பி அவர் முகத்தை பார்த்தேன்.

எப்போதும் இருக்கும் இன்முகம் மறைந்து அவரின் இறுக்கமான பார்வை என் மீது பதிந்திருந்ததை உணரமுடிந்தது. அந்த தீர்க்கம் தாங்கவியலாது கண்களைத் தாழ்த்திக்கொண்டேன்.

சற்றே நீண்ட மெளனம், பாலைவனக்காற்றின் ஓசை மட்டும் ஒரு மெல்லிய கீற்றாக என் இதய ஓசையைக்கிழித்துக் கொண்டிருந்தது. அவர் என்ன மறுமொழி சொல்வாரோ என்று யோசனையும், அழுத்தமும் ஒருசேர அதனை இரட்டிப்பாக்கிக்கொண்டிருந்தது. நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்.

சக்கர வியூகம் 15
சக்கர வியூகம் 6 | அரசாங்க அழைப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com